@followers அகமுடையாரின் வன்னியர் பட்டம் கல்வெட்டு ஆதாரம்(தானவநாடு வத்தராயர் , காலிங்கராயர் பட்டம்)
————————————-
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பான பதிவுகளில் அகம்படியர் சாதியை சேர்ந்த தானவநாட்டு சேந்தங்குடி ஜமீன் மற்றும் அவர்களை சார்ந்த அகம்படியர்களுக்கு வன்னியர் பட்டம் இருந்ததற்கான நீதிமன்ற வழக்கு ஆவணங்களை வெளியிட்டிருந்தோம்.
இப்போது அகம்படியர் சமுதாயத்திற்கு வன்னியர் பட்டம் இருந்தற்கான காலத்தால் முந்தைய அதுவும் முதன்மை வரலாற்று தரவுகளான வரலாற்று ஆதாரங்களை இப்பதிவில் சுருக்கமாக விளக்குகின்றோம்.
ஏன் என்றால் வன்னியர் பட்டம் மற்றும் பிரிவுகள் இன்று பல்வேறு சாதிகளுக்கு இருக்கலாம். அதில் நிறைய பேருக்கு வெறுமனே புகழ்ச்சிகுரிய பெயராக இதை அவர்கள் அப்பட்டங்களை போட்டிருக்கலாம்.
ஆனால் அகமுடையார்களின் சிறப்பு என்னவென்றால் அகமுடையார்கள் தங்கள் மரபு குறித்த செய்திகளை வரலாற்றில் தொடர்ச்சியாக பதிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் அகமுடையார்களுக்கு வன்னியர் பட்டம் ஏதோ 1940களில் உள்ள வழக்கில் உள்ள சான்றை வைத்து 1940கள் காலத்தில் மட்டும் வழக்கத்தில் இருந்ததல்ல அது ஆயிரக்கணக்கான வருடங்களாக இருந்து வருகிறது என்பதை கல்வெட்டுக்கள் மூலம் இக்கட்டுரையில் எடுத்துக்காட்ட உள்ளோம்.
அகமுடையார்களுக்கான இந்த வன்னியர் பட்டமானது வாண அரசர்கள் மூலமாகவே கிடைத்தது என்பதையே கல்வெட்டுக்கள் எடுத்துக்காட்டுகின்றன.
புதுக்கோட்டை பகுதியில் கிடைத்த குலசேகர பாண்டியன் காலத்து(கி.பி 13ம் நூற்றாண்டு அல்லது அதற்கும் முந்தைய) கல்வெட்டு செய்தியில் (கல்வெட்டு எண் 942ல்)
பார்க்க படம் : 1
“தானவநாட்டு நெடுவாசல் சீமைக்கு கர்த்தரான பாண்டிய பெருமாளான மாவலி வாணதராயர் மக்களில் குலசேகர காலிங்கராயரும், பழையவன பெருமாளான சீவலகாலிங்கராயரும் செந்தாமரைக்கண்ணரும் இம்மூவரும்” என்ற கல்வெட்டு வரிகள் காணப்படுகின்றன.
இதன் மூலம் 13ம் நூற்றாண்டிலேயே மாவலி வாணதராயர் அரசர்கள் தானவநாட்டு நெடுவாசல் பகுதியின் ஆட்சியாளர்களாக (சீமைக்கு கர்த்தர் என்று) குறிக்கப்படுகின்றனர். அதோடு
வாணாதராயர்களின் மகன்களில் ஒருவர் காலிங்கராயர் என்று அழைக்கப்படுகின்றார் . இதே காலிங்கராயர் பட்டமானது தானவநாட்டில் இன்றும் புழக்கத்தில் இருந்து வரும் பட்டமாகும்.
இதே பகுதியில் கிடைத்த மற்றொரு கல்வெட்டு செய்தியில் (கல்வெட்டு எண் 971 )
பார்க்க படம் : 2
“நெடுவாசல் வன்னியரில் மாவெலி வாணதராயர் மக்களில் பெற்… காலிங்கராயரும் …” என்ற வரிகள் காணப்படுகின்றன.
