இராசதுரோகியை தண்டித்த வரலாற்று நிகழ்வும் அகம்படியரான நாட்டாரும் அகம்படி வேளான் …

Spread the love

First
இராசதுரோகியை தண்டித்த வரலாற்று நிகழ்வும்
அகம்படியரான நாட்டாரும் அகம்படி வேளான் எனும் அகமுடைய வேளாளர் பற்றி குடிமல்லூர் கல்வெட்டு கூறும் செய்திகள்
——————————————————–
இன்று நாம் காணப்போகும் கல்வெட்டு அகமுடையார் சமுதாய வரலாற்றை சொல்கின்ற கல்வெட்டு என்பதோடு தமிழக வரலாற்றில் சுவாரஸ்மிக்க வரலாற்று செய்தியை சொல்கின்ற கல்வெட்டு என்றால் மிகையாகாது.

ஆம் ! இன்றைய வட ஆற்காடு மாவட்டம், வாலாஜா தாலுகாவில் அமைந்துள்ள குடிமல்லூர் எனும் கிராமத்தில் உள்ள பூமீஸ்வரர் கோவிலில் கண்டறியப்பட்ட பாண்டியர் காலத்து கல்வெட்டு செய்தி வழியாகவே இந்த அரிதான வரலாற்று நிகழ்வை அறிந்து கொள்ள முடிகிறது.

அப்படி என்ன அரிதான வரலாற்று நிகழ்வு நடந்தது என்பதை அறிய நாம் இன்றிலிருந்து 700 ஆண்டுகளுக்கு முன்பு, சரியாக சொனால் 696 வருடங்கள் வரலாற்றில் பின்னோக்கி கி.பி 1325ம் வருடம் செல்ல வேண்டும்.

அதாவது குறிப்பிட்ட அந்த குலசேகர பாண்டியன் காலத்தில் கொல்லத்தரையன் என்பவன் பாண்டிய மன்னுக்கு எதிராக இராசதுரோகம் செய்துள்ளான்.

அத்திபற்று ஆந்திநாடுபற்று நாட்டார் மற்றும் அகம்படியாருமான நாட்டார் தலைமையில் வலங்கை மற்றும் இடங்கை சாதியில் உள்ள அனைவரும் (மக்கள்) ஒன்றுகூடி இராசதுரோகம் செய்த கொல்லத்தரையனை கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளனர்.

இவ்வாறு மக்கள் அகம்படிய நாட்டார்கள் உள்ளிட்ட தலைவர்களுடன் திரண்டு வருகையில் குறிப்பிட்ட அந்த இராசதுரோகியானவன் திருக்கோவிலின் கோபுரத்தின் பகுதியில் ஒளிந்து கொண்டான் .

அவனை கொல்ல வேண்டுமென்றால் கோபுரத்தை இடிக்க வேண்டும் என்று மக்கள் முடிவு கட்டினர் ஆனால் இதற்கு கோவில் மாகேசுரர் தானத்தார் ,கைகோளர் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

உடனே நாட்டார்கள் அப்படி ஒருவேளை கோவில் கோபுரம் இடிக்கப்பட்டால் அதற்கு பதிலாக வெள்ளியிலே கோபுரம் கட்டவும் அதன் பூசைகள் உள்ளிட்டவற்றிற்காக குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிலங்களின் விளைச்சல் வருமானத்தை அளிப்பதாகவும் அதே போல் வணிகர்கள் விற்கும் மிளகு பொதி ஒவ்வொன்றிற்கும் அரை பணமும் ,எள் பொதி ஒவ்வொன்றிற்கும் அரைபணமும் , நெல் பொதி ஒவ்வொன்றிற்கும் அரைபணமும் தர வணிகர் மற்றும் செக்கார்கர்கள் சம்மதிக்கின்றனர்.

இந்த ஏற்பட்டை கோவில் பணியாளர்களிடம் கூறி சம்மதிக்க வைக்க்கின்றனர். இந்த நடைமுறையை சந்திராத்திவரை((சந்திர சூரியன் உள்ளவரை) நடத்துவதாக இடங்கை ,வலங்கை சாதியுள்ள்ளோர் சம்மதித்து அதற்கு அகம்படி வேளாளர்(அகம்படி வேளான்) மற்றும் பள்ளி வேளாளர்(பள்ளி வேளான்) உள்ளிட்ட தலைவர்கள் கல்வெட்டில் எழுதி உறுதி தந்துள்ளனர்.

