First
நேற்று பத்மபூசன் கோவை அவிநாசிலிங்கம் செட்டியார்(அகமுடையார் ) பற்றி பதிவிட்டுருந்தோம். அதனைப் பார்த்துவிட்டு செட்டியார் ஜாதியினர் நம்மவர்களா என்று வாட்ஸ் அப்பில் பெரிய விவாதமே நடந்ததாக அறிகிறோம்.முதலில் செட்டியார் என்பது சேர்வை,முதலியார்,தேவர் என்பதைப்போல் அகமுடையார்களுக்கு இருக்கும் பட்டம் தான் .ஆனால் ஜாதி ஒன்றே அதுவே அகமுடையார்.
சேலம்,கரூர்,கோவை மாவட்டங்களில் அகமுடையாருக்கு செட்டியார் பட்டம் உண்டு.இதோ சேலம் மாவட்ட துளுவ வேளாளர் சங்கத்தில் செட்டியார் பட்டத்தில் அகமுடையார் ஒருவர்.இப்புகைப்படம் அச்சங்க மலரில் இருந்து எடுக்கப்பட்டது.
குறிப்பு:
இச்சங்க மலரின் புகைப்படத்தை எமக்களித்து தகவல்களைப் பகிர்ந்து கொண்ட அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையாருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்!
சேர்வை பட்டம் இருக்கிறது என்பதற்காக முத்தரையரையரையும்,கோனாரையும்,நாடார்களையும்,கள்ளர்களையும் அகமுடையார் சாதியினராக ஏற்றுக்கொள்ள முடியுமா இல்லை பட்டம் வேறு இருக்கிறது என்பதற்காக நம் அகமுடையார் சாதியினருடன் இணையாமல் இருக்க முடியுமா! பட்டங்கள் வேறுபட்டாலும் நமது இனம் ஒன்றே,நாம் அனைவரும் ஒரே அகமுடையார் இரத்த சொந்தங்கள் இதை மறவாதீர்கள்!
பட்டங்களைப் பெரிதுபடுத்தாமல் சாதியாக இணைவோம்!அகமுடையார் ஒற்றுமை வளர்க!நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்