First
புதிய வசதி அறிமுகம்- ஊடக செய்திகள்
——————————-
அகமுடையார் உறவுகளுக்கு வணக்கம்:
நீங்கள் எல்லோரும் அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனை டவுன்லோட் செய்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்! டவுன்லோட் செய்யாதவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் .
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community&hl=en_IN
லிங்க் ஒர்க் ஆகவில்லை என்றால் உங்கள் மொபலில் கூகிள் பிளே ஸ்டோர் சென்று agamudayarotrumai என்று டைப் செய்து அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்!
சரி இப்பதிவிற்கான விடயத்திற்கு வருவோம்!
நமது அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனில் “ஊடக செய்திகள் ” என்ற புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளோம்.
இதன் மூலம் அகமுடையார் சமுதாயம் குறித்து பத்திரிக்கைகளில் வெளிவரும் செய்திகளை நீங்கள் அப்ளிகேசன் வழியாக எளிதாக படித்துக்கொள்ள முடியும்.
எல்லோராலும் எல்லா பத்திரிக்கைகளில் வாங்க முடியாது, அதிலும் இந்த செய்திகளை தேடி பிடித்து பிடிக்க நேரமும் இருக்காது.
மேலும் சில பத்திரிக்களைகள் தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்து வெளியாகும் அவற்றை தமிழ்நாட்டில் வசிக்கும் பலர் பார்த்திருக்க கூட வாய்ப்பு இருக்காது அப்படியான இச்சூழ்நிலையில்
பல்வேறு பத்திரிக்கைக்களில் , பல்வேறு காலங்களில் (10 வருடத்திற்கு முன் வெளிவந்த செய்தி உட்பட) இன்று வெளியான செய்தி வரை அனைத்து செய்திகளையும் உங்களுக்காக சேகரித்து வெளியிட்டு வருகின்றோம்.
இதன் மூலம் அகமுடையார் சமுதாயத்தை பற்றி ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை ஒரே இடத்தில் இருந்து நீங்கள் படிக்க முடியும்.
சாதியை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட அப்ளிகேசன்களிலேயே தமிழ்நாட்டில் நமது அப்ளிகேசனில் தான் இந்த சிறப்பான வசதி உள்ளது.
சரி இதை எப்படி பார்ப்பது
———————
அப்ளிகேசனை ஓப்பன் செய்து “Categories”
என்ற டேப்பை கிளிக் செய்யவும்!
இப்போது “செய்திகள்” என்ற மெனுவை தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து “ஊடக செய்திகள்” என்ற மெனுவை தேர்ந்தெடுக்கவும்
இப்போது பல்வேறு செய்தி தலைப்புகள் தோன்றும் அதில் நீங்கள் படிக்க விரும்பும் செய்தியை தேர்ந்தெடுத்து செல்லவும்.
இப்போது இந்த செய்தியின் தலைப்புக்கு கீழே
“முழுச்செய்தியை படிக்க மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்” என்று குறிப்பிட்டு
பச்சை அல்லது புளூ நிறத்தில் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து சம்பந்தப்பட்ட செய்தி இணையதளத்தில் இச்செய்தியை நீங்கள் படிக்க முடியும்.
வேறு ஓர் செய்தியை படிக்க விரும்பினால் , ஏற்கனவே ஒப்பன் செய்துள்ள அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனின் ஊடக செய்திகள் பிரிவில் சென்று வேறு செய்திகளை பார்க்கலாம்.
உங்களுக்காக இப்பதிவில் ஸ்கீர்ன்சாட் அட்டாச் செய்து அதில் மஞ்சள் நிறத்தில் வட்டமிட்டும் இந்த வழியை ஒவ்வொன்றாக காட்டியுள்ளாம்)
குறிப்பு:
மறக்காமல் அகமுடையார் உறவுகள் இப்பதிவை வாட்ஸ் அப் ,பேஸ்புக் ,டெலிகிராப் குருப்களில் சேர் செய்யுங்கள்! இது உங்களுக்கான அப்ளிகேசன் .உங்களுக்கான பல்வேறு வசதிகளை தேடி சேகரித்து தினமும் வேலை செய்து வருகிறோம். ஆகவே மறக்காமல் சேர் செய்யுங்கள்.
குறிப்பிட்ட அந்த செய்தி இணையதளத்தில் இருந்து எடுத்து நமது அப்ளிகேசனிலேயே செய்தி தோன்றும்படி செய்துவிட முடியும்.
ஆனால் அப்படி செய்தால் காப்பிரைட் மீறியதாகும் என்பது ஒரு காரணம்.
இரண்டாவது எல்லா செய்திகளையும் மக்கள் படிக்க போவதில்லை. எல்லா செய்திகளையும் மொபலில் ஸ்டோர் செய்தால் டேட்டா மற்றும் மெமரி செலவழியும்.
லிங்கை சேர் செய்யும் முறையில் மெமரி பயன்பாடு இருக்காது என்பதால் லிங்கை மட்டும் சேர் செய்துள்ளோம்.தலைப்பை படித்து விரும்புவோர்கள் குறிப்பிட்ட அந்த பதிவை மட்டும் படிக்க முடியும்.
செய்திகளை தொடர்ந்து சேகரித்து அப்டேட் செய்து வருகிறோம். ஆகவே ஊடக செய்திகள் பிரிவில் தினமும் புதிய பதிவுகள் வரும் ( பழைய அல்லது புதிய நாளிதழ் செய்திகள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்)
அதே போல் நமது அப்ளிகேசனில் இன்னும் புதிய வசதிகள் செய்து தர உள்ளோம்.
மேலும் ஏற்கனவே இருக்கும் வசதிகளும் (கல்வி,வேலைவாய்ப்பு,திருமண தகவல்கள்) சிறப்பாக மேம்படுத்தப்படும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்