First
அகம்படியர் எனும் அரசகுலத்தவர் -ஜெயமோகனின் வெண்முரசு நாவல் குறிப்பு
————————–
அகம்படியர்,கோயிற்றமர்,அகத்தார், மனைப்பெருஞ்சனம், உள்மனையார் போன்றவை அகமுடையாரை குறிக்க அன்று பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள். இவை எல்லாம் அரசகுலத்தவர் என்பதையே குறிப்பிடுகின்றது.இதற்கு பல்வேறு வரலாற்று உதாரணங்களை ஆதாரமாக காட்ட முடியும் என்றாலும் எளிமையாக புரிவதற்காக ஜெயமோகன் என்ற எழுத்தாளர் பயன்படுத்திய உதாரணத்தை இங்கு பதிவு செய்கின்றோம்.
ஜெயமோகன் எழுதிய வெண்முரசு நூலின் வண்ணக்கடல் 44 வது அத்தியாயத்தில்
அரசியர்களை மங்கலைகள் என்றும் அவர்களுக்கே அரசகுலத்தவர்க்குரிய மங்கலத்தட்டு ஏந்தும் அகம்படி உரிமை
உள்ளது கூறுவதை காணலாம். ஆகவே அகம்படியர் என்பவர் அரசகுலத்தவர் என்று குறிப்பிடுவதை தெரிந்துகொள்ளலாம்.
குறிப்பு:
மீண்டும் சொல்கிறோம். எஸ்.இராமச்சந்திரன், ஜெயமோகன் போன்றோரின் கருத்துக்களை நாம் ஏற்கனவே சொல்லி வரும் கருத்தோடு ஒப்பிட்டு பார்க்கவே இங்கு குறிப்பிடுகிறோமே தவிர இவர்களின் மற்ற எல்லா கருத்துக்களையும் அப்படியே ஏற்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஏனென்றால் என்னதான் நாம் ஆதாரத்தோடு விளக்கினாலும் நாம் ஏதோ தவறான அல்லது வேறு பொருள் அளிக்கிறோம் என்று யாரும் நினைத்துவிடக்கூடாது அல்லவா,அதற்காகத்தான் மற்றவர்களின் கருத்தையும் உதாரணமாக ஒப்பிட்டுக் காட்டுகின்றோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்