இராசதுரோகிகளை தண்டிக்க மக்கள் வெங்குண்டெழுந்த நிகழ்வும் , அதற்காக கோவில் கோபுரத்தையை தகர்த்தாலும் பரவாயில்லை என்று கொண்ட முடிவும் வரலாற்றில் வேறு எங்கும் காணப்படாத நிகழ்வு ஆகும்.

சரி இப்போது கல்வெட்டில் நமது நம் சமுதாயம் குறித்து உள்ள செய்திகளை ஆராய்வோம்.

அகம்படி வேளாளர்
——————-
அகம்படி,அகம்படியர் எனும் இன்றைய அகமுடையார் சமுகத்தினர் கி.பி 8ம் நூற்றாண்டு ஆரம்பித்து நிறைய வரலாற்று செய்திகளில் வேளாளர் அடையாளத்தோடு தொடர்ந்து காணப்படுகின்றனர். இது குறித்து ஏற்கனவே முதன்மை வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டு ஆதாரங்களை ஏற்கனவே நிறைய வழங்கியுள்ளோம்.

இதே கருத்தை ஆழமாக நிரூபிக்கும் மற்றுமொரு ஆதாரமாக இந்த கல்வெட்டு செய்தி விளங்குகின்றது.

ஆம் இந்த கல்வெட்டு செய்தியிலும் அகம்படியர் சாதியினர் ஒரு காலத்தில் வேளான் மாந்தர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதையே இந்த கல்வெட்டின் இறுதியில் வரும் அகம்படி வேளான் எழுத்து என்ற வாசகம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ஏனென்றால் வேளான்/வேளார் என்பது இன்று புழக்கத்தில் உள்ள வேளாளன்/வேளாளர் என்பதன் கல்வெட்டு மொழியாகும்.

ஒருவேளை வேளான் என்பதை வேளாளன் என்பதற்கும் சம்பந்தம் இல்லையோ என்று சொல்லி சிலர் தவறாக சொல்லக்கூடாது என்பதானாலோ என்னவோ இந்த கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக இதே கல்வெட்ட்டின் தொடக்கத்தில் “அகம்படியரான நாட்டாரும்” என்ற வாசகம் வருகிறது. இது அகம்படியர்கள் வேளான் அமைப்பான சித்திரமேழி பெரியநாட்டு அமைப்பில் இணைந்திருந்ததை எடுத்துக்காட்டுகின்றது.

அகம்படி வேளான்,அகம்படியரான நாட்டார் என்ற இந்த இரண்டு வாசங்களும் அகம்படியர்கள் வேளாளர் அடையாளத்தோடு இருந்ததை ஆழமாக எடுத்துக்காட்டுகின்றது.

இன்றைய அகமுடையார் சமூகத்தினர் அன்று அகம்படி வேளான்,அகம்படி வேளாளர் என்று வேளாளர் அடையாளங்களோடு இருந்ததையும் இதுவே பின்னாளில் துளுவ வேளாளர் என்ற பெயரில் அகமுடையாரில் ஓர் பிரிவு உருவாக வித்திட்டது என்பதையும் ஆழமாக நிரூபிக்கும் சான்றாக இக்கல்வெட்டு விளங்குகிறது. எனினும் விரைவில் வெளிவர உள்ள அகமுடையார் துளுவ வேளாளர் ஒன்றே என்ற மின் நூலில் இன்னும் பல்வேறு ஆதாரங்களோடு இக்கருத்தை விளக்க உள்ளோம். அதை படிக்கும் போது அனைவருக்கும் இக்கருத்தில் தெளிவு கிடைக்கும்.

நன்றி
இக்கல்வெட்டு செய்தியை கண்டறிந்து இந்த செய்தியை ஆய்ந்து கட்டுரை வெளியிட நம் பார்வைக்கு அனுப்பிய அகமுடையார் அரண் ஒருங்கிணைப்பாளர்
திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நம் மனமார்ந்த நன்றிகள்!

ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டு தொகுதி பகுதி 41 ,கல்வெட்டு ஆண்டறிக்கை எண் 419/1905, வெளியீடு: மத்திய அரசு தொல்லியல் துறை.

மேலதிக தகவல்கள்
——————

வலங்கை சாதி தலைவர்களான அகம்படிய நாட்டார்கள்
———————————————–
குறிப்பிட்ட இந்த கல்வெட்டின் இறுதியில் அகம்படி வேளான்,பள்ளி வேளான் எனும் தலைவர்கள் உறுதிமொழி கொடுத்துள்ளனர்.

