மருதரசர்களின் மாண்புகளை வியந்த ராஜ்பவன் ! ************************ மருதரசர்களின்…

Spread the love

First
மருதரசர்களின் மாண்புகளை வியந்த ராஜ்பவன் !
************************
மருதரசர்களின் பெரும் வரலாறும்,இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்காக,
பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்த தேசத்தை ஜம்புத்தீவு பிரகடனத்தின் மூலம் ஒருங்கிணைத்து,
1801 ஆண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு, உயிர் தியாகம் செய்த வீர வரலாற்றை சரியான தளத்தில் முன் வைக்கப்படாமல், 1857 சிப்பாய் கலகத்தை முதல் இந்திய சுதந்திரப் போர் என இன்றைய தலைமுறை படித்து வரும் சூழலில் ,
சுதந்திரப் போராட்ட வரலாறை தமிழகத்திலிருந்து துவங்க வேண்டி, மருதரசர்களின் “தென்னாட்டு புரட்சியை”
முறையாக மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு சமூகம் பல்வேறு தளங்களில் கொண்டு சேர்க்கிறது !

அந்த வகையில் மருதரசர்களின் வரலாற்றில் பெரிதும் அக்கறை கொண்ட,தேசபிமானி,
அருமை அக்கா திருமதி Radha Thevar அவர்களின் பெருமுயற்சியில் மத்திய அரசின் பிரதிநிதி,மேதகு தமிழ்நாடு ஆளுநர் திரு R.N.இரவி அவர்களை மாமன்னர் மருதுபாண்டியர்கள் வாரிசுதாரர் குழுத் தலைவர்,
திரு. த.இராமசாமி சேர்வை,
அகமுடையார் அரண், தலைமை ஒருங்கிணைப்பாளர், திரு. Balamurugan Agamudayar மற்றும் திரு. சரவணன் IRS, திரு. வினோத் (தாமரை டிவி) ஆகியோர் சந்தித்து மருதரசர்களின் வரலாற்று ஆவணங்களை சமர்ப்பித்தனர் !

மேலும், அவர்களின் முதல் இந்திய சுதந்திர போரை போற்றும் வண்ணம் திருச்சியிலும், சிவகங்கையிலும் நினைவுச் சின்னங்களை ஏற்படுத்த வேண்டும், ஜம்புத்தீவு பிரகடனம் வெளியிடப் பெற்ற ஜூன் 16 தேசிய சுதந்திர போர் வீரர்கள் தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் மனுவாக அளித்தனர் !

நிகழ்வில் ஜே.கோர்லோ எழுதிய ஆங்கில நூலான “MAHARHU”, கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ் எழுதிய “MILITARY REMINISCENCES, VOL -1”, கே.இராஜய்யன் எழுதிய “SOUTH INDIAN REBELLION” போன்ற வரலாற்று நூல்களையும் ஆளுநருக்கு பரிசளித்தனர் !

அரைமணி நேரத்திற்கும் மேலான இச்சந்திப்பில், நமது வீர வரலாற்றையும், அதன் தொடர்ச்சியான நமது கோரிக்கைகளையும் பொறுமையாக கேட்ட ஆளுநர் மத்தியரசின் கவனத்திற்கு கண்டிப்பாக கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளார்.

விதைத்துக் கொண்டே இருப்போம்….


இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

1 Comment

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?