First
நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி அகமுடையார் காலமானார்.ஆழ்ந்த இரங்கல்கள்
———————————————————————–
நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி அவர்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். பட்டுக்கோட்டையை அடுத்த பொன்னவராயன்கோட்டை ஊரை பூர்வீகமாக கொண்ட அகமுடையார் ஆவார்.
இந்நிலையில் நடிகர் சிவ நாராயணமூர்த்தி அவர்கள் உடல்நிலை குறைவு காரணமாக நேற்று இயற்கை எய்திய செய்தி கிடைத்தது. இதை அறிந்தவுடன் மிகவும் வருந்தினோம். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
அருமையான மனிதர். இவருடைய மகன் ஒருவர் சென்னையில் கட்டுமான தொழில் நிறுவனத்தை நடத்தி வந்தார் இவருக்கு வரன் பார்த்து வந்தார். இவரது திருமணம் தொடர்பாக முன்பு என்னை போனில் அடிக்கடி அழைத்து பேசுவார். அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த பலர் நல்ல சம்பந்தம் அமைந்தால் போதும் என்று நினைத்து வேறு சாதியிலும் திருமணம் செய்த நிலையில் கூட இவர் தனது மகனுக்கு அகமுடையார் சாதியிலேயே வரன் தேடி வந்தார். அவர் கேட்கவில்லை என்றாலும் அவருக்கு மேட்ரிமோனி மெம்பர்சிப்பை இலவசமாகவே வழங்கினோம். நடுவில் பேச முடியாததால் அவரது மகனுக்கு திருமணம் நிறைவுற்றதா என்று அறிய முடியவில்லை.
அவர் திரையுலகில் நடித்துக்கொண்டிருந்ததால் இதையெல்லாம் அடிக்கடி எடுத்துக்காட்டி அவரை மற்றவர்கள் சாதிய பார்வையில் கொண்டுவர நாம் விரும்பியதில்லை. அவரும் சாதியின் மீது பற்று இருந்ததே தவிர சாதிய வெறி அவரிடம் இருந்ததில்லை என்பது அவரிடம் பேசிய போது தெரிந்தது.
அருமையான மனிதர். கம்பிரமான குரல் ஆனாலும் அதிலும் ஒரு குழந்தைத்தனம் ஓளிந்தே இருந்தது!
இனி அவர் புதிய காட்சிகளில் தோன்றி நம்மை சிரிக்க வைக்க மாட்டார். ஆனால் அவர் நடித்த படங்கள் என்றும் ரசிகர்கள் மனதினில் நிற்கும்.
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு அகமுடையார் ஒற்றுமை சார்பாகவும், அகமுடையார் சமுதாயத்தின் சார்பாகவும் ,தமிழ் ரசிகர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கல்கள்!
குறிப்பு:
கடந்த 8 வருடங்களாக அகமுடையார் வரலாற்று தேடலை நடத்தி அதிலும் குறிப்பாக கடந்த 5 வருடங்களாக
ஒரு நாளைக்கு 15 மணி நேரம் என வரலாற்று தேடலை செய்து வருகிறோம். வழக்கம் போல
எந்த பதிவையும் சட்டை செய்யாத நமது சமுதாயத்திற்கு மேலும் மேலும் ஏன் பதிவிட வேண்டும் , எப்படியும் நீங்கள் படிக்கப்போவதில்லை என்றும் அப்படியே படிக்கும் ஒரு சிலரும் அப்பதிவை சேர் செய்யப்போவதில்லை என்பதால் பதிவே போட வேண்டாம் என்று நினைத்தேன்.
ஆனால் நல்லதுக்கு வரவில்லை என்றாலும் துக்கத்திற்கு வரவேண்டும் அல்லவா!
அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் சில
https://www.youtube.com/watch?v=E06LwrqOvyc
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்