மதுரையில் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரனும் அகமுடையார்களும்-ஓர் வரலாற்றுப் பதிவு!…

Spread the love

First
மதுரையில் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரனும் அகமுடையார்களும்-ஓர் வரலாற்றுப் பதிவு!
—————————————————————————
தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் சில ஆண்டுகள் தமிழ்நாட்டில் தங்கியிருந்தார் என்பது பலருக்கு தெரிந்த விடயம்!அவ்வாறு தமிழகத்தில் இருந்த போது பிரபாகரன் அவர்கள் விடுதலைப்போராட்டம் சம்பந்தமாக மதுரையிலும் சில காலம் தங்கியிருந்தார் அப்போது நடைபெற்ற நிகழ்ச்சி இது.

மதுரையின் செல்லூர் பகுதியில் ஒர் இடத்தில் தமிழீழத்தின் ஆயுதப் போராட்டத்திற்காக சில ஆயுதங்கள் செய்யப்பட்டதாம்.அப்பட்டறையில் ஈழத்தில் இருந்து வந்திருந்த இளைஞர்கள் பலர் அப்பகுதியில் உள்ள சில இளைஞர்களுடன் இணைந்து அங்குள்ள பட்டறையில் வேலைப் பார்த்து வந்தனராம்.அப்பொது நடக்கும் வேலையை பார்வையிட ஒரு நாள் அவ்விடத்திற்கு வந்த மேதகு பிரபாகரன் அவர்கள் அங்கு உள்ளீரைச் சேர்ந்த தமிழ் தெரிந்த இளைஞர்கள் இருப்பதைக் கண்டு கவனமாக தமிழில் பேசாமல் சிங்களத்தில் பேசினாராம்.பின்னர் அங்குள்ள ஈழத்தைச் சேர்ந்த தனது படையினரிடம் இந்த இளைஞர்கள் யார் என சிங்களத்தில் கேட்டாராம்.அதற்கு அவர்கள் இவர்கள் இப்பகுதியைச் சேர்ந்த அகமுடையார் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என்று கூறினராம்.இதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த பிரபாகரன் அவர்கள் அந்த இளைஞர்களை அழைத்து உரையாடியதுடன் அதற்குப் பின் அங்கு இருக்கும் சில நாட்கள வரை தனது படையினரிடமும் தமிழிலேயெ பேசினாராம்.

இதைப் பற்றி பிராபகரனின் படையினர் இப்பொழுது இங்கு தமிழிலேயே பேசுவது ஏன் என்று மேதகு பிரபாகரனிடம் கேட்ட போது அதற்கு அவர்
அகமுடையார்கள் என்றுமே நம்பிக்கைக்குரியவர்கள் அவர்கள் எப்பொதும் நம்பிகைத் துரோகம் செய்ய மாட்டார்கள் என்றும் அதற்கு இரண்டு உதாரணங்களையும் சொன்னாராம்.

ஒன்று 200 ஆண்டுக்களுக்கு முன் மருதுபாண்டியர் எனும் மன்னர் தன்னிடம் அடைக்கலம் நாடிவந்த கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரையை காப்பதற்காக தனது சொத்து சுகம் மட்டுமல்லாது உயிரையும் துறந்தவர்.கடைசிவரை ஊமைத்துரையை காட்டிக்கொடுத்து விடும்படியும் அப்படிச் செய்தால் போரை நிறுத்தி விடுவதாகவும் ஆங்கிலேயர் கூறியும் கூட நம்பிவந்தவரை காட்டிக்கொடுப்பதை விட சாவது மேல் என்று சொல்லி கூறி அதை செய்தும் காட்டியவர் என்று சிலாகித்துக் கூறினாராம்.

மேலும் இலங்கையில் அகமுடையார்கள் தமிழீழம் போராட்டம் நடக்கும் பகுதியில் மிகக்குறைவான எண்ணிக்ககுயில் இருந்தபோதிலும் படையில் தங்கள் மக்கள்தொகை சதவீதத்தை விட அதிகமான எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதும் , நம்பிக்கையானவர்கள், திறமையானவர்கள் என்பதாலேயே படையில் பல முக்கிய பொறுப்புகளில் உள்ளதாகவும் பிறகெப்படி அகமுடையார் இளைஞர்கள் என்று தெரிந்ததற்குப் பிறகும் நம்பாமல் இருக்கமுடியும் என்று திருப்பிக்கேட்டாராம்.

குறிப்பு:
பிரபாகரன் அவர்கள் முதலில் அவ்வாறு கவனமாக பேசியதற்கு காரணம் இருந்தது.போராட்டம் என்பது மிகவும் தீவிரமானது.போரட்டத்தை உளவறிய எவரும் எப்படி வேண்டுமானாலும் வருவார்கள் என்பதால் புலிகள் அவ்வளவு எளிதாக யாரையும் நம்பிவிட மாட்டார்கள் ,நம்பிக்கை வைத்தால் மாறவே மாட்டார்கள்.அவ்வளவு கவனமாக இல்லாவிட்டால் போரட்டத்தை நடத்த முடியுமா என்ன?

புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டுஅம்மான் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் அகமுடையார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

இப்பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படம் மதுரையில் எடுத்தது ஆனால் இந்நிகழ்ச்சியில் குறிப்பிடப்படும் சம்பவத்தோடு தொடர்புடையது அல்ல.
அவ்வாறு மேதகு பிரபாகரானலேயே சிலாகித்துக் கூறப்பட்ட அகமுடையார் இனம் இன்று எத்தகைய சமூக/பொருளாதார/அரசியல் புறக்கணிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo