உன்னி கேரளவர்மன் எனும் பூதலராம வர்மன் உண்ணிகுட்டி அகம்படிய இனத்தவன் என்று மறைந்த நாடார் சமூகத்தை சேர்ந்த தசரதன் எழுதியதை மேற்கோள் காட்டி முனைவர்.தாமரைப்பாண்டியன் எழுதி உலக தமிழராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட
கதைப்பாடல் சுவடி திரட்டும் பதிப்பும் நூலின் 32ம் பக்கத்தில் செய்தி உள்ளது.இறந்த தசரதன் அவர்கள் தன் சார்ந்த நாடார் சமூகத்தை உயர்த்த பல்வேறு வரலாற்று திரிபுகளை செய்தவர் இருப்பினும் இவர் நூல்களில் இவர் சமுதாயத்தை பற்றி முதல் நிலை ஆதாரமில்லாத பொய்யான புகழுரைகளை நிரப்பி அதனிடையில் சில சில மெய் செய்திகளையும் சேர்த்து எழுதுவார். அப்போது தான் நூல் உண்மை போல் தோன்றும் என்பதால் சிற்சில செய்திகளை தசரதனும் ,வரலாற்று அறிஞர் எஸ்.ராமச்சந்திரனும் இது போன்று அகம்படியர் சமூகத்தை குறிப்பிட்டு அவ்வப்போது தங்கள் நூல்களில் எழுதுவார்கள் அப்படி எழுதியதில் ஒன்று தான் இது. இருப்பினும் இச்செய்தியை இன்னும் ஆழமாக ஆராயவேண்டியுள்ளது.
இதில் இன்னொரு விசயம் என்னவென்றால் கி.பி 15–16ம் நூற்றாண்டை சேர்ந்த கணக்கன் கூட்டத்தார் செப்பு பட்டயத்தில் அகம்படியர்களே தென்காசி பாண்டியர்கள் பெயரில் ஆட்சி செய்தவர்கள். என கூறப்பட்டுள்ளது.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்