அகமுடையார் தனி பேரின அரசியலில் “தமிழ்நாடு அகம்படியர் முன்னேற்றச் சங்கம்” (1964 …

Spread the love

First
அகமுடையார் தனி பேரின அரசியலில்

“தமிழ்நாடு அகம்படியர் முன்னேற்றச் சங்கம்” (1964 – 2000)
——————————————————
அகமுடையார் பேரினம் தென்னிந்திய முழுவதும் பல்வேறு உட்பிரிவுகளுடனும், வட்டாரப் பட்டப்பெயர்களுடனும் பரந்து வாழ்ந்து வருகின்றனர்.

தங்கள் வாழும் மாவட்டத்திற்கு ஏற்ப,
பல வட்டார பட்டப் பெயர்களுடன் வாழ்ந்து வந்தாலும், தாங்கள் அனைவரும் ஒரே “அகமுடையார்” பேரினத்தை சார்ந்தவர்கள் என்ற கருத்தியல் காலகாலமாக வடக்கிலும், தெற்கிலும், மாற்று சாதி கலப்பிடமில்லாத “அகமுடையார்” பேரினத்தவரிடம் மிக உறுதியாக இருந்து வந்துள்ளதை பல ஆவணங்களிலும், வாழ்வியலிலும் காணக்கிடைக்கிறது.

அந்த ஆவணங்களில் ஒன்றே
கீழ்காணும் அழைப்பிதழ்,

1964 ஆம் ஆண்டு, மதுரையில், தென் மாவட்டத்தை பூர்விடமாக கொண்ட இராஜகுல அகமுடையார் உட்பிரிவை சார்ந்த, “சேர்வை” பட்டப்பெயரை தாங்கியுள்ள, மதுரை சுப்பிரமணியபுரம், கோ.மீனாட்சிசுந்தரம் சேர்வை அவர்களால் தொடங்கப்பட்டதே “தமிழ்நாடு அகம்படியர் முன்னேற்றச் சங்கம்” (பதிவு எண் – 9/1974)

இச்சங்கம் 1964 – 2000 ஆண்டு வரை தொடர்ச்சியாக தமிழ்நாடு எங்கும் கிளைகள் பரப்பி, பல்வேறு மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள், மருதரசர்களின் திருவுருவச் சிலைகள், சட்டநாதன் ஆணையம் (1970), அம்பாசங்கர் ஆணையம் (1983) இட ஒதுக்கீடு உள்ளிட்ட பலவேறு உரிமை சார்ந்த பங்கேற்புகளில் தனது தடத்தை நிலையாக பதிவு செய்துள்ளது.

தமிழ்நாடு அகம்படியர் முன்னேற்றச் சங்கம் வடக்கு, தெற்கு என்ற எல்லை பாகுபாடுகளை களைந்து “அகமுடையார்” என்ற ஒற்றை அடையாளத்தில் அகமுடையார் அனைவரையும் ஒன்றிணைக்கப் பாடுபட்டது.

இந்த அமைப்பின் மாநில துணைத் தலைவராக, இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா, திமிரி ஊரை சார்ந்த தி.க.செயபாலன் (அகமுடைய முதலியார்) அவர்கள் அன்றே அங்கம் வகித்துள்ளார்.

எனவே அன்றே வடக்கு-தெற்கு பேதங்கள் இன்றி, “அகமுடையார்” என்ற ஒற்றை கருத்தியலுக்கு வித்திட்டவர்கள் தென் மாவட்ட அகம்படியர்கள்.

இக்கட்டுரையின் மையக் கருத்தியலுக்கு வருவோம்.

தமிழ்நாடு அகம்படியர் முன்னேற்றச் சங்கம், 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றம், நாடாளுமன்றம் பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்ற அகமுடையார் சமூகத்தை சார்ந்த அனைத்துக் கட்சி சட்டமன்ற (MLA) , நாடாளுமன்ற (MP) உறுப்பினர்களுக்கும், தமிழக அமைச்சர் பெருமக்களாக அங்கம் வகித்தவர்களுக்கு “வரவேற்பும், விருந்தும், பாராட்டும்” அளிக்க முடிவு செய்து…

28-04-1985 ஆம் ஆண்டு, ஞாயிற்றுக் கிழமை, மதுரை மாநகர், செல்லூர்
“மருது ருக்மணி” கல்யாண மகாலில்
வரவேற்பும், விருந்தும், பாராட்டு விழாவும் சீரும் சிறப்புமாக இனிதே நடைபெற்றது.

பாராட்டு பெறும் மக்கள் பிரதிநிதிகள்

திருவாளர்கள் :

1) க.இராசராம் –
தொழில்துறை அமைச்சர் (அதிமுக),
பனைமரத்துப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்,
(பிள்ளை பட்டம்).

2) டி. இராமசாமி –
மறுவாழ்வுத் துறை அமைச்சர் (அதிமுக),
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்
(சேர்வை பட்டம்).

3) R.ஜீவரெத்தினம் – காங்கிரஸ் MP, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர்
(முதலியார் பட்டம்).

4) ஆ.ஜெயமோகன் – காங்கிரஸ் MP,
திருப்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர்,
(முதலியார் பட்டம்).

5) பொ. அன்பழகன் – அதிமுக MLA, இளையான்குடி சட்டமன்ற உறுப்பினர்,
(சேர்வை பட்டம்).

6) M.பிச்சை – அதிமுக MLA,
அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்,
(சேர்வை பட்டம்).

7) M.மாரிமுத்து – அதிமுக MLA,
திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர்,
(சேர்வை பட்டம்).

8) S.ஞானசுந்தரம் – அதிமுக MLA,
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்,
(தேவர் பட்டம்).

9) Dr கோ.சமரசம் – அதிமுக MLA,
காவேரிப்பட்டிணம் சட்டமன்ற உறுப்பினர்,
(முதலியார் பட்டம்).

10) R.சண்முகம் – அதிமுக MLA,
திருத்தணி சட்டமன்ற உறுப்பினர்,
(முதலியார் பட்டம்).

11) எம்.பாண்டுரங்கன் – அதிமுக MLA,
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்,
(உடையார் பட்டம்).

12) A. சந்திரசேகர் – காங்கிரஸ் MLA,
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்,
(சேர்வை பட்டம்).

13) G.வீரையன் – இ.கம்யூ MLA,
நாகை சட்டமன்ற உறுப்பினர்,
(பிள்ளை பட்டம்).

14) மா. மீனாட்சிசுந்தரம் – திமுக MLA,
வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர்,
(தேவர் பட்டம்).

15) V.M.தேவராஜ் – திமுக MLA,
வேலூர் சட்டமன்ற உறுப்பினர்,
(முதலியார் பட்டம்).

16) பொன்.முத்துராமலிங்கம் – திமுக MLA,
மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர்,
(சேர்வை பட்டம்).

(அன்று தமிழக அமைச்சர்களாக 3 அகமுடையார்கள் அங்கம் வகித்தனர், சட்டமன்ற உறுப்பினர்களாக 23 அகமுடையார்கள் வெற்றி பெற்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களாக 4 அகமுடையார்கள் வெற்றி பெற்றனர். ஆனால் இந்நிகழ்வில் பங்கேற்க ஒப்புதல் அளித்தவர்கள் மட்டுமே இந்த அழைப்பிதழ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்).

தமிழ்நாடு அகம்படியர் முன்னேற்றச் சங்கத்தால் பாராட்டு பெற்ற இவர்கள் அனைவரும் அகமுடையார் பேரினத்தவர்களில் வெவ்வேறு பட்டப்பெயர்களை (சேர்வை, தேவர், முதலியார், உடையார், பிள்ளை) கொண்டவர்கள் ஆவர்.

அன்று இந்த விழாவை முன்னெடுத்த அகமுடையார் சமூக முன்னோடிகள்,

நரிமேடு S.இராமசாமி சேர்வை,
(தலைவர்).

