மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் இருந்த அகமுடையார் இளைஞருக்கு உதவ வந்த அனைத்து…

Spread the love
0
(0)

First
மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் இருந்த அகமுடையார் இளைஞருக்கு உதவ வந்த அனைத்து அகமுடையார் உறவுகளுக்கும் நன்றி!
————————————————————————————————————

சகோதரர்களே! அகமுடையார் இளைஞர் மருத்துவ தர வரிசை பட்டியலில் 18 வது இடம் பெற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளதையும் அவர் தனது அட்மிசனுக்கு பணம் கட்டமுடியாத சூழ்நிலையில் இருப்பது குறித்தும் அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தில் தெரிவித்து இருந்தோம்!

இது குறித்து நிறைய உறவுகள் தனிநபர்களாகவும்,அமைப்பில் இருந்தும் பேஸ்புக்கிலும்,வாட்ஸ்அப்லும்,தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு உதவிகள் புரிய தயாராக இருப்பதாக செய்தி அனுப்பியுள்ளார்கள். அவர்களுக்கு முதற்கணம் நன்றிகள்!

குறிப்பாக
தமிழ்நாடு அகமுடையார் மக்கள் மகாசபையில் அண்ணண் வெங்கடேஷ் அவர்கள் மற்றும் சகோதரர் ஆலடி செல்வா வெகுமுன்பாகவே
முழுமூச்சாக இதற்காக முயற்சி மேற்கொண்டு குறிப்பிட்ட இளைஞரின் தொலைபேசி எண்ணைப் பெறவும் முயற்சி மேற்கொண்டனர்.மேலும் தமிழ்நாடு அகமுடையார் மக்கள் மகாசபையின் வெளிநாடு வாழ் அகமுடையார்கள் குறிப்பிட்ட இந்த இளைஞருக்கு முழு உதவியும் செய்யத் தயாராக தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளித்துள்ளது.

அனால் தற்போது தமிழ்நாடு அகமுடையார் மக்கள் மகாசபையில் இருந்து சகோதரர் ஆலடி செல்வா ,புதிய தலைமுறை தொலைக்காட்சி சேனலை தொடர்பு கொண்டு பேசியதாகவும் அதற்கு அவர்கள் குறிப்பிட்டவருக்கு போதுமான உதவிகள் ஏற்கனவே கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆகவே மாணவரை தொடர்புகொண்டு நிலமையை கேட்டுத் தெரிந்து உதவிகள் தேவைப்பட்டால் தெரிவிக்கிறோம்!

அதே போல் சகோ யமாகா பாண்டியன் அவர்களும் எம் முயற்சிகளுக்கு தொடர்ந்து உதவுகின்றார்கள்.இவ்வாறு சமீபத்திய நிகழ்வுகளில் அகமுடையாரின் ஒற்றுமை வியக்கவைக்கிறது.தனிப்பட்ட பலரின் பெயரை இங்கு குறிப்பிட இயலாமைக்கு வருந்துகின்றோம். உதவி செய்ய முன்வந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எம் மனமார்ந்த நன்றிகள்!



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?