இக்கல்வெட்டில் வரும் “நெடுவாசல் வன்னியரில் மாவெலி வாணதராயர்” என்பதை
முன்னர் பார்த்த கல்வெட்டு செய்தியில்
“நெடுவாசல் சீமைக்கு கர்த்தரான மாவலி வாணதராயர் ” என்பதுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது
தானவநாட்டு நெடுவாசல் பகுதியை ஆண்ட வாணதிராயர்களுக்கு “வன்னியர்” பட்டம் இருந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம் என்பதோடு அரசர் என்ற பொருளில் தான் வன்னியர் என்பது வாணர் அரசர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
வேண்டுமென்றால் மீண்டும் பாருங்கள்!
“நெடுவாசல் வன்னியரில்” -மாவெலி வாணதராயர்
“”நெடுவாசல் சீமைக்கு கர்த்தரான” -மாவெலி வாணதராயர்
சரி வாணதராயர்கள் வன்னியர் பட்டத்தில் இருந்தார்கள் சரி! அவர்கள் தானவ நாட்டுப் பகுதியை ஆட்சி செய்தார்கள் அவர்களுக்கு வன்னியர் பட்டமும்,காலிங்கராயர் பட்டமும் இருந்ததும் சரி!
அதற்கும் அகமுடையாருக்கும் என்ன சம்பந்தம்?
மாவலி வழியினர் என்று அழைக்கப்பட்ட வாணர் அரசர்களே அகம்படியர் சாதியினர் என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளோம்.
இருப்பினும் அகமுடையாருக்கான வன்னியர் பட்டத்தில் வேறு சான்றுகளையும் தருகிறோம்.
ஆறகளூர் பகுதியில் கிடைத்த இராசராச கோவலராயன் காலத்து கல்வெட்டு செய்தியில்
“அகம்படி முதலிகளில் ஆச்சன் கல்லையான வன்னிய வேளான்” என்கிற கல்வெட்டு வரிகள் காணப்படுகின்றன.
பார்க்க படம் : 3
ஆதாரம்: கல்வெட்டு செய்தியை மேற்கொளாக கொண்டு வாண அரசர்களை பற்றி எழுதப்பட்ட நூல்: பொன்பரப்பின மகதேசன்
இதன் மூலம் ஆச்சன் கலை எனும் அகம்படியர் இனத்தவனுக்கு முதலி பட்டத்துடன் வன்னியர் பட்டமும் இருந்தது தெரிய வருகின்றது.
இதோடு முடியவில்லை .இன்னும் கல்வெட்டு ஆதாரம் இருக்கின்றது.
இன்றைய பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் திருவாலீஸ்வரம் உடையார் கோவிலில் கிடைத்த மூன்றாம் இராசராசனின்(கி.பி 1219ம் ஆண்டு) காலத்து கல்வெட்டு செய்தியில்
“வன்னாட்டார் பெயரிட்டேன் நாயனார் சாமந்த முதலிகளில்
மீனவன் வத்தராயன் அகம்படியாரில் கோவன் தெற்றி பொன்பரப்பினானன திருஞான சம்பந்தனேன் ”
என்ற வரிகள் காணப்படுகின்றன.
பார்க்க படம் : 4
இதில் கோவன் தெற்றி எனும் அகம்படியர் இனத்தவன் கோவிலுக்கு நந்தவனம் அமைத்து அதற்கு வண்ணாட்டார் (வன்னிய நாட்டார் -வன்னிய பிரிவை சேர்ந்த தலைவன்) என்று தனது பிரிவு பெயரை சூட்டியுள்ளார் . இதன் மூலமும் அகம்படியருக்கு வன்னியர் பட்டம் இருந்ததை அறிய முடிகின்றது.
அதுமட்டுமல்ல கோவன் தெற்றி என்பவர் வெறும் படைத்தளபதி (சாமந்த முதலி ) மட்டுமல்ல இவர் வாணர் குலத்தவர் என்பது இவர் பெயருக்கு பின்னால் வரும் பொன் பரப்பினான் என்ற பெயர் மூலம் தெரியவருகிறது. இது அகம்படியர்களுக்கு இருந்த வன்னியர் பட்டத்தை உறுதி செய்வதோடு வாணர்களுக்கு இருந்த வன்னியர் பட்டத்தையும் இந்த கல்வெட்டு உறுதி செய்கிறது.
தானவநாடு அருகில் உள்ள நொடியூர் பகுதியில் கிடைத்த 14ம் நூற்றாண்டு கல்வெட்டு செய்தியில்
“வன்னிய மிண்டர் அகம்படியாரில் வளத்தார்” என்ற வரிகள் காணப்படுகின்றன.
பார்க்க படம் : 5
இதன் மூலமும் அகம்படியர்களுக்கு வன்னியர் என்ற பட்டம் இருந்தது தெரியவருகின்றது. அதேநேரம் ஆனால் கல்வெட்டு படிக்கின்ற சிலர்
வளத்தார் எனும் அகம்படியார் வன்னிய மிண்டர் என்பவரிடம் பணிபுரிந்தவர் என்று படிப்பார்கள் ஆனால் இது ஓர் ஆராய்ச்சி பிழை.
வன்னிய மிண்டர் என்பது அடைமொழியே தவிர பெயர் இல்லை. ஆகவே வளத்தார் எனும் அகம்படியாரே வன்னிய மிண்டர் என்று அழைக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவு. மேலும் மேலே பார்த்த கல்வெட்டுக்களை ஒப்பிடும் போது வளத்தார் என்பவரே அகம்படியரே வன்னிய மிண்டர் எனும் அடைமொழியில் குறிப்பிடப்படுவர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வளத்தார் என்பது சோழர் மற்றும் வாணர்களுக்குரிய பட்டம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல்வேறு கல்வெட்டுக்கள் அகம்படியர்களுக்கு (இன்றைய அகமுடையார் )சாதியினருக்கு வன்னியர் பட்டம் இருந்ததை உறுதி செய்கின்றது.
அதே போல் நிலப்பத்திரங்களும், நீதிமன்ற ஆவணங்களும் இதை உறுதி செய்கின்றன.
அதுமட்டுமல்ல
1891ல் எடுக்கப்பட்ட சென்செஸ் எனும் மக்கள் தொகை கணெக்கெடுப்பு அறிக்கையில்
அகமுடையார்களின் பிரிவுகளில்
“வணங்காமுடி, வன்னாடு, வன்னியன்,வன்னிய பிள்ளை ” போன்றவை தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
பார்க்க படம் : 6
1000 வருடத்திற்கு முன் கல்வெட்டில் நாம் பார்த்த
வன்னியர் பட்டம் மட்டுமல்ல
வன்னாட்டார் என்ற கல்வெட்டில் குறிப்பிடப்படும் பட்டமும் கூட
1000 வருடங்கள் தாண்டி 1891ம் வருடமும் அகமுடையார்களிடையே புழக்கத்தில் இருந்ததை மக்கள் தொகை கணக்கீடு தகவல் காட்டுகிறது.
இது போன்ற வரலாற்று தொடர்ச்சியான ஆதாரங்கள் அகமுடையார்களின் வன்னியர் பிரிவை பற்றி அசைக்க முடியாத ஆதாரங்களாக உள்ளது.
அதுமட்டுமல்ல இன்றும் அறந்தாங்கி பகுதியில் வன்னிய பிள்ளை பிரிவினர் அகமுடையாரின் பிரிவினராகவும் மற்ற பிரிவு அகமுடையார்களுடன் (சேர்வை பட்டம் அகமுடையார்களுடன்) திருமணம் செய்பவர்களாகவும் மாற்று சாதிகளில் திருமணம் செய்யாதவர்களாகவும் உள்ளனர் .
