துளுவ வேளாளர் என்போர் அகம்படியரின் ஒரு பிரிவினரே -விடுபட்ட விளக்கம் ———–…

Spread the love

First
துளுவ வேளாளர் என்போர் அகம்படியரின் ஒரு பிரிவினரே -விடுபட்ட விளக்கம்
—————————————————————
அகமுடையார் சாதியின் ஒரு பிரிவாக இருக்கும் துளுவ வேளாளர் என்போர் அகமுடையார் சாதியின் ஒரு பிரிவு என்பதை கழுகுமலையில் கிடைத்த 8ம் நூற்றாண்டை கல்வெட்டை மேற்கோள் காட்டி சில நாள் முன் விளக்கியிருந்தோம்.

அதாவது நடுகல்லில் குறிக்கப்படும் வீரன் ” உள்வீட்டு கோயிற்சேவகன் பூந்தமல்லி வினையன் தொழு சூரன் ” என்பதில் ” உள்வீட்டு கோயிற் சேவகன்” என்பது அகம்படியர்களை குறிக்க பயன்படும் அதே வார்த்தையாகும் அதாவது உள்வீட்டு சேவகன்(அரண்மனையை சேர்ந்த போர்வீரன்) என்பதையும், இந்த வீரனும் தென் மாவட்ட அகம்படியர்களை போலவே அரசனின் கோட்டையை பாதுகாக்கும் பணியில் உயிரிழந்த செய்தியையும் குறிப்பிட்டிருந்தோம்.

அகமுடையார்கள் பட்டங்கள், தூர இடைவெளி கடந்து ஓன்று சேர்ந்துவிடக்கூடாது ,தங்கள் வெள்ளாட்டு கூட்டத்துடன் இருக்க வேண்டும் அப்போது தான் தமிழ்நாட்டில் அந்த வெள்ளாடுகளின் எண்ணிக்கை அதிகமாக தெரியும் என்று நினைத்த வெள்ளாடுகள் வழக்கம் போல காழ்புனர்ச்சியால் சம்பந்தா சம்பந்தமில்லாமல் நமது பதிவில் கமேண்ட் வடிவில் தங்கள் காழ்புனர்ச்சியை கொட்டியிருந்தார்கள்.

பெரும்பாலனாவர்கள் அர்த்தமில்லாமல் உளறி இருந்தாலும் ஓருவர் மட்டும் கேட்ட கேள்வி சரியாக இருந்தது. அதாவது நடுகல்லில் வரும் ” உள்வீட்டு கோயிற்சேவகன் பூந்தமல்லி வினையன் தொழு சூரன் ” என்பதில் தொழு சூரன் என்பதற்கும் துளுவ வேளாளருக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வியை எழுப்ப்பியிருந்தார்.

கேட்டவன் கேவலமானவனாக இருந்தாலும் கேட்ட கேள்வி நியாயமானதே!
ஏனென்றால் இது நம் அகமுடையார் உறவுகளுக்கும் இந்த கேள்வி எழுந்திருக்கலாம்! எழுந்திருக்க வேண்டும்.

கேள்வி நியாயமாக இருந்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டியது நம் கடமை அல்லவா!

முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்!

இதுவரை கிடைத்துள்ள ஆவணங்கள் படி
துளுவ வேளாளர் என்ற பெயர் 300 வருடங்கள் வரை மட்டுமே முன்னதாக செல்கிறது. ஆகவே அதற்கும் முன்பு இவர்கள் தொழுவ வேளாளர் என்றே ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதை ஏதோ நானாக சொல்லவில்லை.
தமிழகத்தின் மூத்த வரலாற்றிஞர் சரித்திர செம்மல் ச.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
தொல்லியல் நோக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் என்ற நூலில்
துளுவ வேளாளர் என்போர் தொழுவ வேளாளர் என்று ஆவணங்களில் குறிப்பிடப்படுவதையும் அகம்படி முதலிகள் என்று அழைக்கப்பட்டதையும் குறிப்பிடுகின்றார்.

ஆதாரம்: நூல்: தொல்லியல் நோக்கில் காஞ்சிபுரம் மாவட்டம், பக்கம் எண்கள் 25

தமிழகத்தின் மிக நம்பிக்கை வாய்ந்த வரலாற்றிஞரான
சரித்திர செம்மல் ச.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பல்வேறு ஆவணங்களை பார்த்த பின்பு அதன் அடிப்படையில் தான் இக்கருத்தை தெரிவித்துள்ளார் என்பதை தாண்டி ச.கிருஷ்ணமூர்த்தி அவர்களே துளுவ வேளாளர் பிரிவை சேர்ந்தவர் என்பதால் தன்னுடைய முன்னோர் தகவல்கள் வழியாகவும் இதை தனிப்பட்ட முறையில் உறுதி செய்த பிறகே தன்னுடைய நூலில் எழுதியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்றும் கூட வடதமிழ்நாட்டில் இன்றும் வாழும் துளுவ வேளார்களின் நில,வீட்டு பத்திரங்கள் தொழுவ வேளாளர் என்ற பெயரையே கொண்டுள்ளன. ஒன்றல்ல, இரண்டல்ல , ஆயிரக்கணக்கான பத்திரங்கள் இதே பெயரிலேயே உள்ளன.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட ” மேல்பாடி” வரலாற்று ஆய்வு நூலில்
துளுவ வேளாளர் என்போரின் உண்மை பெயர் தொழுவ வேளாளர் என்பதையும் இது கால்நடை வளர்போடு சம்பந்தப்பட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். ஆகவே துளுவ வேளாளர் என்பவர்களின் முன்னர் பெயர் தொழுவ வேளாளர் என்பதே உண்மை.

அவ்வளவு ஏன் , தமிழக சாதிகளின் பட்டியலில் அகமுடையார் துளுவ வேளாளர் ஒரே எண்ணில் இருப்பதும் ,தமிழக அரசு துளுவ வேளாளர் என்பதை துளுவ அல்லது தொழுவ வேளாளர் என்று இச்சாதியை குறித்திருப்பது துளுவ வேளாளர் என்ற இந்த பெயர் தொழுவ வேளாளர் என்று முன்பு அழைக்கப்பட்டதையும் ,இன்றும் வழக்கத்தில் இருப்பதையும் காட்டும்.

தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இதை உறுதிப்படுத்த விரும்பவர்கள் கிழே உள்ள லிங்கை கிளிக் செய்து சென்று தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் இதை பார்க்கலாம்.

https://www.bcmbcmw.tn.gov.in/bclist.htm

ஆவணங்கள் நிறைய உள்ளன இணைப்பதற்கு ஆனால் கட்டுரை நீண்டு கொண்டு சென்றாலும் நிறைய பேர் படிக்க மாடீர்கள்.

நிறைவாக ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்!

இன்று துளுவ வேளாளர் என்று அறியப்படுபவர்கள் தொழுவ வேளாளர் என்ற பெயரிலேயே அறியப்பட்டுள்ளனர். அதற்கும் முன்பு தொழுவை பாதுகாக்கும் வீரர்களாக இருந்துள்ளனர் என்பது 8ம் நூற்றாண்டை சேர்ந்த கழுகுமலை நடுகல் செய்தி வழியாக தெளிவாக தெரிகிறது.

ஏற்கனவே பதிவிட்ட பதிவுகளை பார்க்காதவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அதை படிக்கலாம்.
https://www.facebook.com/agamudayarotrumai/posts/pfbid02te8cBptJGPocmZFFuqmw7s5L5Zfethyzo4MKTB8Xc3KCJs3W8m5USE5io1ho5nsal?__cft__[0]=AZWUx2dIaXLY79JIXUtdxP83RrOdWoqjMVmTWC-x5CqmHlkJAg7UcKHaaOk9ylN5WyypTCkWdmNPS9YKef0D0C9toWpmik5_SuEvqwVqZ7uPKHDdjFKOqg3cZcZMh0gY0TgnUGYvezm2UXr4LFmbiOaPBU2LfY2z8sAnXbfc2Xm_dTO0bJ1U1CSR6swgLjrwHfI&__tn__=%2CO%2CP-R

https://www.facebook.com/agamudayarotrumai/posts/pfbid02sNdg8CJsdgwUAzPF3g2YSWaUQG93T7dYDChVUZA7ABQqs3AaAzFycu2qpbwyVBjnl?__cft__[0]=AZWUx2dIaXLY79JIXUtdxP83RrOdWoqjMVmTWC-x5CqmHlkJAg7UcKHaaOk9ylN5WyypTCkWdmNPS9YKef0D0C9toWpmik5_SuEvqwVqZ7uPKHDdjFKOqg3cZcZMh0gY0TgnUGYvezm2UXr4LFmbiOaPBU2LfY2z8sAnXbfc2Xm_dTO0bJ1U1CSR6swgLjrwHfI&__tn__=-UK-R

இணைப்புகள்
1,2- நூல்: தொல்லியல் நோக்கில் காஞ்சிபுரம் மாவட்டம்
3,4,5- மேல்பாடி, தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடு
6-தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் சாதி பட்டியல்

குறிப்பு:

துளுவ வேளாளர் குறித்து எழுத நிறைய இருப்பதால் பிரித்து பிரித்து எழுதி வருகின்றேன் அப்படி எழுதுவதால் சென்ற பதிவில் துளுவ வேளாளரின் முன்னர் பெயர் தொழுவ வேளாளர் என்பதை குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். பிரித்து பிரித்து எழுதுவதால் சில நேரம் தொடர்பு அறுந்துவிடுகின்றது. இந்த தூர இடைவெளியால் தான் இன்று அகமுடையார் இனமும் தொடர்பற்று அவர்களுடைய உறவு சங்கிலி அறுந்துள்ளது.ஆனால் இணையம் வளர்ந்துள்ள இன்றைய காலத்தில் வரலாற்றை படித்து உணர்பவர்கள் இந்த இடைவெளியை கடந்து ஒன்றினைகிறார்கள் ,ஒன்றினைவார்கள்.

மேல்பாடி ஆய்வு நூல் எழுதியவர்கள் கால்டை வேளான்மை என்று மட்டும் எழுதி நிறுத்திவிட்டார்கள். அவர்கள் இந்த கழுகுமலை தொழு சூரன் நடுகல் செய்தி அவர்கள் கவனத்திற்கு வந்திருந்தால் மேலே சொன்ன ஆவணங்களுடன் ஒப்பிட்டு கால்நடைகளை பாதுகாக்கும் வீரர்களாக (தொழு சூரர்) இருந்தவர்களே பின்னாளிள் தொழு வேளாளர் என்ற அடையாளத்துடன் வந்தார்கள் என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுருப்பார்கள் .இருக்கட்டும் இதை நாம் வரலாற்றஞர்களின் பார்வைக்கும்,ஆய்வுக்கும் கொண்டு செல்வோம்.

துளுவ வேளாளர்களை தொழுவ வேளாளர் என்று குறிக்கும் பத்திரங்கள்,செப்பேடுகளை திரட்டிக்கொண்டுள்ளோம். அதை திரட்டி முடித்தவுடன் அதையும் தனிப்பதிவாக வெளியிடுவோம்.

அதே வேளை உங்கள் விட்டு நிலப்பத்திரங்களில்
தொழுவ வேளாள்ளர் என்று இருக்குமானால் அப்பத்திரத்தில் தொழுவ வேளாளர் என்று சாதி பெயரை குறிப்பிடும் பத்திரத்தின் முன்பக்கதை மட்டும் கமேண்டில் இணைக்க வேண்டுகிறோம். அல்லது எங்களுக்கு இன்பாக்ஸ் செய்தியாக கூட அனுப்பலாம். பத்திரத்தின் குறிப்பிட்ட பக்கத்தை மட்டும் நீங்கள் வெளியிடுவதால் இதில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இருக்காது.

அதேநேரம் ஆவணங்களை பொதுவில் வெளியிட விரும்பாதவர்கள் எங்களுக்கு பத்திரத்தின் முதல் பக்கத்தை மட்டும் இன்பாக்ஸ் வழியாக அனுப்பலாம். அவற்றை பொதுவில் வெளியிட மாட்டோம். அதே நேரம் சந்தேகம் இருப்பவர்களுக்கு மட்டும் நேரில் காண்பிப்போம்.

அடுத்து துளுவ வேளாளர் அகமுடையாரின் ஒர் பிரிவு என்பதற்கான பல்வேறு சான்றுகளை தொடர்ந்து வெளியிடுவோம். உண்மையான துளுவ வேளாளர், அகமுடையார்கள் இப்பதிவு குறித்து தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை இப்பதிவில் கேட்கலாம் அதற்கு நாங்கள் நிச்சயம் பதிலிடுவோம்.

#துளுவவேளாளர்
#துளுவவெள்ளாளர்
#துளுவர்
#துளுவன்
#தொழுவவேளாளர்
#தொழுவவெள்ளாளர்
#துளுவமுதலியார்
#துளுவபிள்ளை
#துளுவநாயக்கர்
#thuluvavellalar
#thuluvan
#thuluvar
#thuluvamudaliar
#thuluvapillai







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo