மணகன் வீட்டாரே: மமுழுமையாகவும் சரியாகவும் திருமண வரன் பதிவு செய்யுங்கள்!
—————————————–
அகமுடையார்மேட்ரியில் பதிவு செய்துள்ள அல்லது பதிவு செய்யவுள்ள அகமுடையார் மாப்பிள்ளை வீட்டார்களுக்கு:
உங்கள் அனைவருக்கும் அகமுடையார்மேட்ரியின் அன்பின் வணக்கங்கள்!
நமது அகமுடையார்மேட்ரியில் உங்களில் நிறைய பேர் வரன் பதிவு செய்துள்ளீர்கள்.மகிழ்ச்சி!
ஆனால் உங்களில் பலர் பதிவு செய்துள்ள வரன் தகவல்களில் மணமகனின் வேலை,சம்பளம் , குடும்பம் பற்றிய தகவல்கள் இடம் பெறுவதில்லை.
“வினையே ஆடவர்க்கு உயிரே!” – வேலை என்பது ஆண்களுக்கு உயிரானது என்பது முதுமொழி .
ஆகவே மணமகள் வீட்டார் வரன்களை தேடும் போது நல்ல பழக்கவழங்கள் என்பதோடு மணமகனின் வேலையை பற்றிய தகவலையும் அறிய விரும்புவர்.
ஆனால் அகமுடையார்மேட்ரியின் வெப்சைட் அல்லது அப்ளிகேச வழியாக திருமண வரன் பதிவு செய்யும் பெரும்பாலான மணமகன் வீட்டார் புகைப்படம், ஜாதக்கட்டம் முக்கியமாக வேலை ,சம்பளம்,குடும்ப விவரத்துடன் தகவல்களை கொடுப்பதில்லை.
இத்தகவல்கள் முக்கியம் என்பதால் மணமகன் வீட்டாரை அவர்கள் பதிவுசெய்துள்ள நம்பரில் வாட்ஸ்ப்பில் தொடர்புகொண்டு கேட்டாலும் பெரும்பாலான நேரம் தகவல்களை அவர்கள் தராததால்
அந்த ப்ரோல்களை நாங்கள் அப்ருவ் செய்வதில்லை.
ஆம்! அரைகுறையாக வரன் பதிவு செய்வது யாருக்கும் உதவாது அல்லவா! அரைகுறையான வரன் தகவல்களை அப்ரூவ் செய்து யாருக்கு என்ன புண்ணியம்?
இதனால் நூற்றுக்கணக்கான மணமகன் தகவல்கள் அப்ரூவ் ஆகாமலே உள்ளன(மணமகள் வீட்டாரின் பார்வைக்கு செல்லாமலே உள்ளன)
புகைப்படம், ஜாதக்கட்டம் முக்கியமாக வேலை ,சம்பளம்,குடும்ப விவரத்துடன் தகவல்கள் என முழுமையாக வரன் பதிவு செய்தால் தான் பெண் வீட்டாருக்கு உங்களை பற்றிய தகவல் தெரிய வரும் அவர்களும் உங்களை தொடர்புகொள்ள வாய்ப்பு உள்ளது.
ஆம் நமது அகமுடையார்மேட்ரியில் பெண் வீட்டாருக்கு 100% இலவச சேவை என்பதால் மணமகன் தகவல்களை பார்த்து அவர்கள் தொலைபேசி எண்ணுடன் எடுக்க முடியும் என்பதால் பிடித்திருக்கும் மணமகன் வீட்டாரை மணமகள் வீட்டார் தொடர்புகொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
ஆகவே மணமகன் வீட்டாரே! வரன் பதிவு செய்யும் போது நேரம் செலவழித்து வரன் பற்றிய தகவலை முழுமையாக பதிவு செய்யுங்கள்!
விரைவில் திருமணம் அமைய நல்வாழ்த்துக்கள்!
அகமுடையார் மேட்ரி வெப்சைட் லிங்க்: https://agamudayarmatri.com
அகமுடையார் மேட்ரி அப்ளிகேசன் லிங்க்:
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarmatri.www&hl=en_IN
மேலதிக செய்தி
—————–
இன்று பெண் வீட்டார்களே திருமணத்தை முடிவு செய்யும் இடத்தில் உள்ளனர் ஆனாலும் கூட மணமகள் வீட்டார் வரன் பற்றிய தகவல்களை முழுமையாக பதிவு செய்கின்றனர். ஆனால் பெண் கிடைப்பது சிரமமாக இருக்கிறது என்று பேசும் மணமகன் வீட்டார் ,மணமகன் தகவல்களை சரியாக வரன் பதிவு செய்யவதில்லை என்பது ஆச்சர்யமளிக்கிறது.
இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள சங்கப்பாடல்
“வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என
நமக்கு உரைத்தோரும் தாமே,
அழா அல் தோழி! அழுஙுவர் செலவே”
—குறுந்தொகை 135
பாடல் பொருள்:
தொழில் தான் ஆண் மக்களுக்கு உயிர். இல்லத்தில் வாழும் பெண்களுக்கு கணவனே உயிர்.
இதை நமக்குச் சொன்னவரும் உன் கணவன்தான். ஆகையால் அழாதே! கணவர், உன்னை விட்டுப் பிரிந்து செல்ல மாட்டார் (என்று தோழி கூறினாள்).
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்