மேலதிக தகவல் சில
இருநாட்களுக்கு முன் பதிவு செய்த அகமுடையார்களின் வன்னியர் பட்டம் நீதிமன்ற ஆவணங்களை பார்க்காதவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று பார்க்கவும்
https://www.facebook.com/agamudayarotrumai/posts/pfbid02MLUankhYrDos6AkoJGhZmsLtGZB12iE9icsJwqKMZoakxQzYY1Pb2aYys1b97z88l
https://www.facebook.com/agamudayarotrumai/posts/pfbid02MLUankhYrDos6AkoJGhZmsLtGZB12iE9icsJwqKMZoakxQzYY1Pb2aYys1b97z88l
வாணாதராயர் மக்களில் காலிங்கராயர் பட்டம் பற்றி பார்த்தோம் அல்லவா.
அகமுடையாரில் காலிங்கராயர் பட்டம் கொண்ட அகம்படியர்கள் கி.பி 14ம் நூற்றாண்டு படுவூர் கல்வெட்டு செய்தியிலும் குறிக்கப்படுகின்றனர்.
இவர்கள் 8ம் நூற்றாண்டு முதலே படுவூரை ஆண்ட வாணர் குல அரசர்களின் வழியினர் இந்த கல்வெட்டை பற்றி ஏற்கனவே பதிவிட்டுள்ளோம்.
பார்க்காதவர்கள் பார்க்க லிங்க:
https://www.facebook.com/891728770860514/posts/1342103785823008
இப்பதிவில் நாம் பார்த்த கோவன் தெற்றி பொன்பரப்பினான் கல்வெட்டில் கோவன் தெற்றி அகம்படியாருக்கு மீனவன் வத்தராயன் என்ற பட்டங்களும் இருப்பதை காணலாம். இதில் மீனவன் என்பது பாண்டிய நாட்டை வாணர்கள் ஆட்சி செய்ததால் கிடைத்ததாகும். இதே கட்டுரையில் குறிப்பிடும்
“”தானவநாட்டு நெடுவாசல் சீமைக்கு கர்த்தரான பாண்டிய பெருமாளான மாவலி வாணதராயர்” கல்வெட்டிலும் வாணர்கள் பாண்டிய நாட்டின் நிர்வாகிகளாக குறிக்கப்படுகின்றனர் . இதற்கு வேறு கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளன. அதைவிட முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த கோவன் தெற்றிக்கு வத்தராயன் என்ற பட்டமும் இருந்துள்ளது.
வத்தராயன் என்பது வாணர்களுக்குரிய பட்டமாகும். இதற்கு பல்வேறு கல்வெட்டுக்கள் ஆதாரமாக உள்ளன. அதையெல்லாம் இக்கட்டுரையில் குறிப்பிட்டால் இக்கட்டுரை பெரிதாக நீண்டு விடும்.ஆனால் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் வாணாதிராயர்களின் காலிங்கராயர் பட்டத்தை போலவே
வத்தராயர் என்ற பட்டமும் தானவநாட்டில் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. அத்தகைய வத்தராயர் பட்டத்தையே இந்த கோவன் தெற்றி எனும் அகம்படியார் கொண்டிருந்தார் என்பதும் அகமுடையார்களுக்கான பட்டமே வத்தராயர் என்பதும் தானவ நாட்டார் தெரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும்.
இது போல் நிறைய நிறைய ஆதாரங்கள் உள்ளன. விரைவில் அதையும் பதிவு செய்வோம்.
ஆதாரம்: மத்திய அரசு கல்வெட்டு ஆண்டறிக்கை 1939-44
“தானவநாட்டு நெடுவாசல் சீமைக்கு கர்த்தரான பாண்டிய பெருமாளான மாவலி வாணதராயர் மக்களில் குலசேகர காலிங்கராயரும், பழையவன பெருமாளான சீவலகாலிங்கராயரும் செந்தாமரைக்கண்ணரும் இம்மூவரும்”
என கி.பி 13ம் நூற்றாண்டு முதலே வாணாதராயர் கட்டுப்பாட்டில்
“நெடுவாசல் வன்னியரில் மாவலி வாணதராயர் மக்களில் … காலிங்கராயரும் “
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்