அகம்படி முதலிகளில் வடுவன் திருவாலி சீவலப்பன்-தேனி அருகே புதிய கல்வெட்டு கண்டுபிட…

Spread the love

First
அகம்படி முதலிகளில் வடுவன் திருவாலி சீவலப்பன்-தேனி அருகே புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு
—————————————–

Tamilagamnews.com வெப்சைட்டில் வரலாற்று செய்திகளை சேர்ப்பதற்காக பிரபல நாளிதழ்களின் செய்திகளை ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில் தேனி அருகே அகம்படியர் கல்வெட்டு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்ததை கண்டறிந்தோம்.

இந்த கல்வெட்டு வேறு எந்த கல்வெட்டு நூலிலும் பதிவு செய்யப்படாத கல்வெட்டு ஆகும்.

அதாவது இன்றைய தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கோட்டூர் பஸ் நிலையம் அருகே சித்திவிநாயகர் கோவில் உள்ளது.
இதன் சுற்றுச்சுவர் பகுதியில் 2 கல்வெட்டுகள் வைகை தொல்லியல் பண்பாட்டு கழக நிறுவனர் பாவெல் பாரதி தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்து ஆய்வு செய்தனர்.

அதில் ஓர் கல்வெட்டு அகம்படிய இனத்தவர் செய்த தானத்தை குறிக்கும் கல்வெட்டு என அறிய முடிந்தது.

குறிப்பிட்ட இந்த கல்வெட்டு 31 அங்குலம் நீளமும், 17 அங்குலம் அகலமும், 9 அங்குலம் கனமும் கொண்டுள்ளது.

கல்வெட்டு எழுத்தமைதி அடிப்படையில் இது கி.பி 13ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு செய்தி என்று இவர் அறிவித்துள்ளார்.

எழுத்தமைதியும் சரி அதில் உள்ள பெயர் அடையாளத்தை நாம் கவனிக்கையில் இது உண்மை தான் என்று தெரிகிறது அதை பின்னர் விளக்குவோம்.

சரி முதலில் கல்வெட்டு செய்தியை காண்போம்
இக்கல்வெட்டு செய்தியை , அளநாட்டைச் சேர்ந்த மாதேவநல்லூரில் தென்னடை பிரானார் கோவில் அகம்படி முதலிகளில் வடுகன் திருவாலி சீவலப்பன் என்று இக்கல்வெட்டு கண்ட பாவெல் பாரதி என்பவர் படித்துள்ளார் ( கல்வெட்டு படித்ததில் நமக்கு வேறுபாடு உள்ளது என்றாலும் முதலில் இவர் படித்ததை பார்ப்போம்)

இவர் படித்துள்ள விவரத்தின் படி பார்த்தால் அளநாடு என்று அழைக்கப்பட்ட இன்றைய தேனி பகுதியில் உள்ள மாதேவநல்லூரில் தென்னடை பிரானார் கோவிலுக்கு அகம்படி இனத்தை சேர்ந்தவர்களில் முதல்வன்(தலைவனான) வடுகன் திருவாலி எனும் ஊரை சேர்ந்த (சிதம்பரம் அருகே உள்ள திருவாலி எனும் ஊரை சேர்ந்த() சீவலப்பன் ஏதோ கொடையை வழங்கியுள்ளார் (கல்வெட்டை முழுமையாக படிக்காததால் இச்செய்தியை அறிந்து கொள்ள முடியவில்லை)

இக்கல்வெட்டில் வரும் சீவலப்பன் என்ற வரிகள் பாண்டிய மன்னர்களை குறிக்கும் பெயராக இருக்கலாம்.ஏனென்றால் சீவலமாறன் என்பது பாண்டியர்களுக்கு உரிய பெயராகும் வேறு சில கல்வெட்டுக்களிலும் பாண்டியர்கள் சீவலப்பன் என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் இதை உணர்த்தும்.

ஆகவே குறிப்பிட்ட அகம்படியர் சீவலப்பன் என்ற பெயர் கொண்டது பாண்டிய அரசர்களின் அதிகாரியாக இவர் பணியாற்றியதை குறிக்கலாம்.

அதேபோல் இவரது பெயரில் உள்ள வடுகன் என்பது வடபகுதியில் இருந்து வந்தவன் என்பதை குறிப்பதாகலாம்.

இதை கல்வெட்டை படித்த பாவெல் பாரதியும் இப்படி குறிப்பிடுகிறார்.

“வடுகன் என்பது வடக்குப் பகுதி யைச் சார்ந்தவன், பைரவன், பிரம்மச் சாரி, வாலிபன் எனப் பலபொருள்படும். வடுகன் என்பது சிவனின் மூர்த்தங் களில் ஒன்றான பைரவரைக் குறிப்பதால் அவர் சிவன்மேல் பக்தி கொண்டவராகக் கருதலாம். திருவாலி என்பது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழிக்கு அருகிலுள்ள ஊர். திருவாலி என்பது பாண்டிய நாட்டுக்கு வடக்குப் பக்கம் உள்ள ஊராக இருப்பதால், திருவாலி என்ற ஊரைச் சேர்ந்த சீவல்லபன் வடுகன் எனவும் கருதலாம்”

வடுகன் என்பதற்கு பல்வேறு பொருள்களை இவர் பட்டியல் இட்டிருப்பினும் திருவாலி என்ற ஊரை சேர்ந்த இவன் புதிய பகுதியான அளநாட்டில்(தேனி ) பகுதியில் குடியேறியதாலேய வடுகன் என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதி.

இன்று வடுகன்,வடுகர் என்ற பெயர் தெலுங்கர் என்ற பெயரை குறித்து நின்றாலும், சங்ககாலம் முதல் மெளரியர் முதல் பல்வேறு படையெடுப்பாளர்களை அவர்கள் வடபகுதியில் என்று வந்தவன் என்ற பொருளில் குறித்திருப்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம்.

சோழர் மற்றும் பாண்டியர்களால் வடுகர் பகுதிகளில் அரசபிரதிநிதிகளாக அமர்த்தப்பட்ட அகம்படியர்களில் ஒரு சிலர் வடுகர் என்று அவர்கள் நியமிக்கப்பட்ட பகுதியை கொண்டு பெயர் கொண்டிருந்ததையும் இங்கு ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

அதுமட்டுமல்ல
பல்வேறு தமிழ் குடிகளின் பெயர்களிலும் வடுகன்,வடுகர் என்ற பெயர் வைத்திருப்பதும் இதை உணர வைக்கின்றது.

இந்த கருதுகோளையெல்லாம் தாண்டி கல்வெட்டில் வடுவன் என்று வருவதை வடுகன் என்று கூட படித்திருக்கலாம்.

சோழநாட்டு திருவாலி பகுதியை சேர்ந்த அகம்படியர் ஒருவன் பல்வேறு அகம்படியர் கல்வெட்டுக்களில் வரும் முதலி பட்டத்துடன் தென் தமிழ்நாட்டு தேனி பகுதியில் காணப்படுவது கல்வெட்டில் குறிக்கப்படும் இவரின் முக்கியத்துவத்தை சிந்திக்க வைக்கின்றது .இக்கல்வெட்டு செய்தி முழுமையாக கிடைத்தாலோ அல்லது வரும் காலங்களில் கல்வெட்டு குறிக்கப்படும் இவரை பற்றி வேறு கல்வெட்டுக்கள் கிடைக்கின்ற போதும் இது பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கலாம்.

நன்றி:
இக்கல்வெட்டை படித்து நாளிதழில் வெளியிட்ட
வைகை தொல்லியல் பண்பாட்டு கழக நிறுவனர் பாவெல் பாரதி மற்றும் அவர் குழுவினருக்கு அகமுடையார் ஒற்றுமை சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும்.

அதேநேரம் இன்னும் முயற்சி செய்திருந்தால் கல்வெட்டினை முழுமையாக படித்திருக்கலாம்.

குறிப்பிட்ட இந்த கல்வெட்டடை சுற்றி புதிதாக எழுந்த சித்திவிநாயகர் கோவிலின் சுற்றிச்சுவர் ஒட்டி அமைந்துள்ளதாலும், கல்வெட்டு மண்ணில் புதைந்துள்ளதாலும் கல்வெட்டு செய்தியை முழுமையாக படிக்க முடியவில்லை என அறிய முடிகிறது. தனிப்பட்ட அமைப்பு எடுக்கும் முயற்சி என்பதால் புதைந்துள்ள கல்வெட்டை தோண்டி எடுத்து படிப்பதில் இடையூறுகள் இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகின்றது.

அடுத்து
கல்வெட்டின் புகைப்படத்தை நாமும் பார்த்தோம் ஆனால் அதில் “அகம்படி முதலிகளில்” என்பதற்கு முன்னால் கோவில் என்ற வார்த்தை இடம் பெற்றதாக தெரியவில்லை. கல்வெட்டின் மீது மாவு அடித்து படித்தவர்கள் அப்படியே புகைப்படம் எடுத்திருந்தால் கல்வெட்டு வாசகத்தை எளிதாக படித்திருக்கலாம். இருப்பினும் வரும்காலத்தில் கல்வெட்டு ஆய்வாளர்கள் இக்கல்வெட்டை முழுவதுமாக வெளியே எடுத்து கல்வெட்டு செய்தியை முழுமையாக வெளிக்கொண்டு வர முயற்சிக்க வேண்டுகிறோம்.

 

நாளிதழ் செய்தி லிங்க்:

https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/a-13th-century-inscription-has-been-found

https://www.seithipunal.com/tamilnadu/13th-century-inscriptions-discovered

குறிப்பு:
Tamilagamnews.com வெப்சைட்டில் தினமும் 50 முதல் 60 வரலாற்று கட்டுரைகளை சேர்த்து வருகிறோம். இதே நிலையில் சென்றால் ஒரே மாதத்தில் வெப்சைட்டில் 1500 முதல் 1800 வரலாற்று கட்டுரைகளும் ஒரே வருடத்தில் 20,000 க்கு மேலான வரலாற்று கட்டுரைகளையும் ஒரே இடத்தில் காணலாம்.அதுவும் நமக்கு தேவையான தலைப்பு கொடுத்து தேடி உடனே செய்திகளை உடனே பெறும் வசதியுடன்.

இந்த வெப்சைட்டை அணுகுவதற்கு பாஸ்வேர்டை தற்போது அகமுடையார் இனத்தில் நமக்கு அறிமுகமான ஒரு சிலருக்கு மட்டுமே கொடுத்து வருகிறோம். ஆகவே நமக்கு அறிமுகமானவர்களில் தேவைப்படுபவர்கள் நம்மிடம் பாஸ்வேர்ட்டை கேட்டு பெறலாம். இதுவரை நம்மிடம் அறிமுகம் இல்லாதவர்கள் நம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி அறிமுகமாகி பின் பாஸ்வேர்ட் பெற்றுக்கொள்ளலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?