First
ஹைதரபாத் இந்தியாவுடன் இணைத்ததால் ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்து வைத்த இராமசாமி முதலியார்(அகமுடையார்)
———————————-
1947ம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த போது அதற்கு முன் பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்த ஹதராபாத்தை ஆண்ட நிஜாம்கள் இசுலாமிய மரபைச் சார்ந்து இருந்ததால் ஹதராபாத்தை இந்தியாவுடன் இணைக்காமல் தாங்கள் தனித்து ஆள வேண்டும் அல்லது பாக்கித்தானிடம் சேர வேண்டும் என விரும்பினர்.
இந்த நிலையில் இந்திய அரசு ஐதராபாத்துக்கு பொருளாதார தடைகளை விதித்து இடையூறு விளைவித்தது. இதைத் தடுக்கும் வண்ணம் ஒரு அசையா நிலை ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட முன்வந்தனர். ஆனால் நிஜாம்கள் ஒத்துழைக்க மறுத்ததால் இந்திய அரசு ஐதராபாத் அரசாட்சிக்குட்பட்ட மாநிலத்தின் மீது தனது இராணுவத்தை செலுத்தி முற்றுகையிட்டது. ஆபரேஷன் போலோ என்ற இந்த நடவடிக்கை 17 செப்டம்பர் 1948 அன்று வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்திய ஒன்றியத்தோடு இணைவதற்கான ஆவணத்தில் நிஜாமும் கையெழுத்திட்டார்.
ஆனால் விசயம் இத்தோடு நிற்கவில்லை ஐக்கிய நாட்டு பாதுகாப்பு சபைக்குக்கு இந்த பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது. சிக்கல் மிகுந்த அந்த நேரத்தில் ஐக்கிய நாட்டு பாதுகாப்பு சபைக்கு சென்று இந்தியாவின் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்து பிரச்சனையை தீர்த்தவர் தான் நமது இராமசாமி முதலியார்( அகமுடையார்) மேலும் தகவல்களை பதிவில் உள்ள படங்களில் காணுங்கள்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்