கருத்தரங்கு இன்று (09-12-2023) காலை 10 மணிக்கு மதுரை தெப்பக்குளம் பகுதியில்
————-
பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் சமூக நீதி காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கருத்தரங்கு இன்று (09-12-2023) காலை 10 மணிக்கு மதுரை தெப்பக்குளம் பகுதியில் ADR திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் மருதுசேனையின் தலைவர் அண்ணன் திரு.கரு.ஆதிநாராயணன் அவர்கள் அகமுடையார் சமுதாய மக்கள் சார்பாக கலந்து கொண்டு தங்களது கருத்தை முன்வைக்க இருக்கிறார்கள்.
முன்னதாக இந்நிகழ்விற்கான அழைப்பிதழை பாமக பொருளாளர் கவிஞர். திலகபாமா அவர்கள் மருதுசேனை அலுவலகத்தில் அண்ணன் திரு.கரு.ஆதிநாராயணன் அவர்களிடம் நேரில் வழங்கினார்.
குறிப்பு:
நான் நிகழ்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை) என்று நினைத்துவிட்டதால் முன்னதாக பதிவிட முடியவில்லை. பல்வேறு சமுதாயங்கள் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் மதுரையில் பெரும்பான்மை சமுதாயமாக உள்ள அகமுடையார் உறவுகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் பெரும்பான்மையை ,சிறப்பை நிரூபிக்க வேண்டும்.
நிகழ்வு தொடங்கும் 10 மணிக்குள் வரமுடியாதவர்கள் சற்று தாமதமானாலும் தவறாது கலந்து கொண்டால் நலம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்