First
சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? ஜீலை 15 தேதியே கடைசி
————————————-
2024ம் வருடம் 10ம் மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த மாணவ மாணவியருக்கு:
சென்னையில் செயல்பட்டு வரும் அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் வருடா வருடம் 10ம் மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் பெற்ற அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருவது நீங்கள் அறிந்ததே.
அதேபோல் இந்த வருடத்திற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை பெற்று வருகின்றது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து 10ம் மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற அகமுடையார் சாதியை சேர்ந்த மாணவ மாணவியர் (தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களானாலும்) அவர்கள் சென்னை அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கத்தின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு ஜீலை 15ம் தேதி நான் கடைசி நாளாகும்.
விண்ணப்பிப்பதற்கு இப்பதிவின் முதல் படமாக கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து அதில் விண்ணப்பிபவரின் தகவல்களை நிரப்பி அதனுடன் விண்ணபிப்பவரின் மதிப்பெண் பட்டியல் (மார்க் ஷீட் ஜெராக்ஸ் ) சாதி சான்றிதழ் மற்றும் ஆதார் கார்ட் போன்றவற்றை இணைத்து
“மாமன்னர் மருதுபாண்டியர் மாளிகை ,3வது மெயின் ரோடு, கண்ணன் நகர்,மடிப்பாக்கம்,சென்னை -600091”
என்ற முகவரிக்கு கூரியலோ ,போஸ்டிலோ அனுப்ப வேண்டுகிறோம்.
இரண்டாவதாக கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பிப்பவரின் தகவல்களையும் நிரப்ப வேண்டுகிறோம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf3uZVwB9Dn5nslFOtyetRmZAlvcgHx9gKYB101JlIVJGPHVA/viewform
மேலும் விவரங்கள் அல்லது உதவி வேண்டுவோர் 8124126276 என்ற எண்ணில் தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.
அல்லது
A. Guna: 8124126276
T. Palpandiyan: 9003349426,
P. Venugopal: 9176820542
போன்ற எண்களிலும் தொடர்பு கொண்டு கேட்கலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
தனியார் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாமா உறவே