இடைத்தரகர் இல்லாத அகமுடையாருக்கு மட்டுமான திருமண வரன் சந்திப்பு விழா- அரிய வாய்ப…

Spread the love

இடைத்தரகர் இல்லாத அகமுடையாருக்கு மட்டுமான திருமண வரன் சந்திப்பு விழா- அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அழைக்கின்றோம்.
————————————————-
அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கமும் , அகமுடையார்மேட்ரியும் இணைந்து வரும் 7ம் தேதி சென்னை மடிப்பாக்கம் மருதுபாண்டியரில் அகமுடையார் திருமண வரன் சந்திப்பு விழாவை நடத்துவது நீங்கள் அறிந்ததே!

ஆனால் இந்த நிகழ்வில் ஏன் பங்கேற்க வேண்டும்?

நூற்றுக்கணக்கான வரன் வீட்டாரை நேரில் பார்க்கும் வாய்ப்பு-
போனில் பேசுவதை விட நமது திருமண வரன் அறிமுக விழாவில் கலந்து கொள்ளும் போது வரன் மட்டுமல்லாது வரனின் குடும்ப உறுப்பினர்களை நேரில் பார்த்து அவர்கள் நமது குணத்திற்கு சரியாக வருவார்களா என்பதை நேரிலே பார்த்து உறுதி செய்து கொள்ள முடியும்!

அதுவும் நூற்றுக்கணக்கான வரன் வீட்டாரை ஒரே இடத்தில் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பது அரிது.

போனிலேயே பேசுவதை விட நேரில் பார்க்கும் போது திருமண நிச்சயமாகும் வாய்ப்பும் மிகவும் அதிகம்!

அகமுடையார் சாதியினர் மட்டுமே- நிகழ்வுக்கு வருகிறவர்களிடம் அந்தந்த ஊரின் உறவை கேட்டும் உறுதி செய்கிறோம் மேலும் பதியும் போதே சாதி சான்றிதழை பார்த்தும் உறுதி செய்துகொள்கிறோம். அகமுடையார் தவிர்த்து வேறு சாதியினருக்கு அனுமதி இல்லை.

இடைத்தரகர் தொல்லை இல்லை- ஆம்! நிகழ்ச்சியில் வரன் வீட்டார் மட்டுமே பங்கேற்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்கிறார்கள். புரோக்கர்களுக்கு இந்த நிகழ்வில் இடம் இல்லை. இடைத்தரகர் இல்லை என்பதால் நேரடியாக இரு வரன் வீட்டாரும் நேரடியாக பேசிக்கொள்ளலாம். திருமண கமிசன் இல்லை.

இலவச வரன் பதிவு– ஆண்,பெண் இருவருக்குமே வெப்சைட் மற்றும் அப்ளிகேசனில் வரன் பார்ப்பதற்கு இலவச திருமண வரன் பதிவு செய்யப்படும். வரன் பதிவதற்கு கட்டணம் ஏதும் இல்லை.

பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை- வெப்சைட் மற்றும் அப்ளிகேசனில் வரன் பார்ப்பதற்கு பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை .மணமகன் தகவல்களை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் மாப்பிள்ளை வீட்டார் தகவல்களை அவர்கள் தொலைபேசி எண்ணுடன் எடுத்துக்கொள்ளலாம்.

பங்கேற்பு கட்டணம் மட்டுமே-நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குடும்பம் ஒன்றிற்கு ரூ300 மட்டுமே கட்டணம் .இது நிகழ்ச்சி செலவுகளுக்காக மட்டுமே வசூலிக்கப்படுகிறது
( பெற்றோர் +வரன் என 3 பேர் கலந்து கொண்டாலும் பங்கேற்பு கட்டணம் ரூ300 மட்டுமே) .நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இது ஓர் அரிய வாய்ப்பு!

Click here to Follow Instagram Page to Get Updates Instantly

Source

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo