அகமுடையார் சமுதாயத்தின் சார்பாக மத்திய அரசுக்கு முத்தான 3 கோரிக்கைகள் (சேர் செய்…

Spread the love

அகமுடையார் சமுதாயத்தின் சார்பாக மத்திய அரசுக்கு முத்தான 3 கோரிக்கைகள் (சேர் செய்ய மறக்காதீர்கள்)
———————————-
இந்திய விடுதலை போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர் என்றாலும்

ஆங்கிலேயருக்கு எதிராக முதல் சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டவர்
இந்தியா முழுவதையும் இணைத்து ஒரணியில் திரள புரட்சி குழுக்களை ஒருங்கிணைத்து தலைமை தாங்கியவர்
சாதி மதம் கடந்து அனைத்து தரப்பினரையும் விடுதலை போராட்டத்திற்கு அழைத்தவர்
தரையில் மட்டுமல்லாது கடற்போர், ராக்கெட் வீச்சு என்று நிலம்,நீர்,ஆகாயம் என மூன்று நிலங்களிலும் விடுதலை போர் செய்வதவர்
சாதி சமய வேறுபாடின்றி ஆன்மீகத்திற்கும் , மக்களுக்கும் எண்ணற்ற கொடைகளை வழங்கியவர்கள்

போன்ற பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர்கள் மருதுபாண்டியர்கள்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த மருதுபாண்டியர்களை பெருமைப்படுத்த மத்திய அரசுக்கு

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பான்மையாக வாழும் சாதியாகிய அகமுடையார் சமுதாயம் முத்தான 3 கோரிக்கைகளை வைக்கின்றது.

1) அடையாளங்களை ஏற்படுத்துதல் – மத்திய அரசு மருதுபாண்டியரின் அடையாளங்களை முக்கிய இடங்களில் ஏற்படுத்த வேண்டும்.

அதாவது மத்திய அரசின் பாராளுமன்றம்,இந்தியாவின் தலைநகராம் டெல்லியில் சிலை அமைத்தல் ,இந்திய ராணுவத்தின் ரெஜிமெண்ட்களுக்கு பெயர் சூட்டல் , கடற்படை தளங்களுக்கு பெயர் வைத்தல் , கப்பல்களுக்கு பெயர் வைத்தல் ராணுவ மையங்களுக்கு பெயர் வைத்தல், விமான நிலையங்களுக்கு பெயர் வைத்தல் , மத்திய அரசு அலுவலங்களில் மருதுபாண்டியரின் திருவுருவ படத்தை வைத்தல் போன்ற அடையாளங்களை உருவாக்கி இப்போது இருப்பவர்களும்,இனிவரும் சந்ததிகளும சிறப்பு மிக்க விடுதலை போராட்ட வீரர்களை அறிந்து நாட்டுப்பற்றுடன் திகழ உதவ வேண்டும்.

2) மத்திய அரசின் பாடத்திட்டத்தில் மருதுபாண்டியர்களை சேர்க்க வேண்டும் -மத்திய அரசின் பள்ளி ,பல்கலைக்கழகம் ,கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் மருதுபாண்டியர்களின் விடுதலை பிரகடணம் பற்றியும் மருதுபாண்டியர்களின் விடுதலை போராட்டம் பற்றியும் செய்திகளை சேர்க்க வேண்டும்.

3) தேர்வுகளில் கேள்விகளை உருவாக்குதல் -பள்ளி ,பல்கலைக்கழகம் ,கல்லூரிகள் மற்றும் யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி ,நீட் போன்ற பல்வேறு போட்டி தேர்வுகளில் மருதுபாண்டியரின் விடுதலை பிரகடணம் பற்றியும், விடுதலை போராட்டம் பற்றியும் கேள்விகள் சேர்க்கப்பட வேண்டும்.

ஆகவே இந்த மூத்தான 3 கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்திற்கு வைக்கின்றோம். இதை நிறைவேற்றி தரும் கட்சிக்கு அகமுடையார் சமுதாயம் நன்றிகடனோடு ஒன்று சேர்ந்து வாக்களிப்போம் என்பதை அகமுடையார் சமுதாயம் சார்பாக கூறுகின்றோம்.

மேலதிக தகவல்கள்
விடுதலை போராட்ட வீரர்கள் தமிழகத்தில் சரியாக அங்கிகரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் சிலர் மத்திய அரசு விடுதலை போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களை நினைவுகூர எத்தகைய விடயங்களை இதுவரை செய்துள்ளது என்ற கேள்வி எழுப்பினால் பூஜ்ஜியமே நமக்கு விடையாக கிடைக்கின்றது.

இராமநாதபுரத்தில் உள்ள உச்சிபுளி கடற்படை தளத்திற்கு “ஐஎன்எஸ் மருதுபாண்டியர்” பெயர் சூட்டுவதாக பல ஆண்டுகளாக செய்தி உலா வருகிறது. இது குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர்
திரு TN Bjp Srinivasan அவர்கள் கூட விரைவில் இது நிறைவேறும் என்று அண்ணன் திரு. வெங்கடேஷ் அவர்களிடம் தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்ட பதிவு!

https://www.facebook.com/story.php?story_fbid=pfbid02R63tcRrPXdcujreqokqK8jbwowz5jpLR6FLD8TC1XcZ6dnbtCuyqaXFscdq5A3nBl&id=100003019903941

அதேபோல் தமிழ்நாடு அகமுடையார் மக்கள் மகாசபை சார்பில் பிப்ரவரி 22ம் தேதி அன்று அண்ணன் திருப்பரகுன்றம் வெங்கடேசன் அவர்கள் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு.வெங்கடேசன் எம்பி அவர்களிடம் மனு அளித்துள்ளார்.இதைபோன்று இவர் பல்வேறு விடயங்களில் மத்திய அரசுக்கு மனு அளித்துள்ளார்

ஆகவே மத்திய அரசுக்கு அகமுடையார் சமுதாயம் கோரிக்கை வைப்பது புதியது அல்ல! அதேநேரம் விடுதலை போராட்ட வீரர்களுக்கு உரிய அங்கிகாரம் கொடுக்கவில்லை என்று பேசுபவர்கள் மத்திய அரசும் விடுதலை போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்களுக்கு செய்த பணியை எடுத்துக்கூற மத்திய அரசு
அகமுடையார் சமுதாயத்தின் இந்த முத்தான 3 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமாய் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பான்மையாக வாழும் அகமுடையார் சமுதாயத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்!

குறிப்பு:
இக்கோரிக்கை மத்திய அரசிடம் சென்று சேர மறக்காமல் சேர் செய்யுங்கள்!

மருதுபாண்டியர்களின் விடுதலை போராட்ட வரலாற்றை மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்திடும் அண்ணன் திரு.வெங்கடேஷ் அவர்களின் முயற்சிகளுக்கு நம் பாராட்டுக்களும் வணக்கங்களும் அவரது பணியை மற்றொரு தனிப்பதிவில் விரிவாக பேசுவோம்).

Agamudayar community demands to Central government

Statue For Maruthu Pandiyar at Parliament of India and Delhi

Maruthu pandiyar life history should be included to the schools,colleges,university curriculum

INS Maruthu Pandiyar Indian naval base should be named after freedom fighter maruthu pandiyar






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo