காளையார்கோவில் கோபுரத்தை கட்டியது மருதுபாண்டியர்கள்- ஆங்கிலேய தளபதி ஜேம்ஸ் வெல…

Spread the love
0
(0)

காளையார்கோவில் கோபுரத்தை கட்டியது மருதுபாண்டியர்கள்- ஆங்கிலேய தளபதி ஜேம்ஸ் வெல்ஷ் ஆதாரம்
————————————-
காளையார்கோவில் பாண்டிய மன்னர்கள் கட்டிய இராஜகோபுரத்தை அடுத்து புதிய உயரமான,விரிவான ராஜகோபுரத்தை கட்டியவர்கள் மருதுபாண்டியர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் காளையார்கோவில் கோபுரத்தை கட்டியவர்கள் மருதுபாண்டியர்கள் என்ற புகழ் மருதுபாண்டியர்களுக்கு கிடைக்கக்கூடாது என்று நினைத்து சில விசமிகள் அவ்வப்போது குழப்பம் செய்து வருகின்றார்கள்.

பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடாது! காளையார்கோவில் கோபுரத்தை கட்டியவர்கள் மருதுபாண்டியர்கள் என்பதற்கு எண்ணற்ற ஆதாரம் இருக்கிறது. பல்வேறு ஆதாரம் இருந்தாலும் மருதுபாண்டியருக்கு எதிராக போரிட்ட ஆங்கிலேயர்களே மருதுபாண்டியர்கள் வீரத்தை பற்றி எழுதியிருப்பது தான் மருதுபாண்டியர்களை விடுதலை போராட்டத்தில் முண்ணனியில் வைத்துள்ளது.

காளையார்கோவில் கோபுரம் கட்டியது யார் என்ற விசயத்திலும் மருதுபாண்டியர் காலத்திலேயே வாழ்ந்து அவருக்கு எதிராகவே போரிட்ட ஜேம்ஸ் வெல்ஷ் எனும் ஆங்கிலேயர் தரும் ஆதாரத்தையே அளிப்பது தானே சிறந்ததாக இருக்கும் அப்படிப்பட்ட ஆதாரமே இப்பதிவு.

இங்கிலாந்து நாட்டில் ஸ்காட்லாந்து பிரதேசத்ஹ்டில் பிறந்த ஜேம்ஸ் வெல்ஷ்(James Welsh) எனும் ஆங்கிலேயர் தனது 15 வயதில் 1790ம் ஆண்டு இந்தியாவிற்கு இராணுவ பணிக்கு வந்தார் ,இவர் தமிழ்நாடு மற்றும் பல்வேறு இந்திய மாநிலங்களில் நடைபெற்ற போரில் உயர் ராணுவ அதிகாரியாக பணியாற்றினார்.

இவர் இந்தியாவில் போரில் பங்குபெற்ற இராணுவ அனுபவங்களை 1830ம் ஆண்டு Military reminscences(தமிழில்: இராணுவ நினைவுகள் ) எனும் நூலாக வெளியிட்டுள்ளார்.

இரண்டு பாகங்களாக இந்த நூல் வெளியிடப்பட்டது. இதில் காளையார்கோவிலின் வரைபடத்தை(மேப்) வெளியிட்டுள்ளார்.அந்த வரைபடத்தில் காளையார்கோவில் புதிய கோபுரத்தை கட்டியவர் மருது என்பதை தெளிவாக எண் 1 கொடுத்து குறிப்பிட்டுள்ளார்

ஆதாரம்: Military reminscences; extracted from a journal of nearly forty years’ active service in the East Indies Part 1
pageno123

இதில் ஜேம்ஸ் வெல்ஷ் ,காளையார்கோவிலை “calliacoile” என்று அவரது ஆங்கில உச்சரிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அறிவிப்பு:
காளையார்கோவில் கட்டியது மருதுபாண்டியரே என்பதற்கு மருதுபாண்டியர்களின் பொருள் உதவியால் உருவான வானரவீர மதுரை புராணத்திலேயே சான்றுகள் உள்ளது அதை ஏற்கவே வெளியிட்டுள்ளோம். வேண்டுமென்றால் அதையும் தனிப்பதிவுகளாக வெளியிடுவோம்.

இதுபோன்ற இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன. விரைவில் அதையும் வெளியிடுவோம்.

இணைப்புகள்
1- ஜேம்ஸ் வெல்ஷ் எழுதிய நூலின் முதற்பக்கம் (அட்டைப்படத்தையும்) காளையார்கோவில் வரைபடத்தையும் இணைத்து நாம் வெளியிட்ட படம்
2- அட்டைப்படம்(தனியே)
3- வரைபடம் (தனியே) பக்கம் எண் 123

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?