இராஜகுல அகமுடையார்கள் பற்றிய சில உண்மைகள்!
———————————–
இராஜகுல அகமுடையார்கள் தென் மாவட்டத்தின் பூர்வீக குடிகள் அல்ல. இராஜகுல அகமுடையார்கள் 1000 வருடங்களுக்கு முன் தஞ்சை,வடதமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் இருந்து தென் மாவட்டத்தில் குடியேறியவர்களே!
இராஜகுல அகமுடையார்களுக்கு சேர்வை பட்டம் என்பது 300-400 வருட காலத்தில் தான் வந்திருக்கிறது. அதற்கு முன் இராஜகுல அகமுடையார்களுக்கும் முதலி,தேவன்,பிள்ளை பட்டமே ஆதி சாதி பட்டமாக இருந்துள்ளது.
இதை சொல்கின்ற நானே தென் மாவட்டத்தில் வாழும் இராஜகுல அகமுடையார் தான்! இதையெல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் தென்மாவட்ட அகமுடையார்களில் இன்னும் சிலர் இன்னும் அறியாமையிலேயே உள்ளனர். மற்ற பகுதி அகமுடையார்களிடம் தாங்கள் தனித்தும் சிறப்பாக இருப்பதாக சில இராஜகுல அகமுடையார்கள் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை! வரலாற்றை புரட்டிப் பார்த்தால் இராஜகுல அகமுடையார்களின் பூர்விகமும் தொடர்பும் வடதமிழகம்,தஞ்சை பகுதிக்கே பின்னோக்கி செல்கிறது. அகமுடையாரில் மேலும் கீழும் என்று ஏதும் இல்லை. இவர்கள் அனைவரும் ஒரே மூலத்தில் இருந்தே கிளைத்ததாக வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
இதை பற்றி விரைவில் விளக்கமாக பதிவிட உள்ளோம்! அதற்குள் சந்தேகம் இருப்பவர்கள் 7200507629 என்ற அகமுடையார் ஒற்றுமை தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெளிவு பெறலாம். நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்