நந்தி கொடி ,நந்திநாதர்,நந்தி பன்மன்(வர்மர்) அகமுடையார் இனத்தினுடையது ———–…

Spread the love
0
(0)

First
நந்தி கொடி ,நந்திநாதர்,நந்தி பன்மன்(வர்மர்) அகமுடையார் இனத்தினுடையது
————————————-
#nandhivarman திரைப்படம் இன்று வெளியாவதாக அறிந்தோம். இத்திரைப்படம் பல்லவ அரசர்களின் வரலாற்றை பிண்ணனியாக கொண்டு இப்படத்திற்கு நந்திவர்மன் என்று பெயரிடப்பட்டதாக அறிந்தோம்.
நந்திவர்மன் என்பதில் உள்ள நந்தி என்ற அடையாளம் அகமுடையார்களுக்குரியதாகும் பல்லவர்க்குரியது அல்ல இதை விளக்கும் சிறு பதிவு இது.

பல்லவர்கள் பெர்ஷிய நாட்டு சிங்கத்தின் உருவத்தை தங்கள் கொடியாக உடையவர்கள்.

அதேநேரம் நந்தி என்பது காலம் காலமாக 2000 வருடங்களுக்கும் மேலாக அகமுடையார்கள் அடையாளமாகவும் ,குலச்சின்னமாகவும் கொண்டு வாழ்ந்து ,தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளனர் என்பது வரலாற்று ஆதாரங்கள் மூலம் தெரியவருகிறது. சிங்க கொடியை கொண்டிருந்த பல்லவர்கள் , வாணர் ஆண்ட பகுதியை பின்னாளில் கைப்பற்றிய போது வாணர்களின் நந்தி கொடியை தங்கள் கொடியாகவும் ,தங்களை நந்தி என்ற அடையாளத்திற்குள் கொண்டு வந்து தங்கள் பெயரில் கூட நந்தி என்ற பெயரை பயன்படுத்த தொடங்கினர்.

ஆனால் பல்லவர்கள் ஆட்சி தமிழகத்தில் நிலைகொள்ளும் முன்பாகவே (2000 ஆண்டுகளுக்கும் முன்பாகவே) அகமுடையார்களின் வாணர் குலத்தவர்கள் தங்களின் சின்னமாக நந்தி (காளை) கொடியையும், வாணர் அரசர்கள் தங்களை நந்திநாதன்,நந்திநாதர் என்று அழைத்துக்கொண்டனர்.இவர்கள் ஆட்சி செய்த பகுதி நந்தகிரி என்று அழைக்கப்பட்டது.

கி.பி 338 ஆம் ஆண்டு காலத்தில் வெளியிடப்பட்ட முடியனூர் செப்பேட்டில் கர்நாடக பகுதியை ஆட்சி செய்த வாணர்கள் நந்தகிரி எனும் ஊரை தலைநகராக கொண்டிருந்தனர். இட்ன்ஹ செப்பெட்டை வெளியிட்டவன் நந்திவர்மன் எனும் சிவபெருமானுக்கு அகம்படியராக இருந்த மஹாபலி வழிவந்த வாணர் குல அரசன் ஆவான்.

ஆதாரம்:
Epigraphia Carnatica 12 volumes 1886 to 1904
பார்க்க இணைப்பு : 1

ஆக பல்லவருக்கும் பல காலம் முன்பாகவே நந்தி என்பது அகமுடையார்களின் அடையாளமாக இருந்தது என்பதை புரிந்துகொள்ளலாம்

அதுமட்டுமல்ல
சோழ அரசர்களின் உதவியோடு
பாண(வாண) அரசர்களை தோற்கடித்த கங்கமன்னன் பிரிதிவிபதி என்பவன் பாண அரசர்கக்குரிய நந்திநாதன் என்றும் பரிவிபுராதிபதி( கோட்டை நகரங்களின் தலைவன் ) என்ற பட்டங்களை தன் பட்டமாக சேர்த்துக் கொண்டான்

ஆதாரம் : நூல்: Karanatka Through Ages
பார்க்க இணைப்பு : 2

கல்வெட்டுக்களில் மட்டுமல்ல இலக்கியங்களிலும் நந்தி தேவர் சிவபெருமானுக்கு அகம்படி செய்பவர் ,சிவ கணங்களின் தலைவர் என கணத்ததோர் அகம்படியர் குலத்தவரின் அடையாளமாக நந்திதேவர் குறிப்பிடப்படுகிறார்.

மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியை
கைத்தாள் கொண்டாருன் திறந்தறி வாரில்லை
பொய்த்தாள் இடும்பையைப் பொய்ப்புற நீவிட்டங்கு
அத்தாள் திறக்கில் அரும்பேற தாமே –திருமந்திரம்

அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
நங்குரு மரபிற் கெல்லாம் முதற்குரு நாத னாகிப்
பங்கயந் துளவம் நாறும் வேத்திரப் படைபொ றுத்த
செங்கைஎம் பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி -காஞ்சிப் புராணம்

இத்தகைய நந்திதேவர் போலவே நந்தியை தங்கள் அடையாளமாக கொண்டு வாண அரசர்கள் தங்கள் கல்வெட்டுக்ள்,செப்பேடுகளில் இதை வெளிப்படுத்தியுள்ளனர்

உதாரணத்திற்கு வாணர்களை பொறுத்தவரை தங்களை

சிவபெருமானுக்கு வாயில்காவலராகவும் கணமாகவும்(அகம்படி) பணிபுரிந்த மகாபலி வழிவந்தவர்கள் (100க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள்,செப்பேடுகள்,நடுகற்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன)
ஏற்கனவே வெளியிட்ட ஒரு சில ஆதார லிங்கை இதற்கு தருகிறோம்
https://www.facebook.com/100063919813164/posts/722688249871829

https://www.facebook.com/100063919813164/posts/470780361729287

விஷ்ணுவிற்கு வாயில்காவலராகவும் கணமாகவும் பணிபுரிந்த ஜெயா ,விஜயா என்பவர்களின் மறுபிறப்பாக பிறந்த ஹிரண்ய கசிபு,ஹிரண்யாட்சன் எனும் வாணர் குல முன்னோர்கள். ( பாகவத புராணம் உள்ளிட்ட பல்வேறு புராணங்கள்)

அகமுடையார் அரசர் மட்டுமல்ல வேறு அகமுடையார்கள் பலரும் நந்தி என்ற அடையாளத்தோடு தங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

அகம்படி முதலிகளில் கலியுக மெய்யன் எனும் நந்தி பன்மன்
ஆதாரம்: மத்திய அரசு கல்வெட்டு ஆண்டறிக்கை 546, 1912( சோழ அரசர்களின் தளபதியாக பணியாற்றியவர், சோழர் நிலைப்படைக்கு தலைவர்)
பார்க்க இணைப்பு : 3

அகம்படியாரில் சூற்றியாழ்வான் மகன் நந்தி பெரியுடையான் தந்திரபாலன் ( சோழ அரசர்களின் தளபதியாக கர்நாடக படையெடுப்பில் பங்கேற்றவர் )

ஆதாரம்: Epigraphia Carnatica,
Vol – 10, Bowringpet Taluq,
கல்வெட்டு எண் : 35b
பார்க்க இணைப்பு : 4

இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றை வரும் பதிவுகளில் கூறுகின்றோம்.

ஆகவே இவ்வாறு பல்வேறு ஆதாரங்களின் மூலமாக நந்தி என்ற அடையாளமும் நந்தி கொடியும் அகமுடையார் இனத்துக்குரியது என்பதை உணரலாம்.

பிராமண இனத்தில் பிறந்த பல்ல அரசர்கள் பற்றி சில வரிகள்
————————————–
“பார்த்தியர் தம்மிற் பரத்வாஜ கோத்திரம் விளங்க ” என பல்லவர்களின் கல்வெட்டுக்கள் மட்டுமல்லாது மற்ற அரசர்களின் கல்வெட்டுக்களிலும் பல்லவர்கள் பிராமணர்களின் பாரத்வஜ கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என தமிழிலும் கூறப்பட்டவர்கள். அரசர்கள். அஸ்வத்தாமா எனும் ஆரியர்களின் பூர்வீக ஊரில் இருந்து வந்ததாக புராணங்கள்,செப்பேடுகளில் சொல்லிக்கொண்டவர்கள். ஈரானின் பெர்சிய பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள். பெர்சிய சிங்கத்தை தங்களின் அடையாளமாக கொண்டவர்கள் .சமஸ்கிருதத்தையும் பிராகிருதத்தையும் தங்கள் மொழியாக கொண்டவர்கள்.
தங்கள் செப்பேடுகளில் பிராமண இனத்தில் தோன்றிய சத்திரியன்(ஆட்சியாளன்) என்று தங்களை கூறி கூறிக்கொண்டவர்கள் இந்த பல்லவ மன்னர்கள்.

குறிப்பு:
இக்கட்டுரையின் மையக்கருத்தான நந்தி என்பதற்கும் வாணர்கள் அகமுடையார்கள் என்பதற்கும் 100க்கணக்கான ஆதாரங்கள் உள்ளன அவற்றை வரும் பதிவுகளில் காண்போம்.

வாணர்கள், சோழர்கள் கோட்டையையும் அடையாளமாக கொண்டவர்கள் ,கோட்டை குடியினர் என்று அழைத்துகொண்டவர்கள் இதையும் தனிப்பதிவில் விரிவாக காண்போம்

வேண்டுகோள்
ஒவ்வொரு ஆய்வுக்கட்டுரையும் பல வருட தேடல்,ஆய்வு, உழைப்பிற்கு பின்பே கட்டுரையாக வருகிறது. ஆகவே இதற்கு பதிலாக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களுக்கு தெரிந்த வாட்ஸ்அப் ,டெலிகிராம்,பேஸ்புக் குருப் பக்கங்களில் சேர் செய்வது மட்டும் தான்.

#nandhivarman #பல்லவர் #நந்தி #நந்தி #நந்திவர்மன்
#வாணர் #வாணர்குலம் #வாணாதிராயர் #வாணதிராயர் #வாணர்
#பாணர் #வந்தியத்தேவன்இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?