தங்கத்தினால் வாளை கொண்டிருந்த அகம்படியர்கள் ————————————…

Spread the love

First
தங்கத்தினால் வாளை கொண்டிருந்த அகம்படியர்கள்
——————————————–
சோழர்களால் சிங்கள நாட்டை வெல்ல அனுப்பப்பட்ட அகம்படியர்கள் சோழர் ஆட்சி சிங்கள நாட்டில் முடிவுற்ற பின்னால் சிங்கள அரசர்களின் படைகளில் பெருமளவில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

சிங்கள அரசர்களின் படையில் அகம்படியினர் பெரும் மதிப்பும் ,அதிகாரமும் மிக்க போர்படையினராக இருந்தனர் என்பதை இலங்கையில் கிடைத்த பல்வேறு கல்வெட்டு சான்றுகள் உறுதி கூறுகின்றன. அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக வரும் நாட்களில் பார்க்கப்போகின்றோம்.

இப்பதிவில் வேறு விசயம் , அதாவது சிங்கள அரசர்களின் ராணுவத்தில் பணிபுரிந்த அகம்படியர்கள் தங்கத்திலான வாளை கொண்டிருந்தனர் என்ற செய்தி நிக்காய சங்கிரகய எனும் சிங்கள பழம் நூலில் உள்ளதை மேற்கோள் காட்டி ஆரியபாலா எனும் சிங்கள நூல் ஆசிரியர் தனது society in mediaeval ceylon எனும் நூலில் குறிப்பிடுகின்றார்.

தங்கத்தால் வாள் வைத்திருந்தது அகம்படியர்களுக்கு அந்நாளில் வழங்கப்பட்ட உயரிய அதிகாரத்தையும் ,முக்கியத்துவத்தையும் ,பொருளாதார வலிமையையும் எடுத்துக்காட்டுகின்றது.

அகம்படியினர் புத்த கோவிலை பாதுகாத்தனர் அதற்கு நன்கொடை வழங்கினர் ,புத்த கோவிலுக்கு நிலம் வழங்கப்படும் போது அது அகம்படியர்களின் முன்பாக வைத்து நிலம் சிங்கள அரசர்களால் வழங்கப்பட்டது. சிங்கள ராணுவத்தில் இருந்த அகம்படியர்கள் மற்ற ராணுவத்தினரை விட உயர்வானவர்கள் என்பதால் அவர்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து காட்ட சிவப்பு நிற தலைப்பாகை அணிந்திருந்தனர் போன்ற இலங்கையில் அகம்படியர் தொடர்பான பல்வேறு செய்திகள் வரும் காலங்களில் வெளியிடப்படும்.

இணைப்பு 1: society in mediaeval ceylon by Aryapala M.B pageno163
இணைப்பு 2: தங்கவாள் மாதிரி படம்




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo