First
அகமுடையார் சங்கங்கள் மீதான விமர்சனங்கள்-சமுதாயமே விமர்சனம் மட்டும் தான் செய்வாயா?
———————————————————————————
இதை எழுதவேண்டுமென நீண்ட நாள் எண்ணியதுண்டு ஆனால் அகமுடையார் வரலாற்று மீட்டெடுப்பிலேயே அதிக கவனம் இருந்ததால் இதனை எழுத நேரம் கிடைக்கவில்லை.ஆனால் ஒன்றேனும் ஓர் நாள் நம் உறவுகளுக்கு எழுதித் தானே ஆகவேண்டும்!
ஆம் இதை இன்று எழுதியே ஆகவேண்டும்! சமுதாயத்தில் பிறந்ததாலேயே சங்கங்களின் செயல்பாடுகளை விமர்சனம் செய்ய உரிமை பெற்றுள்ளதாக கருதும் நாம் ,அந்த சங்கங்களை ஆதரித்திருக்கிறோமா என்பது தான் நம் முன்னே இருக்கும் கேள்வி!
எங்க ஊரில் பிரச்சனை ஆனால் அந்த சங்கம் எங்கள் பிரச்சனைக்கு வரவேயில்லை!
இந்த சங்கம் இந்த கட்சித் தலைவர்களைச் சந்தித்துள்ளார்கள் இவர்கள் அந்த அரசியல் கட்சிக்கு நம்மை விலைக்கு விற்றுவிட்டார்கள்!
அகமுடையார்கள் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுகிறார்கள்! நமக்கு இடஒதுக்கீடு வேண்டும்! இந்த சங்கள் என்ன செய்கிறார்கள்!
இப்படியாக சங்கங்கள் நடத்துபவர்க மீது பல விமர்சனங்கள்
சமுதாயப் பணிக்கு வந்தவர்களோ அல்லது பொதுவாழ்வில் இருப்பவர்களோ,விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.சமுதாயப்பணியில் உள்ளவர்களை சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் அவர் அச்சங்கத்தில் உறுப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் விமர்சனம் செய்ய உரிமையுண்டு என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் முதலில் சமுதாயப் பணிக்கு வாருங்கள்,பின்னர் விமர்சியுங்கள்! போட்டியில் வெற்றியும் பெறலாம்.தோல்வியும் அடையலாம் பங்கேற்பு முக்கியம் ஆனால் கிரிக்கெட்டை டீவியில் மட்டும் பார்த்து விமர்சனம் செய்பவர் போல் அகமுடையார்களே நீங்கள் இருக்காதீர்கள்.
எந்த ஓர் சங்கமோ அது கேள்வியில்லை (அது உங்களின் விருப்பத்திற்கு விட்டு விடுகிறோம்) . முதலில் சங்கத்தில் உறுப்பினராகுங்கள், உரிய நேரத்தில் சந்தா செழுத்துங்கள்,சங்க கூட்டங்களில் கலந்து கொள்ள்ளுங்கள்,சங்கம் நடத்தும் போராட்டங்களில் பங்கெடுங்கள், சங்க செயல்பாடுகளை அந்த சங்கக்கூட்டத்திலேயே ஆதரவோ எதிர்ப்போ தெரிவியுங்கள்.அப்போது மட்டும் தான் சங்கம் எதற்காக இதைச் செய்தது எதை நோக்கி இவர்கள் பயணிக்கிறார்கள் என்பதை அறிய முடியும்.
திடீரென்று தமிழகத்தின் ஒரு பகுதியில் அகமுடையாருக்கு ஓர் பிரச்சனை ஏற்படும் ,தனது ஊரில் பிரச்சனையென்றவுடன் தீடீரென்று ஏதேனும் ஓர் சங்கத்தை தொடர்பு கொள்வான் நமக்கு ஒரு பிரச்சனையென்றால் அதற்கு தீர்வு கொடுக்கமுடியாத சங்கம் என்பான்.ஆனால் அதுவரை சம்பந்தப்பட்டவர் எவரும் குறிப்பிட்ட சங்கத்தில் அடிப்படை உறுப்பினராகக் கூட இருக்க மாட்டார்கள் .உடனே அந்த அமைப்பும் குறிப்பிட்ட இடத்திற்கு இறங்கிப் போராட வேண்டும்!
