First
அரிய புகைப்பட செய்தி: இளவரசனுக்கு அடுத்த இடத்தில் அமர்ந்திருந்த அகம்படியர்களின் ஆசனம்
———————-
இலங்கையில் 14ம் நூற்றாண்டு பகுதியில் ஆட்சி செய்தவன் நிசாங்க மல்லன் எனும் சிங்கள அரசன் ஆவான்.
இலங்கையில் தமிழத்தை சேர்ந்த அகம்படியர்கள் மிக உயரிய அந்தஸ்தில் இருந்தனர் அவர்களுக்கு எல்லையற்ற பல அதிகாரங்கள் இருந்ததை சிங்கள இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் எடுத்துக்காட்டுகின்றன.
அதில் ஒன்றை எடுத்துக்காட்டுவது தான் நிசாங்க மல்லன் எனும் மன்னரின் அவையில் அகம்படியர்களுக்கு இடம் அளிக்கப்பட்டிருந்தது. இதில் குறிப்பிட வேண்டிய அம்சம் என்னவென்றால் அகம்படியர்களின் தலைவனுக்கு (அகம்படி அப்பவாரு -அகம்படியர்களின் தந்தை அல்லது தலைவன்) அரசனுக்கு அருகிலும் ,இளவரசனுக்கு சமமாகவும் அருகருகே இருக்கை அளிக்கப்பட்டிருந்தது ( பதிவின் படத்தில் 3ம் எண் காட்டி அடையாளம் காட்டி உள்ளது அகம்படியர் தலைவரின் இருக்கை ஆகும்)
அகம்படியர்களுக்கு அடுத்தே
சிங்கள தளபதிகள் (சேனாவி ரதுன்) , பிரதம மந்திரி மற்றும் வேறு அமைச்சர்கள், தமிழில் திருவாய் கேள்வி அறியப்படும் அரசனின் ஆணையை எழுதுபவர்கள் சமஸ்கிருதம் அல்லது பெங்காளியில் கஸ்தா என அழைக்கப்படுவர் என முக்கியமானவர்கள் அமர்ந்திருப்பார்கள்.
இவ்வாறு அகம்படியர்களின் தலைவருக்கு கொடுக்கப்பட்டிருந்த இருக்கையின் இருப்பிடம் அகமுடையார்களுக்கு அளிக்கப்பட்டிருந்த மிக உயரிய இடத்தை எடுத்துக்காட்டுகின்றது.
பட இணைப்பு 1: பதிவில் இணைக்கப்பட்டுள்ள முதல் படத்தில் அரசவை இருக்கைகள் எண் கொடுத்து அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
1- அரசனின் இருக்கை
2-இளவரசனின் இருக்கை
3- அகம்படியர் தலைவரின் இருக்கை
பட இணைப்பு 2: அரசவையின் வெளித்தோற்றம்.
மேலதிக தகவல்:
இது போன்ற அரண்மனைகள் மரத்திலான உத்திரம் (மேல்பகுதியால்) மேல்பகுதியால் அமைக்கப்பட்டிருக்கும் .காலவெள்ளத்தில் இந்த மேலே அமைக்கப்பட்டிருந்த உத்திர அமைப்பு அழிந்துவிட்டது.
இதை பற்றி இன்னும் விரிவாக ஆதாரங்களுடன் படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று படிக்கலாம்.
https://www.facebook.com/100063919813164/posts/487354700071853
விளம்பரம்:
அகமுடையார்மேட்ரி திருமண தகவல் மையம்
பெண் வீட்டாருக்கு 100% முற்றிலும் திருமண சேவை
3000க்கும் மேற்பட்ட அகமுடையார் வரன்கள்
வெப்சைட் மற்றும் அப்ளிகேசன் என இரண்டும் உள்ளது.
வரன் பதிவு செய்ய வாட்ஸ்அப் எண்: 0072005 07629
வெப்சைட்: agamudayarmatri.com
அப்ளிகேசன் டவுன்லோட் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
பதிவின் கீழே உள்ள வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்து வாட்ஸ்அப் நம்பருக்கு வரன் தகவல்களை அனுப்பி கூட வரன் பதிவு செய்துகொள்ளலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்