கலைத்துறையில் அன்றைய நாட்களில் அகமுடையார்களின் பங்களிப்பு அளப்பரியதாகவே இருந்தது…

Spread the love

First
கலைத்துறையில் அன்றைய நாட்களில் அகமுடையார்களின் பங்களிப்பு அளப்பரியதாகவே இருந்தது. தயாரிப்பு, எழுத்து, நடிப்பு என கலைத்துறையின் அனைத்து பிரிவுகளிலும் இவர்கள் கோலொச்சிக் கொண்டிருந்தனர் என்பதை கடந்த கால வரலாறுகள் நினைவூட்டுகின்றன. எம்.ஜி.ஆர், சிவாஜி, நம்பியார் என பலரும் திரைத்துறையில் கால் பதிக்கும் முன்னரே அவர்களை அடையாளப்படுத்திய நாடக உலகில் கொடிக்கட்டி பறந்த ’அகமுடையாரான’ நவாப் இராஜமாணிக்கம் பிள்ளை அவர்களும் கலைத்துறை ஜாம்பான்களின் ஒருவராக கருதப்பட்டார்.

அவரைப்போலவே அவரது உறவினரான ‘சக்தி’ கிருஷ்ணசாமி பிள்ளையும், ”சக்தி நாடக சபா”வினை நிறுவி தனது தனித்துவமான அடையாளத்தை நாடக உலகில் பதித்தார். ஒருங்கிணைந்த தஞ்சையை பூர்வீகமாக கொண்ட இந்த இருவருமே அகமுடையார் வழித்தோன்றல் என்பதும், நாடக உலகில் மூலம் பல ஆளுமைகளை அடையாளம் காட்டியவர்கள் என்பதும் பெருமைக்குரிய ஒன்றாகும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் பேசியதாக, நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பேசிய வீர வசனமாக சொல்லப்படும் ‘வானம் பொழிகிறது; பூமி விளைகிறது; உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி?” என்ற பிரபலமான அந்த வசனங்கள் அனைத்தையும் எழுதி, தனது சக்தி நாடக சபா மூலமே சிவாஜியை நடிக்க வைத்து வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை அரங்கேற்றிய பெருமை சக்தி கிருஷ்ணசாமி அவர்களுக்கு உண்டு. பின்னாட்களில் அந்த நாடகமே, திரைப்படமாக உருவாகும் பொழுது, அதே வசனங்கள் மக்களின் மனதில் பசுமரத்தாணி போல ஆழப்பதிந்து போனது என்பதும் குறிப்பிடதக்கது.

இப்படியான பன்முகத்திறமை கொண்ட கலையுலக படைப்பாளியான சக்தி கிருஷ்ணசாமி அவர்களின் 109வது பிறந்த நாளான (11.03.2022) இந்நாளில் இந்து தமிழ் நாளிதழ் அவரை கெளரவப்படுத்திருக்கிறது. ”சக்தி மிகுந்த எழுத்து !”என்ற தலைப்பில் கட்டுரையாக்கம் செய்திருக்கும் திரு. ஆர்.சி.ஜெயந்தன் அவர்களுக்கும், தமிழ் இந்து Tamil The Hindu நாளிதழுக்கு நன்றியும், பாராட்டுகளும்!

– இரா.ச. இமலாதித்தன்
#அகமுடையார் #Agamudayarஇப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

1 Comment

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?