S.S.பாண்டியன் சேர்வை,
(செயலாளர்).

V. சுப்பிரமணியன் சேர்வை,
பூ.முத்தையா சேர்வை,
(துணைத் தலைவர்கள்).

M.மாயாண்டி சேர்வை,
M.சுந்தரம்,
(துணைச் செயலாளர்கள்).

P.பிச்சை சேர்வை,
(பொருளாளர்).

S.தங்கவேலு சேர்வை,
(ஆலோசகர்).

ப. இராஜேஸ்வரன்
(பழனியாண்டி சேர்வை புத்தகக்கடை)

தமிழ்நாடு அகம்படியர் முன்னேற்றச் சங்கம், மதுரை.
—————————————-
இன்றைய அகமுடையார் சமூக பணியில் உள்ள பலருக்கு, அகமுடையார் பேரினத்தின் நீண்ட நெடிய வரலாற்று நீட்சியை முழுமையாக அறியாத, தெரியாத காரணத்தாலும், வரலாற்று ஆர்வமின்மையாலும், உருவாகி வரும் அகமுடையார் தனி பேரின அரசியலை திட்டமிட்டு சிதைக்கும் சில கருங்காலிகளின் சூழ்ச்சிக்கு நம்மவர்களில் சிலர் பலிகடாகியுள்ளனர்.

வடக்கிலும், தெற்கிலும் வாழும் அகமுடையார் பேரினத்தில் தப்பி பிறந்த சில மாற்று சாதி இரத்த கலப்பானவர்களும், வயிற்றுப் பிழைப்புக்காகவும், சலுகைக்காகவும் சாதி பெயரை மாற்றி போலி சாதி சான்றிதழ் பெற்றவர்களும், மாற்று சாதியிடம் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் சில துரோகிகளும்,

அகமுடையார் பேரினத்தின் நீண்ட நெடிய வரலாற்று வழித்தடத்தை அறியாது, புரியாது அரைவேக்காட்டுத்தனமாக தங்களின் வயிறு வளர்க்கும் பிழைப்புக்காக, தென் மாவட்ட அகம்படியர் வேறு, வட மாவட்ட அகமுடையார் வேறு என்ற சொத்தை வாதத்தை முகநூல் வாயிலாக புலம்பிக் கொண்டு வருகின்றனர்.

8 நூற்றாண்டில் இருந்து 18 நூற்றாண்டு வரை தென்னிந்தியா முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் தொல்லியல்த் துறையால் படியெடுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகளில் அகம்படி, அகம்படியர், அகம்படி முதலி, அகம்படி உடையான், அகம்படி வேளான், அகம்படி பிள்ளை, அகம்படி நாட்டார் என்றே அகமுடையார்கள் அடையாளப்படுத்தப்பட்ட உள்ளனர். அகமுடையார், அகமுடைய முதலி என்று எந்த கல்வெட்டுகளிலும் பதிவு செய்யப்படவில்லை.

19 ஆம் ஆண்டு தொடக்க காலங்களில் ஆங்கிலேயர், அரசு ஆவணங்களில் அகமுடையான் என பதிவு செய்துவிட்டனர். ஒரே சாதியை காலப்போக்கில் அகம்படியர், அகம்படியார், அகமுடியர், அகமுடி, அகமுடையான், அகமுடையோர், அகமுடையர், அகமுடையார் என தங்களின் கருத்துக்கும், சொல்லுக்கும் ஏற்ப, தங்களின் சொத்துப் பாத்திரங்களிலும்,
சாதி சான்றிதழ்களிலும் அடையாளப்படுத்திக் கொண்டனர்,