ஆனால் உண்மை என்னவென்றால் சங்கங்களில் குறிப்பிட்ட ஊர்களில் உறுப்பினர்களோ அல்லது தலைமைகளோ இல்லாததால் களத்தில் இறங்கி வேலை செய்ய (காவல் நிலையம் செல்ல, சட்ட உதவி செய்ய, சம்பந்தப்பட்ட இரு தரப்புகளிடமும் பேச ) ஆட்கள் இருக்க மாட்டார்கள் அப்படியே இருந்தாலும் வேலை செய்யச் சொன்னாலும் நம் ஆட்கள்(அகமுடையாரின் பொதுபுத்தி) வேலை செய்ய மாட்டார்கள்(பல நேரம் சட்டபூர்வ நடவடிக்கைகளில் எப்படி செயல்படுவது என்பதும் தெரியாது)
சங்கத்திற்கு போதிய உறுப்பினர்கள் அவ்வூரில் இல்லாததால் போராட்டம் நடத்த அதிகம் பேரைத் திரட்டவும் முடியாது!
சங்கத்தின் தலைமையிடம் அல்லது சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தமிழகத்தின் ஒரு பகுதியில் இருப்பார்கள்,பிரச்சனை ஏற்பட்ட இடம் தமிழகத்தின் மற்றொரு கோடியில் இருக்கும்.பிரச்சனை முடியும் வரை சங்கத்தின் தலைவர் அல்லது முக்கியஸ்தர்கள் ஒவ்வொரு நாளும் நீண்ட தூரம் பயணப்பட வேண்டும் அல்லது பிரச்சனை முடியும் வரை அவ்வூரிலேயே தங்க வேண்டும்! ஒரு ஊரில் பிரச்சனைக்கே இப்படியென்றால் தமிழகம் முழுக்க பரவியிருக்கிற அகமுடையார்களின் பிரச்சனைக்கு இவ்வாறு வந்து போக முடியுமா இல்லை எல்லா இடத்திலும் ஒருவரே இருக்க முடியுமா? ஏன் இந்த நிலை ? அந்த ஊரில் அகமுடையார் சங்கம் ஒன்றிற்கு நாம் உறுப்பினராகி ,செயல் தலைவர்களை தேர்ந்தெடுத்து செயல்பட்டால் உள்ளீரில் இருக்கும் தலைமைகளே இதை கவனிக்க முடியும் அல்லவா? ஆனால் நாம் செய்வதில்லை!
மேலும் சங்கத்தில் உறுப்பினர்கள் இல்லாததால் பொருளாதார ரீதியாக அந்த ஊர் சங்கம் பொருளாதார ரீதியாக மிகவும் பலவீனப்பட்டிருக்கும்.பொருளாதாரம் பலவீனமடைந்திருந்தால் அந்த ஊரில் எந்த ஒரு நடவடிக்கையும் சாத்தியமில்லை ( போக்குவரத்து,போராட்டம் , சட்டபூர்வ நடவடிக்கைகள் , காவல்துறை ) போன்றவற்றிற்கு அதிக பணமும் செலவழியும் என்பதையும் மறக்கக் கூடாது.
இதில் இவ்வளவுச் சிக்கல் இருக்கிறது இதெயல்லாம் விட்டுவிட்டு வெறுமனே விமர்சனம் செய்தால் சங்கங்களின் செயல்பாடுகள் பலவீனப்படுமே தவிர ஏதும் நடக்காது! (இதையெல்லாம் பிரபல அகமுடையார் சங்கம் ஒன்றை நடத்துபவரே என்னிடம் பலமுறை ஆதங்கத்துடன் கூறியுள்ளார்)
ஆகவே மீண்டும் சொல்கிறோம் முதலில் சங்கத்தில் உறுப்பினராகுங்கள்,சங்க கூட்டங்களில் கலந்து கொள்ள்ளுங்கள்,சங்கம் நடத்தும் போராட்டங்களில் பங்கெடுங்கள், சங்கங்களில் செயல்பாடுகளை விமர்சனம் செய்யுங்கள்,திருத்துங்கள்,ஒருமித்து ஒன்று சேர்ந்து நல்லவழியில் மாற்றுங்கள்! .
அகமுடையார் ஒற்றுமை தளத்திற்காக
மு.சக்திகணேஷ்-நிர்வாகி
அகமுடையார் ஒற்றுமை இணையதளம்
நன்றி வணக்கம்!
கூடுதல் செய்திகள்
சந்தா கொடுத்தீர்களா? -அதே போல பல அகமுடையார்கள் பலர் சொல்லும் பொதுவான குற்றச்சாட்டு! குருபூஜைக்கு பணம் வசூலித்தார்கள் என்ன ஆச்சுஎன்றே தெரியவில்லை? கட்டிடம் கட்ட பணம் வாங்கினார்கள் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை! இது போன்ற நிதி சம்பந்தமான பல விமர்சனங்கள்!
முதலில் குருபூஜை குருபூஜைக்கு மட்டும் வசூல் மற்றும் தீடீர் வேலை என்று திடீர் தீடிரென்று தலைகாட்டும் நபர்களை ஆதரிக்காதீர்கள்! முதலில் அரசில் பதிவு செய்யப்பட்ட சங்கமா என்று பாருங்கள் உங்களுக்கு பிடித்த சங்கங்களில் உறுப்பினராகுங்கள்,சந்தா கட்டுங்கள்! ரசீது பெறுங்கள்!
பொருளாதார ரீதியாக சங்கங்களை ஆதரியுங்கள்! நீங்கள் பொருளாதார ரீதியாக சங்கங்களை ஆதரித்திருந்தால் சங்கங்கள் பல தீடிரென்று பணம் கேட்க அவசியம் வராது. பணம் சங்கக்கணக்கில் இருக்கும் ,அடுத்து என்ன செய்யலாம் என சங்கங்கள் சங்க உறுப்பினர்களைக் கூட்டி ஆலோசனை கேட்கும் ,அதன்படி அடுத்த முயற்சி(கட்டிடம் கட்டுவதோ, கல்வி உதவித் தொகை வழங்குவதோ ) சங்கம் செய்யும் . முறைப்படி திட்டமிட்டு செயல்படும் திட்டம் என்பதால் முறையான கணக்கும் இருக்கும்! நிறைய திட்டங்களும் செயல்படுத்தப்படும் .ஆனால் இவ்வாறெல்லாம் நடக்க முதலில் சங்கங்களில் இணைந்து சந்தா கொடுக்க வேண்டும்!
அரசியல் விமர்சனங்கள்- சில நேரம் சங்கங்களின் அரசியல் ரீதியான செயற்பாடுகள் மீது விமர்சனங்கள் வருவதுண்டு .அதாவது குறிப்பிட்ட சங்கம் தீடிரென்று தனது ஆதரவை குறிப்பிட்ட கட்சிக்கு வழங்குவதை நாம் பார்க்கமுடிகிறது. பதிவு மட்டும் செய்து கொண்டு செயல்பாடுகளே இல்லாத சில லெட்டர்பேடு அமைப்புகளும் நம் சமுதாயத்தில் உள்ளன என்கிற உண்மையை நாம் ஒப்புக்கொண்டே தான் ஆகவேண்டும்.இவர்களை கண்டுகொள்ள சரியான வழி தேர்தல் காலத்தில் மட்டும் இவர்கள் செயல்படுவார்கள் அல்லது இவர்கள் பெயர்களை பத்திரிக்கையில் நாம் பார்க்கமுடியும்! இவர்களைப் போன்றவர்களை அடையாளம் கண்டுகொள்ள இதுவே சரியான வழி!
ஏமாறுவதற்கு அரசியல் கட்சிகள் இருப்பவர்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல! பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் தான் அரசியலில் உள்ளனர் அவர்களை ஏமாற்றுவது என்பது சாத்தியமே இல்லை!ஏதோ லெட்டர்பேடு கட்சிகளை 50,000 அல்லது ஒரு லட்சம் போன்ற குறைந்த பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கி இச்சமுதாயமே தங்கள் ஆதரவுக் கட்சிக்கு ஆதரவு என்பதைப் போல பயன்படுத்திக் கொள்வார்கள்
ஆனால் அதேவேளை முறையாக செயல்படுகின்ற (அதிக உறுப்பினர்களைக் கொண்ட ,அடிக்கடி கூட்டம் நடத்துகின்ற) சங்க அமைப்புகள் அவ்வாறு செய்து விட முடியாது .அவ்வாறு செய்தாலும் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் அச்சங்கத்தில் உறுப்பினராகவோ அல்லது பொறுப்புகளிலோ இருக்கும் போது சங்கக்கூட்டத்தில் இதைப் பெற்றி கேள்வி கேட்கவோ அல்லது விமர்சனம் செய்ய முடியும் .இதெற்கெல்லாம் முதலில் நாம் அச்சங்களில் உறுப்பினராக இணைந்திருக்க வேண்டும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்