நம்மவர்களே மாற்று சாதியினரின் மேட்ரிமோனிகளின் திருமண மாலை நிகழ்ச்சிகளை ஆதரிப்பது ஏன்? அகமுடையார்மேட்ரி சேவையை ஆதரிக்க உறவுகளை வேண்டுகிறோம்
———————–
நான் ஒருவரை மட்டும் குறிப்பிடவில்லை. பொதுவாகவே குறிப்பிடுகிறேன்.சமீப காலமாக அகமுடையார்கள் சிலரே மாற்று சமுதாயத்தை சேர்ந்த சிலர் நடத்தும் மேட்ரிமோனிகளுடன் இணைந்து திருமண மாலை நடத்துவதாக கூறி மாற்று சமுதாயத்தினரின் பிசினசை நன்றாக பர்மோட் செய்கிறார்கள்.
ஆனால் அதேவேளை அகமுடையார்களுக்காகவே என்று அகமுடையார்மேட்ரி என்ற பெயரில் நாம் நடத்தும் திருமண தகவல் மையம் சர்வீஸை ஆதரிப்பது இல்லை அதுபற்றி பதிவிடுவதும் இல்லை.
சரி பரவாயில்லை. ஆனால் இப்பதிவின் நோக்கம். குறிப்பிட்ட அந்த மாற்று சாதி பிசினஸ் மேட்ரிமோனிகளுக்கும் நமது அகமுடையார்மேட்ரிக்கும் உள்ள வேறுபாட்டை நமது சமுதாய மக்களிடம் எடுத்துக்காட்டி எது சரியான வழி என்பதை எடுத்த்காட்ட உள்ளோம்!
குறிப்பிட்ட அந்த மேட்ரிமோனி நடத்துவர் நம் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவரா? இல்லை. அப்படி இருக்கையில் மாற்று சமுதாயத்தை சேர்ந்த அவரின் பிசினசை நாம் ஏன் ப்ரமோட் செய்ய வேண்டும்?
அதேநேரம் நமது அகமுடையார்மேட்ரி அகமுடையார் சமுதாயத்திற்காக அகமுடையாரின் முதல் கல்வெட்டு ஆரம்பித்து 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களையும் அதன் வாயிலாக இதுவரை 500க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் விழிப்புனர்வையும் ஏற்படுத்து 12 வருடங்களாக பணியாற்றும் அகமுடையார் ஒற்றுமையால் செயல்படுத்தப்படுவது ஆகும்.
குறிப்பிட்ட அந்த மேட்ரிமோனிக்காரருக்கு அகமுடையார் சாதியை பற்றிய புரிதல் இருக்குமா? அவர்களுக்கு முதலில் சாதி என்றால் என்ன பட்டம் என்றால் என்ன ? இந்த வேறுபாடு தெரியுமா? அந்த மேட்ரிமோனியில் வரன் பதிய வருபவர்கள் அகமுடையார் சாதி தான் என்பதை எந்த வகையில் உறுதி செய்கிறார்? மேட்ரிமோனியை பிசினசாக மட்டுமே பார்ப்பவர்கள் இதை செய்யவே முடியாது. செய்யவும் மாட்டார்கள்.
அதேநேரத்தில் அகமுடையார்மேட்ரியில் வரன் பதிய வரும் ஒவ்வொருவரிடமும் பேசுகிறோம் அவர்கள் பிண்ணனியை கேட்கிறோம். பல்வேறு வகையில் அவர்கள் அகமுடையார் சாதியை சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்த பிறகு தான் வரன் தகவலை அப்ரூவலே செய்கின்றோம்.
மாற்று சமுதாயத்தினர் நடத்தும் மேட்ரிமோனியில் 5000 ரூ தான் ஆரம்ப கட்ட மெம்பர்சிப் கட்டணமே வசூலிக்கிறார்கள்( வரியுடன் சேர்த்து) .ஆனால் நமது அகமுடையார்மேட்ரியில் மணமகன் வீட்டாருக்கு மட்டுமே மெம்பர்சிப் கட்டணம் அதுவும் ஆரம்பக்கட்டணம் ரூ500 மட்டுமே மெம்பர்சிப் கட்டணம். (இதற்கு முன் இதே கட்டணத்தை ரூ300 பெற்று மட்டுமே பல மாதங்களாக வாங்கியிருந்தோம்) ஆம் மாற்று சமுதாயத்தினரின் மேட்ரிமோனியில் அகமுடையார்மேட்ரியில் வாங்குவதை விட 10 மடங்கு அதிக கட்டணம் ரூ5000 வாங்குகிறார்கள்.
அதேநேரம் அகமுடையார்மேட்ரியில் பெண் வீட்டாருக்கு 1 ரூபாய் கூட கட்டணம் இல்லை. இதுவரை ஆயிரக்கணக்காண பெண் வீட்டார் அகமுடையார்மேட்ரியில் வரன் பதிவு செய்து உள்ளார்கள். எவர் ஒருவராவது ஒரு ரூபாயாவது கொடுத்துள்ளார்களா என்று கேட்டுப் பாருங்கள்! இல்லவே இல்லை! எந்த பெண் வீட்டாராவது அகமுடையார்மேட்ரியில் வரன் பதிவு செய்வதற்கோ அல்லது மணமகன் வீட்டார் நம்பர் எடுப்பதற்காகவே அகமுடையார்மேட்ரியில் 1 ரூபாய் பணம் செழுத்தியிருந்தால் இப்பதிவில் பொதுவெளியிலேயே குறிப்பிடலாம்.
இத்தனைக்கும் அகமுடையார்மேட்ரியில் சிறந்த முறையில் மேட்ரிமோனி வெப்சைட் அமைத்து அதை தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறோம் அதோடு மேட்ரிமோனிக்கு அப்ளிகேசனும் வழங்கி அதன் வழியாகவும் வரன்களை வழங்கி வருகிறோம்.
அதுமட்டுமல்ல அகமுடையார் சமுதாயத்திற்கு பணி செய்தவர்கள் வரும் போது அவர்களுக்கு அகமுடையார்மேட்ரியில் முற்றிலும் இலவச மெம்பர்சிப் வழங்கியுள்ளோம்.
அதேபோல் மறுமணத்திற்கு அகமுடையார்மேட்ரியிடம் வந்த அகமுடையார் மணமகன் வீட்டாரிடமும் கூட நாங்கள் இதுவரை 1 ரூபாய் கூட வாங்கியதில்லை. அனைவருக்கும் இலவசமாகவே மறுமண வரன்களை வழங்கியுள்ளோம். மறுமணம் என்று வருகின்ற அனைவருக்கும் மறுமண வரன்களை இலவசமாகவே வழங்கியுள்ளோம்.இதுபோல் மாற்று சாதியை சேர்ந்த அந்த மேட்ரிமோனி சேவை வழங்குமா இல்லை இதில் ஒரு 1 சதவீதமாவது சேவை வழங்குமா?
குறிப்பு:
சொல்வதென்றால் இதுபோல் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் ஒன்றே ஒன்று. அகமுடையார்மேட்ரி என்ற பெயரில் அல்லாது முக்குலத்தோர் மேட்ரிமோனி என்ற பெயரில் மேட்ரிமோனி சேவை வழங்கியிருந்தால் இதே செலவில் ஆனால் இதை விட 3 மடங்கு மக்களிடம் நமது பணிகளை கொண்டு மிக எளிதாக கொண்டு சென்றிருக்க முடியும் ஆனால் அகமுடையார்களுக்காகவே என்று அகமுடையார்களுக்காகவே என்று செலவு செய்து நாம் பணி செய்து வருகிறோம். ஆனால் நம்மவர்களோ மாற்று சமுதாயத்தினரின் பிசினசோடு இணைந்து கல்யாண மாலை நடத்துகிறோம் என்று பர்மோட் செய்கிறார்கள். ஏன் அப்படி செய்கிறார்கள் என்று தான் புரியவில்லை.
அகமுடையார்மேட்ரிமோனியின் திருமண சேவையை ஆதரிக்க விரும்புவர்கள் இப்பதிவை சேர் செய்யலாம் அல்லது இப்பதிவில் உள்ள புகைப்படத்தை உங்களுக்கு தெரிந்த பேஸ்புக்,வாட்ஸ்அப், டெலிகிராம் குருப்களில் பதிவிடலாம் அல்லது உங்களுக்கு தெரிந்த உறவுகளிடம் நமது மேட்ரிமோனி பற்றி தெரிவிக்க வேண்டுகிறோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
உண்மை தான்