இதை பெயர் குழப்பத்தை உணர்ந்த தமிழ்நாடு அகம்படியர் முன்னேற்றச் சங்கம் இந்த தவறை திருத்த முடிவு செய்து, 1983 ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு சம்பந்தமாக அமைக்கப்பட்ட அம்பாசங்கர் ஆணையத்திடம், சங்கத்தின் தலைவர் நரிமேடு S. இராமசாமி சேர்வை அவர்களும், பொதுச் செயலாளர் S.S. பாண்டியன் சேர்வை அவர்களும் அகமுடையார் பேரினத்தின் சார்பாக நேரில் ஆஜராகி இந்த தவறை திருத்தி ஓரே பெயரில் “அகமுடையார்” என்ற ஒற்றை பெயரில் அரசாணை வெளியிட கோரிக்கை வைத்து மனு அளித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று 1985 ஆம் ஆண்டு “அகமுடையார்” என்று அரசு ஆவணங்களில் அழைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த வரலாற்று நீட்சியை அறியாத
இவர்களின் புலம்பல்களை நினைத்தால் எனக்கு நகைப்புதான் வருகின்றது. எந்தவித அடிப்படை கல்வெட்டு ஆதாரங்களோ, ஆவணங்களோ, தரவுகளோ, படிப்பறிவோ இல்லாத வடிகட்டிய அரைவேக்காடுகளாக இருக்கின்றனர். இவர்களிடத்தில் இருந்து அகமுடையார் ஒற்றுமையை விரும்பும் உறவுகள் சற்று விலகி கடந்து செல்வதே நல்லது.

இவர்களை திருத்த முயற்சிப்பதை விட்டுவிட்டு, அகமுடையார் தனி பேரின அரசியலை பட்டி,தொட்டி எங்கும் வாழும் அகமுடையார் மக்களிடம் ஆழமாக விதைப்பதில் கவனம் செலுத்துவதே சாலச்சிறந்தது. இவர்களுக்கு தெரிந்த ஒரே விசயம் ஆபாச உரையாடல்களும், , அவதூறு பரப்புதலும் மட்டுமே,

இந்த அரைவேக்காடுகள் வரம்பு மீறி பேசினாலோ, எழுதினாலோ
அந்த ஆதாரங்களை வைத்து காவல்துறை மூலம் சட்டப்படியான நடவடிக்கைகளை முன்னேடுத்தாலே போதும் இவர்கள் வாயை மூடி விடுவர்.

இந்த துரோக அரசியல் நீண்ட சூழ்ச்சிகளை உட்கொண்டுள்ளது.
காரணம், நீண்டகாலம் அகமுடையார் பேரினத்தின் முதுகில் ஏறி சவாரி செய்த சில சிறுபான்மை சாதிகள், அகமுடையார் பேரினம் எழுச்சி பெற கூடாது, இவர்களை உட்பிரிவுகளாலும், வட்டாரப் பட்டப் பெயர்களாலும் பல கூறுகளாக பிரித்து துண்டாடி, சிதறடிப்பதின் நோக்கமே
அகம்படியர் வேறு! அகமுடையார் வேறு!!
என்ற வாதம், காலகாலமாக துரோகிகள் மூலம் அகமுடையார் ஒற்றுமையை திசை திருப்ப முயலும் துரோகிகளை ஓட ஓட விரட்டியடிப்போம்.

நமது ஒரே இலக்கு…
அகமுடையார் பேரினத்தின் ஒருங்கிணைப்பு மட்டுமே!

அகமுடையார் பேரினமாக ஒன்றிணைவோம்!!

(குறிப்பு : இந்த நிகழ்வின் அரிய புகைப்படங்கள் 30 மேற்பட்டவைகள் என்னிடம் உள்ளன. இந்த கட்டுரைக்காக அனைத்தையும் முழுமையாக இதில் பதிவு செய்ய முடியாத காரணத்தால் அழைப்பிதழ் மட்டுமே பதிவு செய்துள்ளேன்).

முடிந்த அளவு உறவுகள்,
இக்கட்டுரையை பகிரவும்.
————————————————————
அகமுடையார் ஒருங்கிணைப்பு பணியில்..
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
புலனம் (WhatsApp) எண் : 94429 38890.




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo