கவர்னரின் உரை உருவாக்கிய பரபரப்பு-நாம் செய்ய வேண்டியதென்ன?
———————
கடந்த திங்கள்கிழமை திருச்சியில் ஆளுநர் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற மருதுபாண்டியரின் ஜம்புத்தீவு பிரகடனம் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பேசிய பேச்சுக்கள் பரபரக்குள்ளாகியது நீங்கள் அறிந்ததே!
ஒருபக்கம் மருதுபாண்டியர்கள் உள்ளிட்ட விடுதலை வீரர்களை மக்களிடம் கொண்டு சேர்க்க திராவிட கட்சிகள் பெரிய முயற்சி ஏதும் எடுக்கவில்லை என தமிழக
ஆளுநர் குற்றச்சாட்டினை முன் வைத்தார்.
அதேநேரம் திமுக சார்பில் டி.ஆர்.பாலு அவர்கள் , விடுதலை போராட்ட வீரர்களை திமுக மிகவும் கெளரவபடுத்தியதாக ஓர் விளக்கம் கொடுத்தார்.
யார் செய்திருக்கிறார்கள்? யார் செய்யவில்லை என்பது எல்லாம் அடுத்த விடயம். ஆனால் இப்போது நாம் செய்ய வேண்டியது இந்த பரபரப்பை பயன்படுத்தி நமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வது தான்.
இருநாட்களாக இது பரபரப்பாக பேசப்பட்டது. ஆகவே நம்மவர்கள் இந்த பரபரப்பை பயன்படுத்தி நமது கோரிக்கைகளை கொண்டு சேர்த்திருக்கலாம் ஆனால்4 நாட்களுக்கு மேல் ஆகியும்
நம் அகமுடையார் சமுதாய தலைவர்களோ, மக்களோ இதை இந்த விவாதப்பொருளை பயன்படுத்தி தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்ள முனையவில்லை என்பது பெரும் வேதனை. இயக்கங்களுக்கும் சரி, சமுதாய மக்களுக்கும் சரி அரசியல் புரிதலில் முன்னேற்றம் வேண்டுமென்பதையே இது காட்டுகிறது.
இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டியும் ,விளக்கம் கொடுத்து வரும் நிலையில்
மருதுபாண்டியர்கள் ஆண்ட சிவகங்கையில் மருதுபாண்டியர்களுக்கு சிலை இல்லை என்பதை விளக்கி சொல்லியும்
மாநில அரசிடம் சிவகங்கையில் மருதுபாண்டியர்களுக்கு சிலை வைக்க கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.மருதுபாண்டியர் பற்றி தமிழ்நாடு பாடத்திட்டம் ,டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கேள்விகளை அதிகம் உருவாக்கி விழிப்புனர்வு ஏற்படுத்த வேண்டும்
அதேபோல் மத்திய அரசிடம் மத்திய அரசின் கல்வி பாடத்திட்டத்தில் மருதுபாண்டியரின் விடுதலை போராட்டம், ஜம்பு தீவு பிரகடணம் பற்றியும், யுபிஎஸ்சி ,எஸ்எஸ்சி ,நீட், போன்ற பல்வேறு தேர்வுகளில் கேள்விகளை உருவாக்கி விழிப்புனர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்க வேண்டும்.
இதற்கு டேக் ஒன்றை உருவாக்கி டிவிட்டரில் டிரென்ட் செய்யலாம்.
நாளை 27ம் தேதி இதை செயல்படுத்தினால் இதை செய்ய இயலும்.
ஆகவே ஒற்றுமையாக இருந்து நமது கோரிக்கைகள் வெல்ல இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலதிக கருத்து:
என்னை பொறுத்தவரை சிலை வைப்பது என்பது மிகவும் முக்கியமானது ஆனால் சமுதாயத்திற்கான ஒட்டும் மொத்த கோரிக்கைகளில் இது மிகவும் சிறிய முன்னெடுப்பு தான்.ஆனால் அதைக்கூட நிறைவேற்ற முடியாத நிலையில் தான் நமது அரசியலில் நமது அங்கிகாரமும் ,சமுதாய ஒற்றுமையிலும் நம் நிலை இருப்பதை உணர முடிகின்றது. நாம் நிறைய தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்