First
சிவகங்கை ராமநாதபுரத்தில் பிள்ளைப் பட்டம் கொண்ட அகமுடையார்கள்
—————————————————————
சேர்வை தான் அகமுடையார்களின் ஒரே பட்டம் என்றும் அது தான் சாதி எனவும் தென்மாவட்டத்தில் இன்றும் அகமுடையார்களில் பலர் அறியாமையில் உள்ளனர்.இன்னும் சிலர் வேண்டுமென்றே ஏதாவது குறை கூறவேண்டுமென்றும் தங்களுக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற அளவில் பேசி வருகின்றனர்.
அவர்களின் கவனத்திற்கு
இராமநாதபுரம் சேதுபதிகளிடம் மந்திரியாக பணிபுரிந்த முத்து இருளப்பபிள்ளை இவர் பிள்ளைப் பட்டம் கொண்ட அகமுடையார் தான் இவர்களின் கொடிவழிப்பட்டியல் முழுவதும் உள்ளது. இவர்களின் வாரிசுகள் இப்போதும் மதுரை,வாடிப்பட்டி,சென்னையில் உள்ளார்கள்.பார்க்க வேண்டுமா?
இராம்நாட்டின் புகழ்பெற்ற ஜெகன் தியேட்டர் உரிமையாளர் ஜெந்நாதன் பிள்ளை அவர்கள் அகமுடையாரில் பிள்ளைப் பட்டம் கொண்டவர் இவர் இராமநாதபுரம் அகமுடையார் முன்னேற்ற சங்கத்தின் தலைவராக இருந்தவர்.போய் இவரிடம் நீங்கள் அகமுடையாரா என்று கேட்க முடியுமா?
சிவகங்கையில் வாழ்ந்த ஓவர்ஸ் முத்துசாமி பிள்ளை இவர் அகமுடையார் இல்லையா? இவருக்கு சிவங்கையில் ஓவர்ஸ் பிள்ளை தெரு என்ற பெயரில் தெருவென்றே இருக்கிறது தெரியுமா?
அவ்வளவு ஏன் நாம் எல்லோரும் அறிந்த அண்ணன் அரப்பா அவர்களின் பாட்டி கிருஷ்ணம்மாள் அவர் வழியில் பிள்ளைப் பட்டம் கொண்டவர் .இவரே 1932ம் ஆண்டு – அகமுடையார் 4வது மாநாட்டில் அகமுடையார் மாதர் சங்கத்தின் சார்பாக மாநாட்டு தலைமையேற்றவர் .இவர் அகமுடையார் இல்லையா? அவர் வழிவந்த அண்ணன் அரப்பா அகமுடையார் இல்லையா?
இராமேஸ்வரத்தில் வழ்ழ்ந்த புகழ்பெற்ற பாம்பன் சுவாமிகள் . இவர் பிள்ளைப் பட்டம் கொண்ட அகமுடையார் தானே!
இன்னும் எவ்வளவோபேர் உண்டு!
இன்றும் எத்தனையோ அகமுடையார்கள் சிவகங்கையிலும் இராமநாதபுரத்திலும் பிள்ளைப் பட்டத்துடன் வாழ்கின்றனர்.
இவர்களையெல்லாம் அகமுடையாரா என்று கேட்க உங்களால் முடியுமா? பட்டத்தை வைத்து சாதியை குழப்பிக் கொள்ளும் பைத்தியக்காரர்கள் ஒருபுறம். சேர்வை பட்டம் மட்டும் தான் சாதி நாம் தான் ஒரிஜினல் என்று ஒன்றும் தெரியாமல் ஆனால் எல்லாம் தெரிந்தமாதிரி பேசும் அரைவேக்காடுகள் மற்றொரு புறம். மற்றவர்கள் கொடுக்கும் எச்சை காசுக்கும் ஆசைப்பட்டு, பட்டம் வேறுபட்டதால் சொந்த சாதியை இல்லை என்று கூறி எச்சப்பிழைப்பு செய்யும் பிழைப்புவாதிகள் என அப்பாவி அகமுடையார்கள் பலமுனையிலும் ஏமாற்றப்படுகிறார்கள்!
பட்டங்கள் வேறு என்றாலும் சாதியால் அகமுடையாராகிய நாம் அனைவரும் ஒன்றே ,பட்டங்கள் ஒன்றாக இருந்தாலும் சாதி வேறாக இருந்தால் அவர் நம் அகமுடையார் சாதியாகி விட முடியாது!
விரிவான பதிவு அகமுடையார் ஒற்றுமை தளத்தில் வெளிவரும்! (நன்றி அறிவிப்பு முழுகட்டுரையில் வெளிவரும்)
குறிப்பு:
இப்பதிவில் வார்த்தைகள் சற்றே கடுமையாக பயன்படுத்தப்படிருந்ததாக நீங்கள் கருதினால் அதற்காக வருந்துகிறோம்! ஆனால் இப்பதிவிற்கு அது தேவையானது என்ற அடிப்படையிலேயே அதை பயன்படுத்துகின்றோம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்