ஒரு மாறுதலுக்கு… புதினங்களில் அகமுடையார்கள் ——————————-…

Spread the love
0
(0)

First
ஒரு மாறுதலுக்கு… புதினங்களில் அகமுடையார்கள்
————————————-
ஏனென்றால் அதில் ஒரு அடிப்படை உண்மையை பின்பற்றி பல கற்பனைகளை புனைந்திருப்பார்கள் எனப்தால் பொதுவாக புதினங்களை நாம் படிப்பதும் இல்லை ஆதாரமாக காட்டுவதும் இல்லை.

ஆனால் ஒரு மாறுதலுக்கு புதினத்தில் அடிப்படை உண்மையை பின்பற்றி நம்மை(அகமுடையார்கள்) பற்றி
எழுதியுள்ளதை அவ்வப்போது காண்போம்.

உதாரணத்திற்கு எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்.பி எழுதியுள்ள “வீரயுக நாயகன் வேள்பாரி
” என்ற நாவலில் உள்ள கருத்துக்களை காண்போம்.

இதில் குறிப்பாக அகப்படையே மிக சக்தி வாய்ந்த படையாகவும் , போர் இல்லாத காலங்களிலும் ஆயுதம் ஏந்தி நிற்கின்ற படையாக , நிலைப்படையாக இருக்கின்ற கருத்தையும் ,அரசனையும்,அரச குடும்பத்தினரை மெய்காவல் செய்வது. அரண்மனை, அரச கூடாரம், போர்களம் ,நகர்வலம் என எல்லாவிடத்திலும் அரசனை சூழ்ந்து கொண்டு காப்பவர் அகப்படையினர் ,இவர்களே அரசரை எவர் சந்திக்கலாம், வருபவர்கள் அரசரிடமிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும் போன்ற விசயங்களை முடிவு செய்பவர் போன்ற கருத்துக்களை உண்மையின் ஊடாகவே பதிவு செய்திருப்பார்.

இதை தவிர்த்து அரசரை சந்திக்க வருவரை சோதனையிடுவது, வருவர் முக்கியத்துவம் அறிந்து வரிசைப்படுத்துவது, அரசர் உணவு உட்கொள்ளும் முன்பு உணவை தான் உண்டு சோதிப்பது,அரசனின் மங்கள சின்னங்களை கொண்டிருப்பது ,மங்கல தட்டு ஏந்துவது, வரி வசூல் செய்வது, அரச துரோகிகளை தண்டிப்பது, அரசனுக்காக உயிர் துறப்பது போன்ற பல விடயங்கள் அடங்கும். அதி பின்னாளில் பார்ப்போம்.

சோழ அரசர்களின் உறவுப்ப்படையாக விளங்கிய இந்த அகப்படையினர் பின்னாளில் பாண்டிய அரசர்கள்,இலங்கை அரசர்கள் மற்றுமற்றும் அரசர்களிடத்தும் சேவை புரிந்துள்ளனர். எதனால் இவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள் என்பதை “சோழர் யார் ” என்ற நமது காணொளியில் விரிவாக காணலாம்.

குறிப்பு:
அகப்படைய பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வெண்டும் என்பதற்காகவே எடுத்துக்காட்டுகிறோமே தவிர
கதை நாயகன் வேள் பாரியை பற்றியை நம்மவர் என்றோ இந்த நாவலில் உள்ள அனைத்து கருத்துக்களையும் நாம் ஏற்கிறோம் என்றோ புரிந்து கொள்ள வேண்டாம்.






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?