First
பாண்டியர்கள் அகமுடையார்களே! ஏற்கனவே பாண்டியர்களின் உறவினர்களான அகமுடையார்கள் என்பதன் நேரடி கல்வெட்டு 2 பதிவு செய்து உள்ளோம்
பார்க்க: http://www.agamudayarotrumai.com/3651
இன்னும் எத்தனையோ கல்வெட்டுக்கள் பாண்டியர் ஆட்சியில் அகமுடையார்கள் பெற்ற சிறப்புகளைச் சொல்கிறது. பாண்டியர்களுக்கு மந்திரியாக,தளபதியாக,உறவினர்களாக அகமுடையார்களே இருந்துள்ளதை பல்வேறு கல்வெட்டுக்கள் எடுத்துக்காட்டுகிறது!
கல்வெட்டுக்களைப் பார்க்க http://www.agamudayarotrumai.com/c/inscriptions
வாணாதிராயர்கள் தென்காசி,ராஜபாளையம், ஶ்ரீ வில்லிப்புத்தூர் , திருநெல்வேலி பகுதியை ஆண்ட செய்தி அறிந்ததே. அவ்வாறு ஆட்சி செய்த வாணாதிராயர்களே கடைசிப் பாண்டியர்களாக தென்காசியையும் ஆண்ட கடைசிப் பாண்டியர்கள் (தென்காசிப் பாண்டியர்கள் என்று அறியப்படுபவர்கள்) . தென்காசிப் பாண்டியர்கள் யார் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில் வெட்டு மாவெலி வம்சத்தைச் சேர்ந்த அகமுடையார்களே தென்காசிப் பாண்டியர்கள் என்பது தெரிகிறது!
கணக்கன் கூட்டத்தார் பட்டயமும் அகமுடையார்கள் தென்காசிப் பகுதியை ஆட்சி செய்த பாண்டியர் வழியினர் என்பதை தெளிவாகச் சொல்கிறது!
பார்க்க: http://www.agamudayarotrumai.com/3496
இதைப் பற்றிய குறிப்பு எதிர்பார்க்காத நாடார் வரலாற்று புத்தகம் ஒன்று(நாடார் மன்னரும் நாயக்க மன்னரும் -வெளியிடப்பட்ட ஆண்டு 1932) கிடைத்துள்ளது.தென்காசியில் உள்ள பெரியவரது ஏட்டுப்பிரதியில் தென்காசியை ஆண்ட பாண்டியர்களின் (வாணாதிராய பாண்டியர்களின்) முடிவினைப் பற்றிய செய்திகள் குறிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அந்த நாடார் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. வாணாதிராயர்கள் அகமுடையார்கள் என்பதால் தென்காசியை ஆண்ட வாணாதிராயர்களே கடைசிப் பாண்டியர்கள் எனும் போது இவர்கள் அகமுடையார்களே என்பதில் சந்தேகமே இல்லை.
இப்பகுதிக்குச் சென்று கள ஆய்வு செய்தால் நிறைய விவரங்கள் வரும். ஆனால் சமுதாயம் தான் அதற்குத் தயாராக இருப்பது போல் தெரியவில்லை. இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம்.
பார்க்க: http://www.agamudayarotrumai.com/1874
விரிவான பதிவு அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்