First
@followers நல்லதே செய்தாலும் …
————-
சிலமாதங்களாக எனக்குள்ளே நிறைய விசயங்கள் ஓடிக்கொண்டே இருந்துள்ளன.
நமது அகமுடையார்மேட்ரி வழியாக இதுவரை 3800 வரன்களுக்கு மேல் பதிவு செய்துள்ளோம் 500 பேர் வரை திருமணம் நடந்துள்ளது. இப்போது 3300 வரன்கள் வரை உள்ளது. ஒவ்வொரு மாதமும் 40 முதல் 50 திருமணங்கள் நிச்சயமாகி கொண்டே தான் உள்ளது.
அகமுடையார்மேட்ரியில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட பெண் வரன்களை பதிவு செய்துள்ளோம். ஒருவரிடம் கூட 1 ரூபாய் கூட பணம் பெற்றதில்லை.
இவ்வளவு விசயம் செய்கிறோமே நல்ல மேட்ரிமோனி ஆகிற்றே ஆகவே நமது மேட்ரிமோனி பற்றி அகமுடையார்கள் எளிதாக கொண்டு சேர்த்து விடுவார்கள் என்று நினைத்தேன்.
ஆனால்
விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் தவிர நமது மேட்ரிமோனியை பற்றி மற்றவர்களிடம் கொண்டு சென்றவர் எவரும் இல்லை.
அதிலும் குறிப்பாக நம்முடன் நன்றாக பழகும் சமுதாயத்தில் ஆக்டிவாக இருக்கும் சிலருக்கு கூட வழியாக எந்த செலவும் இல்லாமல் திருமணம் நமது மேட்ரிமோனி வழியாக முடிந்துள்ளது. ஆனால் அவர்கள் கூட நமது மேட்ரிமோனியை பற்றி பேசவில்லை.
நமது மேட்ரிமோனி மூலமாக அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு திருமணம் முடிந்தது என்று கூட கூற வேண்டாம். இவ்வாறு ஓர் மேட்ரிமோனி உள்ளது இதன் சேவையை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூட இவர்கள் பதிவு கூட போடவில்லை. இன்னும் இந்த சமுதாயம் இன்னும் எத்தனை எத்தனை பாடங்களை கற்றுக்கொடுக்க காத்திருக்கிறதோ!
குறிப்பு:
பெரிதாக ஒத்துழைப்பு இல்லை என்று சொல்கிறீர்கள்!
இன்றைய நிலையில் பல வருடங்களாக மேட்ரிமோனி நடத்துபவர்களே 500 வரன்களுக்கு மேல் இல்லாத நிலையில்.
அகமுடையார்மேட்ரியில் மட்டும் எப்படி 3700க்கு மேல் வரன்கள் பதிவு அகமுடையார்மேட்ரியில் பதிவு செய்யப்பட்டது என்று உங்களுக்குள்ளேயே கேள்வி எழலாம்.
அதற்கு இன்டர்நெட் மார்கெட்டிங்(டிஜிட்டல் மார்கெட்டிங்கில் ) நாம் பெற்ற 15 வருடத்திற்கு மேலான அனுபவங்களும் ,இடையறாத நம் உழைப்பும் காரணம் . ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக அந்த விரல் விட்டு எண்ணக்கூடிய அந்த ஒரு சில நல்ல உள்ளங்களின் மேலான உதவியும் ஓர் பெரும் காரணம். அவர்களுக்கு நமது கோடான கோடி நன்றிகள்!
இதையெல்லாம் இனியாவது அகமுடையார்மேட்ரி பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ,தெரிந்த குருப்களில் பதிவு செய்து ப்ரமோட் செய்வீர்கள் என்பதற்காக பதிவு செய்யவில்லை (ஏனென்றால் ஏற்கனவே பதிய சொல்லி கேட்டும் நீங்கள் பதியவில்லை) சரி மனதில் இருப்பதை சொல்வோம் என்பதற்காகத்தான் இங்கு பதிவு செய்கின்றோம். ஒருவேளை மாறவேண்டியது நான் தானோ!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
👏👏
எப்போதும் இலவசமாக செய்யும் போது சிறிது மதிப்பு குறைவுதான்.காலம் சில விஷயங்களை நமக்கு கற்று கொடுக்கிறது.,என்று நம்பிக்கையுடன் செயல்படவும். தற்போதும் நீங்கள் நம்பர் 1.அகமுடையார் மேட்ரிமோனியில் தான்.
கூடிய விரைவில் 5000வரன்கள் பதிவு பெற்று அகமுடையார் சமுதாய வரன்கள் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலக அளவில் வரன்களில் no.1.,என்ற நிலையையும் அடையும்.
இலவசம் என்றாலே இளக்காரமாக பார்க்கும் உலகம்.
மாற்றி யோசியுங்கள்.
மாற்றம் ஒன்றே மாறாதது…
சிறந்த செயல் வாழ்த்துக்கள்
தூற்றுவார் தூற்ற போற்றுவார் போற்ற உங்களின் நற்செயல் மென்மேலும் பணி தொடர வாழ்த்துக்கள்