என் இனம் அகமுடையார் இனம் அதில் தேவர் என்பது ஒரு பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் பட்டப்பெயரே ஒழிய அது சாதி அல்ல அதை சாதியாக அறிவிக்க சொல்வது அப்பனின் இனிசியலை மாற்றுவதற்கு சமம்
இதனால் முக்குலம் என்று ஏற்கனவே ஏமாற்றப்பட்ட என் மக்கள் இன்னும் ஏமாற்றப்படுவார்கள்
எனக்கு என் சாதி முக்கியம் என் சாதியின் அடையாளம் முக்கியம் அது அகமுடையனாய் பிறந்த
அகமுடையன் அகமுடையனாகவே வாழட்டும்
சில தகுதியே இல்லாத அற்பர்கள் தங்களின் சுயலாபத்திற்காகவும் எப்படி மீத்தேன் ஹைட்ரோ கார்பனாக மாறியதோ அது போல முக்குலம் என்பதை தேவரினம் என்று மடை மாற்ற செய்யப் பார்கின்றார்கள் சேர்வை முதலியார் உடையார் துளுவவேளாளர் பிள்ளை தேவர் முதலான 153 பட்டங்களால் தமிழகம் முழுவதும் செறிவாய் வசிக்கும் அகமுடையர்களை சில மாவட்டங்களில் வசிக்கும் பிற இரு சாதிமக்களுடன் சேர்த்து தேவரினம் என்று அறிவிக்க நினைப்பது என்னமோ அவர்களுக்கு வேண்டுமானால்.இலாபமாக இருக்கும் அது அகமுடையர்களுக்கு நிச்சயம் நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்.
தேவரினம் என்று அகமுடையார் இனத்தையும் சேர்த்து அறிவிக்க சொல்லி நீதிமன்றம் சென்ற சுய நல கூட்டத்தை அகில இந்திய அகமுடையார் மஹா சபை கண்டிக்கின்றது..
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்