அகமுடையார்களின் சனி பிரிவும்-சோழர்களும்- சோழர்கள் அகமுடையார்களே(துணை ஆதாரம்) —…

Spread the love

First
அகமுடையார்களின் சனி பிரிவும்-சோழர்களும்- சோழர்கள் அகமுடையார்களே(துணை ஆதாரம்)
————————————-
சோழர்களின் நெருங்கிய இரத்த உறவுகளே ( இளவரசர்கள் மற்றும் இரத்த உறவுள்ள பங்காளிகளே சோழர்களால் அரச பிரதிநிதிகளாக ஆட்சி செய்ததை பல்வேறு கல்வெட்டுக்களும், வரலாற்று அறிஞர்களும் எடுத்துரைத்துள்ளனர்.

சோழர்கள் இன்றைய அகமுடையார் சாதியை சேர்ந்தவர்கள் என்பதற்கு நேரடி ஆதாரமாக, அகம்படியர்களே சோழ கங்கர் என்றும், சோழ பாண்டியர் என்றும் சோழர் பிடித்த பகுதிகளில் சோழர்களின் இராஜபிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டதை சோழர்களின் சாதி என்ற காணொளியில் ஆதாரங்களுடன் வெளியிட்டுருந்தோம் .

அந்த காணொளியின் குறிப்பிட்ட பகுதியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

இப்போது சோழர்கள் அகமுடையார் என்பதற்கு வேறு சில துணை ஆதாரங்களையும் வரும் காலங்களில் வெளியிட உள்ளோம்!

அவ்வகையில் இப்பதிவில் சோழர்களின் அரசவை மண்டபத்தையும் ,அகமுடையார் பிரிவின் தொடர்பு பற்றியும் விளக்குவோம்.

சோழர்களின் அரசவை மண்டபங்களில் ஒன்று சனி மண்டபம் என்று குறிப்பிடப்படுகின்றது. குறிப்பாக சோழர்களின் அரண்மனை அமைந்திருந்த பழையாறை ( கும்பகோணம் அருகே உள்ள பழையாறை ) நகரத்தில் அமைந்திருந்த சோழர் அரண்மனையில்
ஆதிபூமி, சனி மண்டபம், ராஜேந்திர சோழன் மண்டபம் போன்ற மண்டபங்கள் இருந்துள்ளன.

இதில் சனி மண்டபம் என்பது சோழர்கள் ஆணை வழங்கும் மண்டபங்களில் முக்கிய மண்டபமாக விளங்கியுள்ளது.

இதற்கு உதாரணம் சொல்லவேண்டுமென்றால் இராஜ இராஜ சோழனின் மகனாகிய இராஜேந்திர சோழனின் திருவாலங்காட்டு செப்பேடுகளின் 272 முதல் 277 வரையிலான வரிகள் இந்த சனி மண்டபத்தில் இராஜேந்திர சோழன் தானத்திற்கான அரசாணை வழங்கியதை குறிப்பிடுகின்றது.

ஆதாரம்: நூல்: இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டு செப்பேடுகள்” பக்க எண்கள்: 12,99
பார்க்க இணைப்பு: 1,2

ஆனால் எதற்காக சனி என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது?

பாண்டியகுலாசினி, தெலுங்குகுலகாலன் போன்ற பட்டங்களை கவனித்தால்
சோழர்கள் பொதுவாகவே தங்களை , எதிரிகளை அழிப்பவர்கள்,எதிர்களுக்கு எமன் ,எதிரிகளுக்கு பகைவன் என்ற பொருளில் பட்டங்களை பயன்படுத்தியதை உணரலாம்.

அதேவகையிலே சனி மண்டபம் என்பதையும் அவர்கள் பயன்படுத்தியதை உணரலாம்.

சரி இப்போது சோழர்களின் இந்த சனி மண்டபத்திற்கும் அகமுடையார்களுக்கும் உள்ள தொடர்பை காண்போம்!

அகமுடையார் சமுதாயத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்துள்ளது. அதிலும் குறிப்பாக

ராஜகுலம்
புண்ணியரசு நாடு
கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)
இரும்புத்தலை
ஐவளிநாடு
நாட்டுமங்களம்
ராஜபோஜ
ராஜவாசல்
கலியன்
சனி
மலைநாடு
பதினொரு நாடு
துளுவ வேளாளர் அல்லது துளுவன்

என்ற 11 முக்கிய பிரிவுகள் இருந்துள்ளதை அகமுடையார் சமுதாயத்தை பற்றி 1930 மற்றும் அதற்கும் முன்னர் வெளிவந்த நூல்கள் கூறுகின்றன.

1891ல் எடுக்கட்ட ஆங்கிலேய அரசின் புள்ளிவிவர கணக்கீட்டில்(Census Report) கூட அகமுடையார் பிரிவுகளில் சனி என்ற பிரிவும் பதியப்பட்டிருப்பதை கவனிக்கலாம்

ஆதாரம்: Census of India 1891 Madras Tables A to E pageno69
பார்க்க இணைப்பு : 3

இவற்றில் சனி என்பது பகைவன் என்ற பொருள் தருவனவாகும். இதை உறுதி செய்ய அகமுடையாரில் உள்ள மற்றொரு பிரிவான கலியன் என்பது உதவி செய்கிறது கலி என்பதற்கும் சனி என்ற பொருள் உள்ளது. ஆகவே அகமுடையாரில் சனி,கலியன் என்பன பகைவர்களுக்கு எதிரி ,பகைவர்களுக்கு சனி போன்றவன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சோழர்கள் மட்டுமல்லாது அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த வாணாதிராயர்களும் தங்களை எதிரிகளுக்கு சனி போன்றவன் என்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக மானாமதுரை அருகே உள்ள மாரநாடு (மாறநாடு) அருகே உள்ள தஞ்சாகூர் பகுதியை ஆண்ட தஞ்சை வாணன் எனும் வாணர் குலத்தவனை “தஞ்சை வாணன் கோவை” எனும் பழம் நூல் “மகத்தில் சனி அன்ன சந்திர வாணன்”
என்று குறிப்பிடுகிறது.

ஆதாரம்: நூல் : வாணாதிராயர்கள் ,பக்கம் எண் 10
ஆசிரியர்: திரு.வேதாச்சலம்
பார்க்க இணைப்பு: 4

தஞ்சை வாணன் ஆண்ட இந்த தஞ்சாகூரில் அகமுடையார்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர் வேறு சாதியினர் இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

சோழர்கள் அகமுடையார்கள் என்பதற்கு முதன்மை ஆதாரங்களோடு சோழர்களின் சனி என்ற அடையாளப்பெயரும்வேறு எந்த சமுதாயத்திற்கும் இல்லாது அகமுடையார்களுக்கு தொன்று தொட்டு வழங்கி வருவது சோழர்கள் அகமுடையார்கள் என்பதை விளக்கும் துணை சான்றாகும்.

குறிப்பு:
அகமுடையார்கள் சனிஸ்வரனுக்கு கோவில் அமைத்து வணங்கி வருவது போன்ற
அகமுடையார்களின் சனி பிரிவு குறித்து மேலும் சில ஆதாரங்களை திரட்டி வைத்திருந்தேன் . பழைய கணிப்பொறியில் இருந்த விவரங்களை தற்போது பெற முடியவில்லை. கிடைக்கும் பஓது மேலும் விவரங்களை பதிவு செய்கின்றேன்.

புள்ளிவிவர கணக்கில் உள்ள பிரிவுகளையெல்லாம் அப்படியே உண்மை என்று எடுத்துக்கொள்ள முடியாது. பல்வேறு பிரிவை சேர்ந்தவர்களும் அகமுடையார் என்ற பிரிவில் வருவதாக அவர்களோ அல்லது பதிவு செய்தவர்கள் அவ்வாறோ பதிவு செய்திவிடுவர். பல்வேறு சாதிகளிலும் பல்வேறு பிரிவுகள் இப்படி பதிவு செய்யபட்டிருப்பது கண்டு இதை உணரலாம்

அரசு புள்ளி விவர கணக்கு விவரங்கள் என்பவை ஆதாரங்கள் என்றாலும் அதை மற்றோரு தரவு மூலம் உறுதிப்படுத்துதல் மூலமே அதை ஏற்றுக்கொள்ள முடியும் இல்லாவிட்டால் குழப்பம் ஏற்படும் என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறோம்.






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo