First
செய்தி: பட்டியலினத்தைச் சேர்ந்த ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து, ‘தேவேந்திரகுல வேளாளர்’ என, அழைக்கும் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தின் சார்பாக நல்வாழ்த்துக்கள்! வேறு ஏதேனும் ஆவண உதவிகள் தேவைப்பட்டால் அதையும் வழங்க தயாராக உள்ளோம்!
குறிப்பு:
எதற்கு மாற்று சமுதாயத்திற்கு நம் பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறீர்கள்? நமக்கு எதற்கு தேவையில்லாத வேலை என்று நம் அகமுடையார் உறவுகள் கருதலாம்!
ஆனால் நம் அகமுடையாரின் உட்பிரிவான துளுவ வேளாளர்களை ,அகமுடையார்கள் இல்லை என்று குழப்பம் விளைவித்து வரும் வெள்ளாளர்களுக்கு எதிரான இந்த நிகழ்வை நாங்கள் வரவேற்பதிலும் அதற்காக மகிழ்ச்சியடைவதும் இயல்பானதே!
வாழ்த்துக்கள் தேவேந்திர குல வேளாளர்களே!
குறிப்பு: ஜனவரி மாதம் முதல் அறிவிப்பின் போதே இப்பதிவை செய்ய நினைத்தோம்.ஆனால் உறுதியான பின்பு செய்தால் தான் நலம் என்பதால்.
பள்ளர்கள் வேளாளர்களே சாம்பிள் ஆவணம் 1:
குவளை மலர் வேளாளர்க்கு உரியதென்று எல்லோருக்கும் தெரிந்த விசயம் இதையே வெள்ளாளர்களும் எழுதி வருகின்றனர்.
அத்தகைய குவளை மலரை வேளான் மாந்தர்களான மள்ளர்கள் சூடினர் என ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியில் உள்ள பழம்பாடல் கூறுகிறது.
ஆய் பிழி விருத்து வண்டு அயிற்றி உண்டு தேன்
வாய் பொழி குவளைகள் சூடி மள்ளர்கள்
தேய் பிறை இரும்பு தம் வலக்கை சேர்த்தினர்
ஆய் செந்நெல் அகன்ற காடு அரிகுற்றார்களே
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்