மணலாறு | தென்னமரவுஅடி | திருகோணமலை | கொக்கிளாய் | மூல்லைத்தீவு | #sltamilvlogs

Spread the love

First
அகம்படியான் குளம்- இலங்கை திருகோணமலை பகுதியில் ஓர் அடையாளம்
————————————————————
இலங்கை திருகோணமலை பகுதியில் அமைந்துள்ளது தென்னமரவடி (தென்னமரபுஅடி) எனும் ஊர் . இவ்வூரில் அகம்படியான் குளம் என்ற பெயரில் குளம் அமைந்துள்ளது .இதன் அருகில் மற்ற சாதி பெயரிலும் குளம் இருப்பதாலும்,ஏற்கனவே சேலம் வாழக்குட்டபட்டியில் அகம்படியர் ஏரி என்ற குளம் இருந்ததாக கல்வெட்டு குறிப்பிடுவதாலும் இது நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து சென்ற அகம்படியர்களின் பெயரால் உருவானதை அறிந்து கொள்ளலாம்.

இந்த குளத்தை பூதங்கள் கஞ்சி காய்ச்சி வெட்டின குளம் தான் “அகம்படியான் குளம்” என்று இப்பகுதி மக்கள் நினைவு கூருகிறார்கள்.

அகம்படியர்கள் அந்நாட்களில் சாதாரண மக்களை விட மிகவும் பலம் வாய்ந்தவர்களாக இருந்துள்ளார்கள் என்பதற்கு வயோதிகராக இருந்த முத்து விசயன் சேர்வை சேதுபதி யானையின் வாலை பிடித்து நகரவிடாமல் செய்தது,மருதுபாண்டியர்கள் ஆற்காடு நாணையத்தை விரல் இடுக்கில் வளைத்தது , புலியை கொன்றது போன்ற நடந்த பல நிகழ்வுகளை உதாரணமாக காட்டலாம்(இது பற்றி ஓர்நாள் விரிவாக பேசலாம்)

தாங்கள் வியப்பாக கருதும் விடயத்தின் மீது கற்பனையை ஏற்றி கூறும் வழக்கம் மக்களிடையே உள்ளது.
அகம்படியர்களைமிகவும் பலம் வாய்ந்தவர்களாகவே சிங்கள இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன என்பதை வைத்து பார்க்கும் போது தென்னமரவடி மக்கள் இக்குளத்தை பூதங்கள் கட்டியதாக கூறுவதில் வியப்பேதும் இல்லை.

வீடியோவில் நமக்கு தேவையான அந்த வார்த்தையை கேட்பதற்காக வீடியோவை குறிப்பிட்ட பகுதியில் இருந்து ஒடும்படி சேர் செய்திருக்கிறோம்! விருப்பமானவர்கள் முழு வீடியோவையும் பார்க்கலாம்.

வாழகுட்டபட்டி அகம்படியார் ஏரி
ஆதாரம்: சேலம் மாவட்ட கல்வெட்டுக்கள் பக்கம் எண்கள் 249,250

 

அறிவிப்பு:

இதுபோன்ற அகமுடையார் சம்பந்தமான விடயங்களை எங்கேயாவது பார்த்தாலோ ,படித்தாலோ அதை அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பினால் அதை ஆராய்ந்து அனைவருக்கும் இச்செய்தியை கொண்டு செல்ல உதவுவோம்.

அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ் அப் எண்: 7200 50 7629

அதே போல் அகமுடையார் சமுதாய தகவல்கள் ,நிகழ்வுகள், அகமுடையார் திருவிழாக்கள், அகமுடையார் தலைவர்கள் , சமுதாய பெரியோர்கள் போன்ற அகமுடையார் சம்பந்தமான எந்தவிதமான தகவல்களையும் அகமுடையார் ஒற்றுமை தளத்துடன் பகிர்ந்து கொள்ள அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண்: 072005 07629

இச்செய்தியை உங்களுக்கு தெரிந்த பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குருப்களில் பகிர்ந்துகொள்ளவும்.நன்றி!

அகமுடையார் சமுதாய செய்திகள், வரலாற்று பதிவுகளை விரைந்து உங்கள் மொபலில் பெற்றிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் .

https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community

லிங்க் ஒர்க் ஆகவில்லை என்றால் உங்கள் மொபலில் கூகிள் பிளே ஸ்டோர் சென்று agamudayarotrumai என்று ஆங்கிலத்தில் இடைவெளி இல்லாமல் டைப் செய்து அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்!

நமது அப்ளிகேசன் பற்றிய தகவல்களை உங்களுக்கு தெரிந்த பேஸ்புக்,வாட்ஸ்அப் ,டெலிகிராம் குருப்களில் மறக்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்!

மணலாறு | தென்னமரவுஅடி | திருகோணமலை | கொக்கிளாய் | மூல்லைத்தீவு | #sltamilvlogs


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

2 Comments
  1. எங்கள் பகுதியில் உள்ள குப்பத்தேவன் என்ற ஊரில் உள்ள குளம் இங்கு அகமுடையார் மட்டுமே உள்ளனர்

  2. எங்கள் ஊரை சேர்ந்த அகமுடையார் பெரியவர்கள் பலர் உயரமாக இருப்பார்கள் மூர்க்க குணமும் அதிகம்

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?