First
காலிங்கராயர் பட்டம்-அகமுடையார்கள்
———————————————-
“தானவநாடு நெடுவாசல் சீமைக்கு கர்த்தாவான பாண்டியப் பெருமாளான மாவெலி வாணாதராயர்” மக்களான ( மகன்களான)
திருமேனி அழகியரான குலசேகர காலிங்கராயரும்,பழையவனப் பெருமாளான சிவலக்காலிங்கராயரும்,செந்தாமரைக் கண்ணர் ஆகிய மூவர் வீரராசேந்தர சோழிஸ்வரமுடையார் நாயனாருக்கு (கோவில் இறைவனுக்கு) திருநாமத்துக்காணியாக ( கோவிலுக்கு அளிக்கப்படும் தானம்) நிலம் வழங்கியுள்ளனர்.(பார்க்க : படம் 1) Reference: புதுக்கோட்டை கல்வெட்டுத் தொகுதி ,கல்வெட்டு எண் 942 -தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடு
இதில் கவனிக்கப்பட வேண்டியது
தானவநாடு நெடுவாசல்- இது எங்கோ கேள்விப்பட்டது மாதிரி உள்ளது அல்லவா ,ஆம் இன்று மீத்தேன் பிரச்சனையில் சிக்கி அல்லல்படும் இயற்கை எழில் சூழ்ந்த புதுக்கோட்டை நெடுவாசல் ஊரே தான். இவ்வூரின் அன்றைய பேரும் நெடுவாசல் தான்! வாணாதிராயர்கள் ஆண்ட நெடுவாசலைத் தான் இப்போது வந்தேறிகள் சிதைக்க முயற்சிக்கிறார்கள்
பாண்டியப் பெருமாளான – பெருமாள் என்றால் அரசன் பாண்டியப் பெருமாள் என்றால் பாண்டிய அரசன் என்பது பொருள், முற்காலப் பாண்டியர்கள் தேவர் என்ற பட்டத்தை சூடியதைப் போல் பிற்காலப் பாண்டியர்கள் பெருமாள் என்ற பட்டத்தை சூடியுள்ளனர். உ.ம் அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506,
காலிங்கராயர் – காலிங்கராயர் பட்டத்தினை அகமுடையார்கள் பல்வேறு காலகட்டங்களில் பயன்படுத்தியுள்ளனர். இக்கல்வெட்டு வரிகளில் வரும் மாவெலி வாணாதராயர்” மக்களான ( மகன்களான) திருமேனி அழகியரான குலசேகர காலிங்கராயரும்,பழையவனப் பெருமாளான சிவலக்காலிங்கராயரும் என அகமுடையார்கள் காலிங்கராயர் பட்டத்தினை கொண்டிருந்தனர். பாண்டியர்களின் சிம்மாசனம் காலிங்கராயன் சிம்மாசனம் என்று அழைக்கப்பட்டதை நினைவில் கொள்க!
காலிங்கராயர் பட்டத்தில் அகமுடையார்கள் காணப்படுவது இது முதன்முறை அல்ல! ஏற்கனவே திருநின்றவூர் கல்வெட்டிலும் காலிங்கராயன் என்று அழைக்கப்பட்ட அகம்படியர் ஒருவரை பார்த்துள்ளோம்(பார்க்க : படம் 1) -Reference: Early history of Madras region 1957
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்