First
தமிழவேள் உமா மகேஸ்வரன் பிள்ளை அகம்படியரும் சில அரிய புகைப்படங்களும்
————————-
பழந்தமிழ்குடியாம் அகமுடையார் பேரினத்தில் பிறந்தவரும் ,கரந்தை தமிழ் சங்கத்தை நிறுவியவருமாகிய தமிழவேள் உமா மகேஸ்வரன் பிள்ளையை அவர் பிள்ளை பட்டத்தை வைத்து பொதுவெளியில் தங்கள் சாதியென போலியாக பெருமை கொள்ள விரும்பி சில வெள்ளாளர் சங்க தலைவர்களே தகவலை பரப்பி வருவதாக அறிகிறோம்.
அவர்களுக்காக ஒர் சிறிய ஆதாரம்
“தமிழவேள் உமா மகேசுவரனார் தஞ்சை கரந்தையில் ஓர் உயர்ந்த அகம்படியர் குடியில் தோன்றியவர் ”
நூல்: பக்கம் 22- இந்திய_இலக்கியச்_சிற்பிகள்_தமிழவேள்_உமாமகேசுவரனார் ,சாகித்ய அகாதமி வெளியீடு
இதே செய்தி தமிழவேள் உமா மகேசுவரனார் வாழ்வும் பணிகளும் நூலில் பக்கம் எண் 31,32ம் பக்கங்களில் காணலாம். கரந்தை தமிழ் சங்கம் வெளியீடு
இணைப்புகள்
————
1-தமிழவேள் உமாமகேசுவரனார் புகைப்படம்
2- தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை அகம்படிய இனத்தவர் நூல் பக்கம் 22- இந்திய_இலக்கியச்_சிற்பிகள்_தமிழவேள்_உமாமகேசுவரனார் ,சாகித்ய அகாதமி வெளியீடு
3- மேற்குறிப்பிட்ட நூலின் அட்டைப்படம்
4- உமாமகேசுவரன் பிள்ளை அவர்களின் தந்தை வேம்பப்பிள்ளை அரிய புகைப்படம்)
5- உமா மகேஸ்வரன் பிள்ளை அவர்களும், அவர் மனைவி உலகநாயகி அம்மையாரும் – இளம் வயதில் (அரிய புகைப்படம்)
அகமுடையார்கள் தெரிந்து கொள்ளவேண்டியது
————————————————
உமா மகேஸ்வரன் பிள்ளையின் உறவினர்கள் இன்றும் கரந்தையும் மற்ற தஞ்சை பகுதியில் வாழ்ந்து வரும் நிலையில்
60 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரையை தங்கள் சாதியென சில வெள்ளாளர்கள் மடை மாற்றுகிறார்கள் என்றால் 200 வருடங்கள், 500 வருடங்கள் ஏன் 1000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த அகம்படியர் சமூகத்தவரை தங்கள் இனமென எப்படியெல்லாம் புரட்டு செய்வார்கள் என்பதை அகமுடையார் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே வரலாற்றை தொடர்ந்து நாம் பதிவு செய்ய வேண்டும் இல்லையென்றால் இது போன்று விழித்திருக்கும்போதே விழியை திருடும் வேலை நடக்கவே செய்யும்.
தொடர்ந்து போலிகள் முகத்திரை கிழித்தெரியப்படும்!
மாற்று சமூகத்தினர் அகமுடையார் பெரியோர்களை தங்கள் சமூகம் என பொய்யுரைத்து அவமானத்தை தேடிக்கொள்ளாமல் இனியேனும் திருந்த வேண்டும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்