2 சதவீதத்திற்கும் குறைவான மக்கள் தொகையினர் 10% இராணுவ பங்களிப்பு செய்தமை- இலங்க…

Spread the love
0
(0)

First
2 சதவீதத்திற்கும் குறைவான மக்கள் தொகையினர் 10% இராணுவ பங்களிப்பு செய்தமை- இலங்கை அகம்பொடி இனக்குழுவினர்
——————————-
ஆதாரமே இல்லாமல் வரலாறு என்ற பேரில் கதை எழுதுவர்களும் தமிழ்நாட்டில் தான் அதிகம் என்று நினைக்கிறேன்.

எந்த ஆதாரமும் இல்லாமல் தங்களை தாங்களே சத்திரியர் என்று கூறிக்கொள்ளும் இவர்களின் வேடிக்கைதனத்தை சிரித்துக்கொண்டே கடந்து செல்ல முயல்கின்றோம். ஆனால் புதிதாக வந்த இவர்கள் தாங்கள் மட்டும் தான் சத்திரியர் என்றும் மற்ற எந்த குடியும் போர் மரபினர் அல்ல என்று பேசுவதெல்லாம் சகிக்க முடியாததாக இருக்கிறது.

சரி இதைப்பற்றி பேசினால் நிறைய உண்மைகளை கூற வேண்டி வரும். நாம் நம் வழியை பார்த்துக்கொண்டு செல்வோம்.

தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வெட்டுக்கள்,செப்பேடுகள், இலக்கியங்களில் அகம்படியர்கள் போர்குடி மரபினராக காட்டப்பட்டுள்ளனர்.அதற்கும் நிரம்ப தரவுகளை தொடர்ந்து பதிவிட்டுவருகின்றோம்.

இலங்கையில் 1 அல்லது 2 சதவீதத்திற்கும் குறைவான மக்கள் தொகையில்ல் உள்ள ஒரு இனக்குழு -10% மேலான இராணுவ பங்களிப்பு செய்தளது என்றால் நம்ப முடிகிறதா?

ஆம்! அது நமது தமிழ் அகம்படியர் இனத்தில் இருந்து கிளைத்து இன்று சிங்களர்களாக அறியப்படும் “அகம்பொடி” என்ற இனக்குழுவினர் தான்.

கடல் தாண்டி அகம்படியர்கள் இலங்கைக்கு சென்றதனால் இலங்கையில் உள்ள சிங்கள பெண்களை திருமணம் செய்துகொண்டனர். பின்னாட்களில் இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் சிங்களராகவே வளர்ந்தனர். இவர்கள் இன்றும் அகம்படி என்பதன் சிங்கள திரிபான அகம்பொடி என்ற சாதி பிரிவினராக உள்ளனர்.

இவர்களை இன்று நாம் “அகம்பொடி” “agampodi” என்ற பின்னொட்டு கொண்டு எளிதாக அடையாளம் காண முடிகின்றது.

பேஸ்புக்கில் சென்று agampodi என்று ஆங்கிலத்திலோ අගම්පොඩි என்று சிங்களத்திலோ தேடினால் இன்று சிங்களராகவே மாறிவிட்ட தமிழ்நாட்டின் அகம்படியர் சாதியினரை காணமுடியும்.

சரி மீண்டும் விசயத்திற்கு வருவோம்!

சிங்கள மக்கள் தொகையில் 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள இந்த அகம்பொடி இனக்குழு சிங்கள இராணுவத்தின் 10% மேலான இடத்தை நிரப்பியுள்ளனர்.

உதாரணத்திற்கு அகம்பொடி என்ற பெயரில்
சிங்கள ராணுவத்தின் உயர் பதவிகளில் இருந்தவர்களின் பெயர்களை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றோம்.

இந்த பெயர் மற்றும் தகவல்கள் இலங்கை அரசின் கேசட்டியரிலிருந்து “The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka” பெறப்பட்டவையாகும்.

உதாரணத்திற்கு ஒரு சில பெயர்களை உடன் கீழே தருகின்றோம்.

மேஜர் ஜெனரல் அகம்பொடி பியல் டி டிசோசா விக்ரமரத்தினே

மேஜர் ஜெனரல் அகம்பொடி சேனக த சொயிசா விக்ரமரத்னே

மேஜர்( லெப்டினன்ட் கர்னல்) அகம்பொடி விமல் அதுல ஶ்ரீயந்த

இப்படி சொல்வதென்றால் நூற்றுக்கணக்கான பெயர்களை வரிசையாக சொல்லிக்கொண்டே செல்லலாம்.

ஆனால் நிறைவாக சொல்ல வருவது ஒன்று தான்.
அகம்படியர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஆந்திரா ,கர்நாடகா,கேரளா பகுதியில் கிடைத்த கல்வெட்டுக்களிலும் போர்மரபினராகவே காட்டப்பட்டுள்ளனர்.

அதைபோலவே இலங்கை போன்ற வெளி நாடுகளிலும் போர்குடியினராக காட்டப்பட்டுள்ளனர்.

சிங்கள மக்கள் தொகையில் 2 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான மக்கள் தொகையில் உள்ள சிங்கள அகம்பொடி பிரிவினர்
ராணுவத்தில் 10% வரையில் இருக்கலாம் என்பது திரட்டப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவருகின்றது.

அதாவது தங்கள் மக்கள் தொகையை விட அல்லது 10 மடங்கு பங்களிப்பை ராணுவத்திற்கு செய்துள்ளனர் என்பதே அகம்பொடி பிரிவினர் எத்தகைய சத்திரிய வர்ணத்தினர் என்பதை உணர்த்தும்.

ஆகவே தமிழ்நாடு மட்டுமல்ல ,ஆந்திரா ,கேரளா,கர்நாடகா இலங்கை என உலகின் பல்வேறு பகுதிகளிலும் அகம்படியர்கள் போர் மரபினரானகவே காட்டப்பட்டுள்ளனர் இன்றும் தொடர்கின்றனர் என்பது உண்மையாகும்.

அறிவிப்பு
——–
சமூக நிலையை ஒப்பிட்டு பார்க்க சிங்கள ராணுவத்தில் உள்ள அகம்பொடியினரின் பங்கை இங்கு எடுத்துக்காட்டுகிறோமே அன்றி
சிங்கள ராணுவத்தை உயர்த்திப்பேசுவதோ ,சிங்கள ராணுவத்தின் செயல்களை எந்த விதத்திலும் நியாப்படுத்துவதோ நமது நோக்கமல்ல.

சிங்கள ராணுவத்தின் தமிழர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான இனப்படுகொலையை எதைக்கொண்டும் நியாப்படுத்த முடியாது.

ஒருவேளை சிங்கள அகம்பொடியினரா , தமிழ் மக்களா என்று வந்தால் நாங்கள் தமிழ் மக்கள்ளுக்கே ஆதரவளிப்போம் மற்ற அகம்படியர்களும் ஆதரவளிக்க வேண்டும் என்பது தெளிவான மற்றும் உறுதியான கருத்தாகும்.

சிங்கள ராணுவத்தினரை நாயகர்கள் போன்று சித்தரிக்க விரும்பவில்லை என்பதாலேயே அகம்பொடி இனத்தை சேர்ந்த சிங்கள உயர் அதிகாரியின் புகைப்படத்தின் முகத்தை கிராப் செய்துவிட்டோம்.

பேசுவதற்கு அகமுடையாருக்கான நிறைய செய்திகள் உள்ளன. ஆனால் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இதை முழுமையாக படிக்கவோ,படித்தவற்றை சேர் செய்யவோ அகமுடையார் சமுதாயத்தில் எத்தனை பேர் தயாரக உள்ளனர் என்று தெரியவில்லை.

டைப் செய்வதை விட பேசுவது எளிது என்பதால்
நமது அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலில் விரிவான ஆதாரங்களுடன் ,ஆழமான வரலாற்று செய்திகளை பதிவு செய்துவருகின்றோம்.

சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் கிழே உள்ள லிங்க் சென்று சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்! நமது யூடிப் சேனலை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்!

https://www.youtube.com/channel/UCI2KppF2iePnTNphjk6I78w

கூடுதல் பெயர்களும் ஆவணங்களும்
——————————

கேப்டன் அகம்பொடி விசாகா ருக்மாலி டி சில்வா

( லெப்டினன்ட் கர்னல்) அகம்பொடி மால்கன் மென்டிஸ் குணசேகரா

லெப்டினன்ட் கர்னல் அகம்பொடி மஹேஸ் லீன் சொய்சா

கர்னல் (தற்காலிக பிரிகேடியர்) அகம்பொடி நிஹால் அமரசேகரா

செக்கண்ட் லெப்டினன்ட் அகம்பொடி கஷுன் கோசலா கெளசல்யா தி சில்வா

மேஜர் ஜெனரல் அகம்பொடி பியல் டி டிசோசா விக்ரமரத்தினே

மேஜர் ஜெனரல் அகம்பொடி சேனக த சொயிசா விக்ரமரத்னே

மேஜர்( லெப்டினன்ட் கர்னல்) அகம்பொடி விமல் அதுல ஶ்ரீயந்த

கேப்டன் அகம்பொடி விசாகா ருக்மாலி டி சில்வா

( லெப்டினன்ட் கர்னல்) அகம்பொடி மால்கன் மென்டிஸ் குணசேகரா

லெப்டினன்ட் கர்னல் அகம்பொடி மஹேஸ் லீன் சொய்சா

கர்னல் (தற்காலிக பிரிகேடியர்) அகம்பொடி நிஹால் அமரசேகரா

செக்கண்ட் லெப்டினன்ட் அகம்பொடி கஷுன் கோசலா கெளசல்யா தி சில்வா

இலங்கை வான்படை – பைலட் அதிகாரி இசுரு நிலங்க

உப லெப்டி அகம்பொடி தீரன் (தீரன்) சாமிக அபே தீர

கேப்டன் அகம்பொடி சுதத் சிறியானந்த சொயிசா

நிரந்தர விங் கமாண்டர் அகம்பொடி கபில சமன்சிறி(சமர சிறி) டி சில்வா

உப லெப்டினன்ட் அகம்பொடி சுநெத் மென்டிஸ்

லெப்டினன்ட் அகம்பொடி சம்பத் நதீர பெராரா ராஜகருணா

பிளைட் லெப்டினன்ட் அகம்பொடி நிலு(நில) ஹிமாலி மென்டிஸ்

லெப்டினன்ட் அகம்பொடி ஓமேஷ் தசனந்த மென்டிஸ்

கேப்டன் லலித் சான்த டி சோயிசாஇப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?