ஒரு சிலரின் தியாகங்களால் உயிர் பிழைத்திருக்கும் ஒருகோடி எண்ணிக்கையிலான சமுதாயம் …

Spread the love

First
ஒரு சிலரின் தியாகங்களால் உயிர் பிழைத்திருக்கும் ஒருகோடி எண்ணிக்கையிலான சமுதாயம்
———————–
“நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் அங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை” – என்று ஔவையார் பாடிய மூதுரை பாடல் என்று ஓர் பாடல் இருக்கும்.

அதில் இரண்டு முக்கிய கருத்துக்கள் உள்ளன.

1) நல்லவர் ஒருவர் இருந்தால் அவர்களுக்காக இந்த உலகத்திற்கே(ஊருக்கே) மழை பெய்கின்றது
2)நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல் வளர்வதற்கும் உதவுமாம் ( ஊருக்கு உழைக்கும் நல்லவர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன் , ஊரில் மற்றவர்களுக்கு பலனின்றி இருப்பவர்களுக்கும் கிடைக்குமாம்)

இந்த இரண்டு கருத்துக்கள் நமது அகமுடையார் சமுதாயத்திற்கு மிகச்சரியாக பொருந்துகின்றன.

பொருளை மட்டுமே தேடி ஓடும் இந்த உலகில்
காலத்தை இழந்து,இளமையை தொலைத்து,வீட்டிலும் வெளியிலும் ஏச்சு பேச்சுக்களுக்கு ஆளாகி , சிறைவாசம் கூட அனுபவித்து வரும் நிலையில் அதை எதையுமே கண்டு கொள்ளாமல் சமுதாயம் தொடர்ந்து அவரவர் வேலையை தொடர்ந்து கவனித்து வரும் நிலையில்

இதோ சமுதாயத்தில் கோடிக்கணக்கானோர் இருந்த போதிலும் சமுதாய பணிக்கு உண்மையாக உழைக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரால் தான் இந்த சமூகம் முற்றிலும் அழிக்கப்படாமலும் கரைந்துவிடாமலும் மானத்தோடு காப்பாற்றப்பட்டு வருகிறது.

ஆம் சிலர் மெழுகுவர்த்தியாக கரைந்து தான் சமுதாயத்திற்கு வெளிச்சத்தை காட்டி கரைந்துள்ளார்கள். இன்று வரை அது தான் நடக்கிறது.

தனிப்பட்ட அனுபவம்
———–
மற்றவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கே பல தனிப்பட்ட அனுபவங்கள். இவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது நாங்கள் நன்கு அறிந்தது தான். 15 வருடங்களாக சமுதாய பணியில் பயணித்து வருபவர்கள் இது அறியாததா என்ன?

ஆனால் நல்லதே செய்தாலும் அதை பயன்படுத்த அழைத்தாலும் அதையும் தட்டிக்கழிப்பவர்களாக கண்டும் காணாதவர்களாக தனி ஆவர்த்தனம் செய்வோம் என்று சொல்லாமல் சொல்லுவதையும் கவனித்தோம்.

மற்றவர்கள் சொன்னாலும் பரவாயில்லை ,
நம்முடன் கூட பயணிக்கும், நம் கொள்கைகளுடன் ஒன்றாக இருகப்பவர்கள் என்று நினைப்பவர்களுக்கு கூட இந்த சமுதாயம் ஒன்றாக வேண்டும் என்ற எண்ணமோ அதற்க்காக நமது முயற்சிகளை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணமோ துளியும் இல்லை என்பதை கடந்த சில நாட்களில் புரிந்து கொண்டோம்.

நிறைய சொல்லவேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் கேட்டு திருந்த போவது யாரும் இல்லை! திருந்தவேண்டியது நான் தான் என்பதை புரிந்து கொண்டு திருத்திக்கொள்ள முயல்கிறேன்.



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

  1. If we failed to stand together
    Who is going to stand sar.
    Tq

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo