வாட்ஸ்அப் குருப்பில் திருமண வரன் தேடுவதில் உள்ள ஆபத்து! வாட்ஸ்அப் குருப்பில் நேற்றைய அனுபவம்.
—————————————-
அன்பிற்கினிய அகமுடையார் உறவுகளே!
இன்று நம்மில் பலர் எளிதாக இருக்கிறது, இலவசமாக இருக்கிறது என்பதற்காக வாட்ஸ்அப் குருப்களில் சென்று தங்கள் வீட்டு திருமண வரன் தகவல்களை பதிவிடுகின்றனர். ஆனால் அதில் உள்ள ஆபத்துக்கள் ,பிரச்சனைகள் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
வாட்ஸ்அப் குருப்களில் எல்லோரும் எல்லா வரன்களையும் ,எல்லா நேரத்திலும் பார்க்க முடிவதால் இடைத்தரகர்கள் குருப்களில் எளிதாக நுழைந்து வரன் தகவல்களை எடுத்து மற்ற புரோக்கர்களிடம் பரப்புகிறார்கள். போன்களில் தகவல்கள் இருப்பதால் தொடர்ந்து வரனின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் பல்வேறு நபர்களின் போன்களில் தொடர்ந்து இருக்கிறது. இதில் மோசமான விசயம் என்னவென்றால் திருமணமாகி வருடக்கணக்கான வரன் தகவல்களின் பெயரை சொல்லி பல்வேறு நபர்களிடம் பணம் வாங்குவதை அறிய முடிகின்றது. இதனால் குடும்பங்களில் நல்ல பெயர் ,அமைதி கெடுகிறது.
மேலே சொன்ன எச்சரிக்கை செய்தியை நான் உறுப்பினராக உள்ள நமக்கு மிகவும் நெருக்கமான வாட்ஸ்அப் குருப்பில் பதிவிட்டேன். பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அந்த குருப்பில் உறுப்பினராக இருந்த ஒருவர் வேறு ஒர் சாதி மணமகன் வரன் பதிவை அந்த வாட்ஸ்அப் குருப்பில் வெளியிட்டார்
ஆனால் இதை பார்த்த நான் உடனே அவரிடம் அதே குருப்பில் விளக்கம் கேட்டேன். அதற்கு அவர் மணமகன் வீட்டார் எனக்கு தெரிந்தவர்கள், அவர்கள் சாதி தடையில்லை என்று சொன்னதினால் இங்கு பதிவிட்டேன் என்றார்.
அவருக்கு நான் தனிப்பட்ட முறையில் போன் செய்து கேட்டேன். ஆனால் அவர் தவறு என்று சொல்லிவிட்டு போனை வைப்பதிலேயே குறையாக இருந்தார். பதிவிட்டவருக்கு எப்படியும் 55 வயதிற்கு மேல் இருக்கும் .ஆகவே அவருக்கு சாதி என்றால் என்னவென்று தெரியாமல் இருக்காது. இப்படி சாதி மாறி திருமணம் செய்வதால் மணமகள் வீட்டார் சாதி ரீதியாக ஏற்படும் சங்கடத்திலோ , பிரச்சனையிலோ மாட்டிக்கொண்டால் என்ன ஆவது? எதையுமே யோசிக்காமல் சிறு பிள்ளை போல் செய்கிறார். ஆனால் பெரும்பாலும் அவர் தரகராகவே இருக்க வேண்டும். அதனால் தான் என்னவோ இதை பற்றியெல்லாம் அவர் பெரிதாக கண்டுகொள்ளாமல் இங்கிருந்து வரன் எடுத்த்து சென்று யார் தலையிலாவது கட்டி பணம் பார்த்துவிடுவோம் என்று நினைத்துவிட்டார் போலும்.
இது ஏதோ ஒரு வாட்ஸ்அப் குருப்பில் ,எப்போதாவது நடக்கும் நிகழ்வு அல்ல. நான் புகழ்பெற்ற ஒர் வரன் தேடும் குருப்பிலும் மெம்பராக உள்ளேன். அந்த குருப்பில் இதுவரை 30 க்கும் மேற்பட்ட மாற்று சாதி வரன்கள் பதிவிடுவதை கவனித்து கண்டித்துள்ளேன்(ஆனால் அந்த பதிவை பார்க்கும் அட்மின்கள் அதை கண்டுகொள்ளவேயில்லை. பல நேரங்களில் இவ்வளவு கண்டிப்பு செய்த பிறகும் அதே வரன்கள் அதே குருப்பில் திரும்ப வருவதையும் பார்த்தேன்) .
இது ஒருபுறம் என்றால் மற்றொரு பக்கத்தில் கலப்பு திருமணம் செய்த வரன்கள் வருவதையும் பார்த்தேன் இதில் தந்தை அகமுடையார் அல்லாத வரன் வீட்டார் தகவல்கள் பதிவு செய்வதையும் குருப்களில் கவனித்திருக்கிறோம். இவ்வளவு சொன்னபிறகும் சிலர்
அதேவேளை நமது அகமுடையார்மேட்ரி பாதுகாப்பானது . அகமுடையார்மேட்ரியில் வரன் வீட்டார் மட்டுமே வரன் பதிவு செய்கிறார்கள் என்பதை பல்வேறு வகைகளில் உறுதி செய்கிறோம்.
மேலும் நம்மிடம் பதிவு செய்த வரனுக்கு திருமணமானதாகவோ அல்லது நிச்சயிக்கப்பட்டதாகவோ தெரியவந்தால் உடன் தகவல்களை நீக்கிவிடுகின்றோம் அதோடு அந்த தகவல்கள் மற்றவர்களிடம் இருப்பதில்லை.
ஆகவே உறவுகள் நமது அகமுடையார்மேட்ரியில் வரன் பதிவ் செய்து அப்ளிகேசன் அல்லது வெப்சைட்டின் வழியாக பாதுகாப்பாக வரன் தேட அழைக்கின்றோம்.
அதே போல் அகமுடையார்மேட்ரியில் பதிவு செய்ய வரும் அனைவரிடமும் சாதி சான்றிதழ் கேட்டு பெற்றே வரன் பதிவு செய்கிறோம். பல நேரங்களில் வரன் வீட்டாரிடம் பேசி அவர்கள் அகமுடையார்கள் என்பதை உறுதி செய்துகொள்கிறோம். இன்னும் சொல்லப்போனால் சாதி சான்றிதழ் அனுப்பதால் நூற்றுக்கணக்கான வரன்களை அகமுடையார்மேட்ரியில் இன்னும் அனுமதிக்கவில்லை. அதேபோல் நம்முடைய அகமுடையார் சாதியில் மாற்று சாதி சான்றிதழ் வைத்திருப்பவர்களையும் நாம் இங்கு அனுமதிப்பதில்லை ( அகமுடையார் சாதி சான்றிதழ் இல்லாதவர்கள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்வதில் தடை ஏற்படுத்தும் என்பதால் இந்த கடுமையான முடிவையும் எடுக்க வேண்டியுள்ளது)
ஆகவே இத்தனை நடைமுறைகளை கடைப்பிடிக்கும் நமது அகமுடையார்மேட்ரியில் வரன் பதிவு செய்து பலன் பெறுமாறு வேண்டுகிறோம்.
மேலும் ஏற்கனவே சொன்னது போல்
அகமுடையார்மேட்ரியில் ஆண் ,பெண் இருவருக்குமே இலவச வரன் பதிவு.
பெண் வீட்டாருக்கு 100 சதவீதம் இலவச திருமண சேவை( 1 ரூபாய் கூட கட்டணம் பெறுவதில்லை)
அகமுடையார்மேட்ரி வெப்சைட் லிங்க்: https://agamudayarmatri.com
அகமுடையார்மேட்ரி அப்ளிகேசன் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www
ஒருவேளை வெப்சைட் அல்லது அப்ளிகேசன் மூலமாக வரன் பதிவு செய்ய முடியவில்லை என்றால் 7200507629 என்ற அகமுடையார்மேட்ரி வாட்ஸ்அப் எண்ணிற்கு கூட வரன் தகவல்களை அனுப்புங்கள். வரன் பதிவு செய்து தருகின்றோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்