First
அகம்படி முதலிகளிற் -அழகியன் மெய் வேளைக்கார பல்லவரையன் (இரு சிறப்புகளை வழங்கும் கல்வெட்டு
——————————————————————
சோழநாட்டிலும் ,புதுக்கோட்டையிலும் பல்லவராயர் (அறந்தாங்கி பல்லவராயர் மற்றும் அரசு பல்லவராயர்) பட்டத்தோடு ஆண்டவர்கள் அகம்படியர் எனும் இன்றைய அகமுடையார் இனத்தவர் என்பது குறித்து நிரம்ப கல்வெட்டு ,சுவடி ஆதாரங்களை ஏற்கனவே அளித்துள்ளோம்.
இக்கருத்திற்கு வலுசேர்க்கும் விதமாக மற்றுமொரு கல்வெட்டு செய்தி இப்பதிவில்.
இக்கல்வெட்டில் வேளக்கார படை தலைவனாக இக்கல்வெட்டு நாயகன் குறிக்கப்பெறுவது மற்றொருமொரு தனிச்சிறப்பாகும்.
ஏனென்றால் சோழர்களின் வேளைக்கார படை குறித்து பல்வேறு சாதிகள் ஆதாரமே இல்லாமல் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் முதன்மை ஆதாரமான கல்வெட்டு சான்றுடன் உள்ள கல்வெட்டு செய்தி என்பதால் இது மிகவும் முக்கியமான கல்வெட்டு செய்தியாகும்.
இன்னும் சொல்லப்போனால் அகம்படியினர் சாதியினருக்கு பல்லவராயர்/பல்லவரையர் பட்டமும் , வேளைக்காரபடை என்பதை நிருபிக்கும் மற்றுமொரு சான்று இதுவாகும். சுருங்க சொல்லின் ஒரே கல்லில் இரு மாங்காய் என்பது இதுவும் எனலாம்.
சரி சற்றே கல்வெட்டு செய்தியை பார்ப்போம்!
காலம்: கி.பி 1162 சனிக்கிழமை
அரசன்: இரண்டாம் இராஜ இராஜன்
ஆதார நூல்: கல்வெட்டு ஆண்டறிக்கை 1964-1965 /1965-1966 ,மத்திய அரசு தொல்லியல் துறை வெளியீடு
கல்வெட்டு செய்தி: அகம்படி முதலி (அகம்படி இனத்தில் முதன்மையானவனான) அழகியன் மெய் வேளைக்கார பல்லவரையன் என்பவன் சாத்தன் சேதிராயன் என்பவனின் நலனுக்காக
ஜெயங்கொண்ட சதுர்வேதி மங்களத்தின் வடபகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய பிள்ளையார் கோவில் அயன பூஜை மற்றும் சிறப்பு விழாக்களின் போதும் சிறப்பு வழிபாட்டிற்கு நிலம் அளித்துள்ளான்.
பொதுவாக மத்திய அரசின் கல்வெட்டு ஆண்டறிக்கையில் கல்வெட்டு பற்றிய குறிப்பு மட்டுமே வெளியிடுவர். இந்த குறிப்பிட்ட கல்வெட்டின் முழுவரிகள் கிடைக்கப்பெற்றால் இன்னும் நிறைய செய்திகளை அறிந்து கொள்ள ஏதுவாகும்.
குறிப்பு:
இந்த கல்வெட்டு குறித்து 2017ம் வருடமே கண்டுபிடித்து விட்டோம்.ஆனால் அந்நாளில் நமது அகமுடையார் ஒற்றுமை பக்கம் அமைதியாக இருந்த காரணத்தால் நம் உறவு ஒருவரிடமும் கூறி அவர் பக்கத்தில் வெளியிட வைத்தோம். ஆனால் இப்போது நம் பக்கத்தில் சற்றே விரிவாக இக்கல்வெட்டு செய்தியை பதிவு செய்துள்ளோம்.
முன்னரே சொன்னது போல் இந்த கல்வெட்டு குறித்து 2017ம் வருடம் நூலில் இருந்து ஸ்கேன் செய்து வைத்தோம். ஆனால்
இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட இடம் இந்த நூலின் முன்பக்கத்தில் இருந்தது.அதை நான் ஸ்கேன் செய்யாமல் விட்டு விட்டதால் அதை தற்போது குறிப்பிட முடியவில்லை. அடுத்த முறை புத்தகத்தை தேடி எடுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கபப்ட்ட கோவில் மற்றும் இடத்தையும் மறக்காமல் குறிப்பிடுகின்றோம்.
அகம்படியினரின் பல்லவராயர் பட்டத்துடன் நிறைய கல்வெட்டுக்களை பதிவு செய்துள்ளோம். பார்க்காதவர்கள் அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தின் கீழ்கண்ட பக்கத்திலும் அதன் கமேண்ட் பகுதியிலும் பார்க்கலாம்.
https://www.facebook.com/agamudayarotrumai/posts/3804438142922881
இன்னும் தரவுகள் எடுத்து வைத்திருந்தோம் அவற்றையும் தேடி வருகின்ற நாட்களில் பதிவிடுவோம்.
மேலும் வேளைக்கார படையினராக அகம்படியினர் சென்றது குறித்து நிரம்ப தரவுகள் இலங்கை கல்வெட்டு மற்றும் நூல்களில் உள்ளன. அவற்றை பற்றியும் விரைவில் பதிவிடுகின்றோம்.
25 வருடங்களுக்கு மேலான வரலாற்று வாசிப்பில் பதிவிடுவதற்கு நிரம்ப வரலாற்று செய்திகளை உள்வாங்கியுளோம் அகமுடையார் வரலாறு குறித்து செய்திகளை சேகரித்துள்ளோம்.. ஆனால் வேளைபளு மற்றும் நேரமின்மை காரணமாக அவற்றை கோர்த்து வெளியிட முடியவில்லை.ஆனால் முடிந்தவரை விரைவில் செய்வோம்.
உறவுகளுக்கு வேண்டுகோள்
1000 வருடங்களுக்கு மேலான இந்த ஒவ்வொரு கல்வெட்டும் ஒரு வரலாற்று பொக்கிசம். ஆகவே
இச்செய்திகளை வெறுமனே படித்து விட்டு கடந்து சென்றுவிடாமல்
இச்செய்திகளை முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் சேர் செய்யுங்கள்
உங்களுக்கு தெரிந்த வரலாற்று செய்திகளை கமேண்டில் தெரிவியுங்கள்!
நன்றி! வணக்கம்!
படங்கள் இணைப்பு
படம் 1- குறிப்பிட்ட நூலில் உள்ள கல்வெட்டு செய்தி மட்டும்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்