அகம்படியர் எனும் இன்றைய அகமுடையார் சாதியினர் வலங்கை சாதியினராகவும் , பள்ளி எனும் வன்னியர் சமூகத்தினர் இடங்கை சமூகத்தினராகவும் கல்வெட்டு மற்றும் செப்பேட்டு செய்திகளில் குறிக்கப்படுவதாலும் இக்கல்வெட்டு செய்தியில் வலங்கை ,இடங்கை சேர்ந்த சாதி மக்கள் அனைவரும் கலந்து கொண்டு அவர்கள் சார்பாக கல்வெட்டு செய்தியின் இறுதியில் அகம்படி வேளான், பள்ளி வேளான் என்பவர்கள் உறுதிமொழி கூறியிருப்பதால் அகம்படி வேளான் எனும் அகம்படிய வேளாளர் சாதியினர் வலங்கை சாதி தலைவர்களாகவும், பள்ளி வேளான் என்பவர் இடங்கை சாதி தலைவர்களாகவும் இருந்திருக்க வேண்டும்.

இராசதுரோகியை தண்டிக்கும் அதிகாரம் படைத்த அகம்படிய நாட்டார்
—————————————————–
கல்வெட்டு செய்தியில் குறிப்பிடப்படும் கொல்லத்தரையன் ராசதுரோகி,நாட்டு துரோகி என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இக்கல்வெட்ட்டில் பாண்டிய மன்னன் மெய்கீர்த்தி வருவதால் குறிப்பிட்ட கொல்லத்தரையன் பாண்டிய மன்னனுக்கும் பாண்டிய நாட்டுக்கும் எதிராக கொடும்குற்றம் செய்தவனாக இருக்க வேண்டும்.

கடைசி சோழ மன்னனான மூன்றாம் இராஜேந்திர சோழனின் காலமும் கி.பி 1279 ஆண்டோடு முடிவுற்றுவிட்டது . கடைசி சோழ மன்னரின் ஆட்சியும் முடிவுற்று 45 ஆண்டுகளுக்கு பிறகு கி.பி 1325ம் ஆண்டு இந்த கல்வெட்டு செய்தி வெட்டப்பட்டிருப்பதால் குறிப்பிட்ட கொல்லத்தரையன் சோழமன்னருக்கு ஆதரவாக பாண்டிய மன்னருக்கு எதிராக குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை. மேலும் கல்வெட்டு செய்தியிலும் இராசதுரோகம் என்பதை தாண்டி வேறு செய்திகள் கிடைக்கப்பெறததால் இவன் செய்த குற்றம் என்னவென்பதை அறிய முடியவில்லை.

எவ்வாறு இருப்பினும் கொல்லத்தரையன் செய்த குற்றம் பொறுக்க இயலாது என்பதாலேயே மக்கள் அனைவரும் திரண்டு கோவில் கோபுரத்தை இடித்தையாயினும் இவனை கொல்ல வேண்டும் என்று தீவிரம் காட்டியுள்ளது எனும் போது இவன் பாண்டிய மன்னனுக்கோ அல்லது பாண்டிய நாட்டுக்கோ கொடும் குற்றம் இழைத்திருக்க வேண்டும் என்பது தெளிவாக புரிகிறது.

மேலும் இதில் நாம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி என்னவென்றால் அகம்படியரான நாட்டார் (வேளான் ஊர் தலைவர்கள்)) இராதுரோகிகளை தண்டிக்கும் அளவிற்கு அதிகாரம் பெற்றிருந்ததை இந்த கல்வெட்டு செய்தி நமக்கு உணர்த்துகிறது.

வேளான்/வேளார் என்பது வேளாளன்/வேளாளர் என்பதை குறிக்குமா இல்லையா?
————————————————–
வேளான்/வேளார் என்பது இன்று புழக்கத்தில் உள்ள வேளாளன்/வேளாளர் என்பதன் பழைய புழக்கச்சொல் ஆகும். கல்வெட்டுக்களில் வேளாளர் என்போர் வேளான்/வேளார் என்றே நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை வேளான்/வேளார் என்பது வேளாளன்/வேளாளர் என்பதை குறிக்காது என்று எவரேனும் சொல்வார்களேயானால் அவர்கள் கல்வெட்டுக்களில் வரும் வேளான்/வேளார் என்று வரும் கல்வெட்டு நாயகர்களை வேளாளன்/வேளாளர் சாதியினர் என்பது அடையாளப்படுத்த கூடாது.
ஒருபக்கம் வேளான் என்பது வேளாளனை குறிக்காது என்று சொல்வது வேறு பக்கம் சென்று கல்வெட்டில் வரும் வேளான் நாயகர்களை தங்கள் இனம் என அடையாளப்படுத்துவது என இந்த பச்சோந்திகள் இடத்திற்கு இடம் நிறத்தை மாற்றிக்கொள்கின்றனர்.

பிரிவினை உண்டாக்க முயற்சிப்பவர்களின் முட்டாள்தனமான வாதமும் ,உண்மையும்
—————————————————
இன்றைய அகமுடையார் சமூகத்தினர் இரு வேறு முனைகளில் இருந்து பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.
ஒருபக்கம் தங்களை வேளாளர் என்று சொல்லிக்கொள்ளும் சில மாற்று சமூகத்தினர் அகமுடையாரின் உட்பிரிவான உண்மை துளுவ வேளாளர்களை அகமுடையார் சமுதாயம் அல்ல என்று சொல்லி பிரித்து தங்களுடன் இணைத்துக்கொள்ள பார்க்கிறார்கள்.

மற்றொரு பக்கம் முக்குலத்தோர் என்ற பெயரில் இருக்கும் கள்ளர்,மறவர்கள் தென் தமிழ்நாட்டில் இருக்கும் அகமுடையார்களுக்கும் ,வடதமிழகத்தில் இருக்கும் அகமுடையார்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி பிரித்து தென் தமிழக அகமுடையாரை தொடர்ந்து முக்குலத்தோர் கூட்டணியில் தொடரசெய்து பலன் பெற விரும்புகிறார்கள்.

மேற்கண்ட இருவருமே கள்ளகூட்டணி வைத்துக்கொண்டு அகமுடையார் சமூகத்தினரை பிரித்தாள பல்வேறு பொய்யான பரப்புரைகளை யூடிப் போன்ற தளங்களில் பரப்பி வருகின்றனர்.

அதற்கு இவர்கள் இருவரும் ஒற்றுமையோடு சொல்லும் பொய் என்னவென்றால் தென் மாவட்டத்தினர் அகம்படியர்களாம், வடமாவட்டத்தில் இருப்போர் அகமுடையார்களாம்! இரண்டும் வேறு வேறு சாதிகளாம்!

ஆனால் இந்த கூமுட்டையினர் அறியாத தகவல் என்னவென்றால் வடமாவட்டம்,தென்மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் , கர்நாடகா,ஆந்திரா, கேரளம் , இலங்கை போன்ற நாடுகளில் கிடைத்த கல்வெட்டு செய்திகள் அனைத்திலும் அகம்படியர்,அகம்படி என்ற சொல் பதிவாகிய்யுள்ளதே தவிர
அகமுடையார் என்பது சாதியாக பதிவாகவில்லை. இவ்வளவு ஏன் வடதமிழகமான வடஆற்காடு மாவட்டம் குடிமல்லூர் ஊரில் கிடைத்த இந்த கல்வெட்டு செய்தியில் கூட அகம்படி வேளான்,, அகம்படியரான நாட்டார் என்று தான் சாதி பெயர் பதிவாகியுள்ளதே தவிர அகமுடையார் என்பது சாதியாக கல்வெட்டில் எங்கும் அடையாளப்படுத்தப்படவில்லை.

தென் தமிழகத்தில் உள்ளவர் தான் அகம்படியர் என்றால் வடதமிழ்நாட்டில் காணப்படும் ஆயிரம் வருடம் முன்பான நூற்றுக்கணக்கான அகம்படியர் கல்வெட்டுக்கள் என்ன பொய்யா?

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பது போல் இந்த பொய்யர்களின் முகத்திரையை சான்றுகள் மூலம் தொடர்ந்து கிழித்தெறிவோம்!

அப்போது சூரியனை கண்ட பனிபோல உண்மை பொய்கள் உருக்கி உண்மை எனும் வெளிச்சம் எல்லா இடங்களிலும் பரவும்!

குறிப்பு:
மற்ற வேளைப்பளு, நேரமின்மை காரணமாக நிறைய செய்திகளை உடனே சொல்ல முடியவில்லை. ஆனால் சொல்வதற்கு நிறைய ஆதாரங்களுடன் செய்திகள் உள்ளன. அகமுடையார் வரலாற்று மீட்பு தொடரும்!

அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்திற்காக
மு.சக்திகணேஷ் சேர்வை (அகமுடையார்)

படம் இணைப்பு:
படம் 1 : கல்வெட்டு செய்தி குறித்து கல்வெட்டு ஆய்வாளர்கள் கொடுத்திருக்கும் ஆங்கில குறிப்பு
படம் 2,,3,4 : கல்வெட்டு செய்தி தற்போது உள்ள எழுத்து வடிவத்தில் ( ஆதாரம் : தென் இந்திய கல்வெட்டு தொகுதி 41 )
படம் 5: தென் இந்திய கல்வெட்டு தொகுதி 41 அட்டைப்படம்..







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo