காடவராயர் பட்டத்தில் அகம்படியர் ———————— அகமுடையார்கள் பல்லவ…

Spread the love
0
(0)

காடவராயர் பட்டத்தில் அகம்படியர்
————————
அகமுடையார்கள் பல்லவராயர் பட்டத்துடன் இருக்கின்ற 10க்கும் மேற்பட்ட கல்வெட்டு சான்றுகளை ஏற்கனவே அகமுடையார் ஒற்றுமை தளத்தில் பதிவிட்டிருந்தோம்.

அதே போல் அகமுடையார்கள் தொண்டைமான் பட்டத்தில் இருக்கும் கல்வெட்டுக்களையும் பதிவிட்டுருந்தோம்.

இன்று அகமுடையார் சமுதாயத்தவர் காடவராயர் பட்டத்தில் இருக்கும் கல்வெட்டினை காண்போம்.

இக்கல்வெட்டு இன்றைய திருமயம் தாலுகாவில் உள்ள கோட்டையூர் அகஸ்தீஸ்வரர் கோவிலின் பைரவர் சன்னதியின் சுவரில் இககல்வெட்டு காணப்படுகின்றது.

“ஸ்வதிஶ்ரீ இத்திருமண்டபம்
சாமந்தனார் அகம்படி முதலிகளில் காடவராயர் தன்மம் ”

ஆதாரம்: புதுக்கோட்டை கல்வெட்டு எண் 1001

இதன் மூலம் அகம்படி இனத்தை சேர்ந்தவர் தளபதியாக (சாமந்தனார்) இருந்தார் என்பதும் அவர் காடவராயர் என்று குறிப்பிட்டுள்ள செய்தியையும் அவர் மேற்குறிப்பிட்ட கோவிலில் ஒர் மண்டபத்தை கட்டியுள்ளார் என்று தெரிகின்றது. இக்கல்வெட்டு பைரவர் சன்னதியில் காணப்படுவதால் இவர் கட்டிய மண்டபம் இக்கோவிலின் பைரவர் மண்டபமாகவே இருக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல 1891 சென்சஸ் பதிவேட்டில் அகமுடையார்களின் பட்டங்களில் “கச்சிராயர்” என்ற பட்டமும் இடம்பெறுகின்றது.

சரி இந்த காடவர் என்ற பெயர் எதனை குறிக்கின்றது.
பல்லவராயர், தொண்டைமான், காடவராயர்,கச்சிராயர் போன்ற ஆதாரங்கள் இருப்பதால் அகமுடையார்கள் பல்லவர் வழியினர் என்று நாம் குறிப்பிடவில்லை.

பல்லவராயர், தொண்டைமான் பட்டத்தை போன்று காடவர் என்ற பெயர் பல்லவ,தொண்டை மண்டலத்தை குறிப்பதாகும். பல்லவர் பகுதிகளை அகமுடையார்களும் பல்லவர் பெயரில் ஆட்சி செய்ததை இது குறித்து நிற்கின்றது. கல்வெட்டு ,செப்பேடுகள் மட்டுமல்லாமல் அகமுடையாரின் சமுதாய நூல்களும் இச்செய்தியை குறிக்கின்றன. இந்த பல்லவ பகுதிகளை வடதமிழக அகமுடையார்கள் தங்கள் வாழும் பகுதி என்பதால் தங்கள் வீரத்தால் கைப்பற்றி இருக்கலாம் அல்லது பல்வேறு கட்டங்களில் சோழ அரசர்கள் தங்கள் இரத்த உறவுகளை தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் சோழ பாண்டியன்,சோழ கங்கன் என்ற பெயரில் ஆள செய்ததை போல பல்லவர் பகுதிகளில் ஆளச்செய்திருக்கலாம். இவ்வாறு தொண்டை நாட்டு பகுதியை ஆட்சி செய்தவர்களே பல்லவராயர் என்றும், தொண்டைமானார் என்றும் ,காடவராயர் என்றும் , கச்சிராயர் என்ற பெயரிலும் வழங்கி வந்துள்ளனர்.

இன்றும் சிலர் கல்வெட்டு போன்ற முதன்மை ஆதாரங்களே இல்லாமல் ,வெறுமனே பட்டத்தை வைத்து தாங்கள் தான் பல்லவராயர் என்று உருட்டுகின்றார்கள்.

ஆனால் எந்த விசயத்தில் அகமுடையார் வரலாற்று ஆதாரம் மிக தெளிவாக இருக்கின்றது.

ஒன்றுல்ல இரண்டல்ல 10க்கும் மேற்பட்ட பல்வேறு காலத்திய கல்வெட்டு தொடர்ச்சி ,செப்பேடு, ஆங்கிலேயரின் குறிப்புகள் அதுமட்டுமல்ல இன்றும் நடைமுறையில் இப்பட்டத்தை பயன்படுத்தும் நடைமுறை சான்றும் கொண்டு வரலாற்று ஆதாரங்கள் மிகத்தெளிவாக இருக்கின்றன.

பதிவு இணைப்புகள்
இணைப்பு 1 : புதுக்கோட்டை கல்வெட்டு எண் 1001
இணைப்பு 2: 1891 சென்சஸ் ரிப்போர்ட்டில் அகமுடையார்களுக்கான கச்சிராயர் பட்டம்

குறிப்பு:
சென்சஸ் குறிப்பில் உள்ள தகவல்களை நாம் அப்படியே ஏற்கவில்லை. முதன்மை வரலாற்று தரவுகளான கல்வெட்டுக்களில் வரும் தகவல்களை ஒப்பிட்டு பார்த்து மற்றும் பல நடைமுறை வழக்குகளை பார்த்து அதனோடு பொருந்தி வரும் சென்சஸ் தகவல்களை தான் ஏற்கின்றோம் (இப்படி செய்வது தான் சரியான ஆய்வு முறை அதையே தான் அகமுடையார் ஒற்றுமை எப்போதும் பின்பற்றுகிறது)

மேலதிக ஆதார லிங்குகள்

அகம்படி முதலிகளிற் -அழகியன் மெய் வேளைக்கார பல்லவரையன் கல்வெட்டு
https://www.facebook.com/891728770860514/posts/3808083429225019

இராமய்யன் பல்லவராயர் எனும் அகம்படியர்
https://www.facebook.com/891728770860514/posts/3804438142922881

அகம்படி கொத்து முதலிகளில் மிண்டன் பெரியான
அரசநாராயண பல்லவரையன் கல்வெட்டு
https://www.facebook.com/891728770860514/posts/3923080297725331

இன்றும் பல்லவராயர் பட்டத்துடன் வாழும் அகமுடையார்கள்

https://www.facebook.com/100063919813164/posts/376962204444437

முழுகல்வெட்டுக்களையும் தொகுத்து விரைவில் பதிவு செய்கின்றோம்.இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?