First
நன்கொடை வழங்கிய பொதும்பு சேர்ந்த திரு.ச.தனபாலன் அவர்களுக்கு நன்றியும்- முன்மாதிரியான சின்னமனூர் அகமுடையார் சங்கத்தின் மகத்தான பணியும்
——————————
நமது அகமுடையார் விழிப்புனர்வு நூலுக்கு மதுரை பொதும்பு சேர்ந்த திரு.ச.தனபாலன் அவர்கள் ரூ1000 நன்கொடை வழங்கியுள்ளார்கள்!
அவருக்கு அகமுடையார் ஒற்றுமை சார்பாக மிக்க நன்றிகள்!
அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது ஓர் முக்கிய விடயத்தையும் நம்மிடம் குறிப்பிட்டார்.
அதாவது சின்னமனூர் அகமுடையார் மக்கள் மன்றம் என்ற பெயரில்
அகமுடையார்கள் ஒருங்கிணைந்து செயல்படுதையும் அவர்கள் அதே பெயரில் மண்டமும் அமைத்து மண்டபத்தின் முன்பு மருதுபாண்டியர்களுக்கு சிலையும் அமைத்து வழிபடுகின்றனர் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.
ஆனால் அறியாத விடயம் என்னவென்றால்
சின்னமனூர் அகமுடையார் சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் வீட்டில் திருமணம் நடக்கும் போது வெளியில் இருந்து பெண் வருவதாக இருந்தாலும் சரி , இங்கிருந்து பெண்கள் திருமணமாகி சென்றாலும் சரி
இந்த சங்கத்தின் முக்கிய கமிட்டி மெம்பர்கள் 4-5 பேர் அந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொண்டு வேலை ,படிப்பு சீர்வரிசை ,திருமண செலவுகள் உள்ளிட்ட விசயங்களை இரு வீட்டாரிடமும் நேரில் பேசி ஒப்புதல் பெற்று அதை எழுத்து வடிவிலும் வாங்கி விடுகின்றனர்.
ஆம் இது ஓர் அருமையான ஓர் நடைமுறை! பெரும்பாலான திருமணங்களில் முதல் பிரச்சனை தொடங்குவதே
கூறாத நகை, சீர்வரிசைகளை பெண் வீட்டாரிடம் எதிர்பார்ப்பதும்
செய்ய முடியாத பெண் வீட்டாரிடம் தொடர்ந்து கேட்டு கொடுமைப்படுத்துவது என்பது இப்போதும் நடக்கவே செய்கிறது.
பொதுவாக இன்று நடக்கும் பெரும்பாலான திருமணங்களில் இவ்வாறான விசயங்களை இருதரப்பில் உள்ள பெரியவர்களை வைத்து முடிவு செய்வது கிடையாது. இரு குடும்பத்தார் மட்டுமே ரகசியமாக பேசிக்கொள்கிறார்கள்.பின்னர் பிரச்சனை என்று வரும் போது இருதரப்பிலும் பேசுவதற்கு ஆட்கள் இல்லாமல் பிரச்சனை டைவர்ஸ் வரை சென்று முடிகின்றது!
ஆனால் இவ்வாறு இல்லாமல் சின்னமனூர் அகமுடையார் சங்கத்தில்
திருமண நிச்சயத்தின் போது பேசி முடிவெடுப்பது மட்டுமின்றி அதை எழுத்து வடிவில் ஆவணப்படுத்தி விடுவதால்
இதன் மூலம் ஒருவரை ஒருவர் மாற்றி பேசி திருமணத்தில் ஏற்படும் பாதி பிரச்சனைகளை தீர்த்து விடுகின்றனராம்.
இதையெல்லாம் மீறி திருமணத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் பேசி சுமுகமாக பேசி முடித்து பல டைவர்ஸ் பிரச்சனைகளை தவிர்த்து விடுகின்றனராம். ஏதோ ஒர் தரப்பினர் கட்டுப்படாத நிலை ஏற்படும் போது மட்டுமே அவர்களை வெளியில் சென்று தீர்த்துக்கொள்ள விட்டுவிடுகின்றனர்.
எவ்வளவு அருமையான நடைமுறை! சின்னமனூரில் அகமுடையார் சங்கம் உறுதியாக செயல்படுவதின் காரணம் இப்போது புரிகிறது!
இதை போலவே ஒவ்வொரு ஊர் அகமுடையார் சங்கங்களும் செயல்பட்டால் அகமுடையார்களுக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். பாதுகாப்பு மேம்படும்! நாம் நினைத்ததை நிறைவேற்றவும் முடியும்!
சின்னமனூர் அகமுடையார் சங்கத்திற்கு அகமுடையார் ஒற்றுமை சார்பாக பாராட்டுதல்கள்!
சரி இப்போது நமது விழிப்புணர்வு நூல் நன்கொடை விசயத்திற்கு வருவோம்!
நமது அகமுடையார் விழிப்புணர்வு நூலை வெளியிட்டு நன்கு செயல்படும் 10 அகமுடையார் சங்கங்களுக்கு தலா 100 காப்பிகள் என
1000 காப்பியாவது வழங்க திட்டமிட்டுள்ளோம்! நூல் ஒன்றுக்கு தலா ரூ50 என்று கணக்கிட்டால் 1000 காப்பிக்கு 50,000 செலவாகும்.
இதுவரை ரூ7000 வசூலாகியுள்ளது.
இப்போது இருக்கும் தேவையை கொண்டால் கூட ரூ43,000 இன்னும் தேவை.
இதுவரை நன்கொடை வழங்கியவர்கள் பட்டியல்
——————-
இராமநாதபுரம் சகோ. திரு.இரத்தினவேல் சரவண பாண்டியன் ரூ1000
சிதம்பரம் திரு. அருள் அண்ணன், ரூ1000
இராமநாதபுரம் சகோ. சிவா சேது சீமை ரூ1000
பழனி சகோ. ரகுநாத் என்கிற ரகு ரூ3000
மதுரை பொதும்பு திரு.தன்பாலன் ரூ1000
விழிப்புணர்வு நூலை பற்றி அறிய விரும்புவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து ஏற்கனவே செய்த பதிவை பார்க்க வேண்டுகிறோம்.நன்றி!
https://www.facebook.com/agamudayarotrumai/posts/pfbid02CoJYMY8CsfJyd78jxPUUNoB2cfH1uXSoqS6FCNsbAGo92DSkr8Lg63EqcZLAL2x2l
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்