இராசவாசல் படிக்கார (அகம்படியர்) சில்வா விஜயசிங்க முதலியார் – இலங்கையில் இன்றும…

Spread the love

First
இராசவாசல் படிக்கார (அகம்படியர்) சில்வா விஜயசிங்க முதலியார் – இலங்கையில் இன்றும் தொடரும் பெயர்கள்
—————————————————
அகம்படியர் என்ற இன்றைய அகமுடையார் சாதியில்
ராசவாசல் எனும் பிரிவு இருந்ததை உங்களில் நிறைய பேர் படித்திருப்பீர்கள். இன்றும் சிங்களவரில் இதே பெயரால் அழைக்கப்படுபவர்கள் இருக்கிறார்கள் என்பது நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளில் ஒன்றாகும்.

சிங்களத்தில் ராசவாசல் என்பது அரண்மனையை குறிக்கும் வார்த்தைகளில் ஒன்றாக உள்ளது.
இலங்கையில் இராசவாசல் படிக்கார என்போர் காணப்படுகின்றனர். இவர்கள் கெவபண்ணே( ஹெவபண்ணே அல்லது ஹெவபண்ணா) எனும் சத்திரிய சாதி பிரிவிரனாக அறியப்படுகின்றனர்.

இந்த hevapanne/hewapanne சாதியினர் தமிழ்நாட்டில் இருந்து இலங்கை சென்ற அகம்படிய சாதி ஆண்களுக்கும், இலங்கையில் இருந்த சாலியர் ( நெசவாளர்) மற்றும் பிராமண பெண்களுக்கும் பிறந்தவர்கள் ஆவர்.

இதில் இந்த தமிழ் அகம்படிய தந்தைக்கும் , இலங்கை சாலியர் ( நெசவாளர் அல்லது வணிகர்) சாதி பெண்களுக்கும் பிறந்தவர்கள் hevapanne அல்லது hevapanne padikara என்ற பிரிவில் இலங்கையில் காணப்படுகிறார்கள்.

வைசிய இனத்தை சேர்ந்தவர்களான சாலிய பெண்களை ,அகம்படியர்கள் திருமணம் செய்ததன் மூலம் சாலகமா எனும் இலங்கை சாலியர் சாதியில் ஹெவபண்ணே எனும் சத்திரிய சாதி பிரிவு உருவாகியுள்ளது. வைசியர் சாதியினரை சத்திரிய வர்ணத்தில் மாற்றியவர்களாக அகம்படியர்கள் இருந்தார்கள்(வரும் காணொளியில் இது விரிவாக பேசப்படும்)

சரி இப்பதிவில் நாம் பார்க்க இருப்பது.

நாணயக்கார இராசவாசல் படிக்கார முதலியார் சில்வா விஜயசிங்கே எனும் சிங்கள பெயரை கொண்டு ,தமிழில் மொழிபெயர்க்கும் போது
நாணயமிக்கவராகிய இராசவாசல் படிக்கார (அகம்படியர்) சில்வா விஜயசிங்க முதலியார் என்று அறியப்படுபவர் ஆவார்.

இவரின் முழு பெயர்: ராசவாசல படிக்கார முதலியார் அப்புஹமிலஹே டான் ஆர்தூர் டி சில்வா விஜயசிங்கே ஶ்ரீவர்த்தனா

Rajawasala padikara Appuhamilage Don Arthur de Silva Wijesinghe Siriwardena

கிபி 10ம் நூற்றாண்டு அல்லது அதற்கு முன்னருமான
இலக்கிய தரவுகளை மையமாக வைத்து “மத்திய காலத்தில் இலங்கை” என்ற நூலில் இலங்கையின் புகழ்பெற்ற வரலாற்றிஞர் ஆரியபாலா hevapanne padikara பிரிவில் அகம்படியர் பிரிவுகளை குறிப்பிடுவதை பார்த்தோம்.

இப்பதிவில் 1890 மற்றும் 1900 ஆரம்பத்தில் வாழ்ந்த இராசவாசல் படிக்கார முதலியார் சில்வா விஜயசிங்கே அவர்களின் பெயரை கவனிக்கும் போது

இராசவாசல் படிக்கார (அகம்படியர்) என்ற பெயரை தமிழ் அகம்படியர்கள் முன்னோர்களுக்கு பிறந்து இன்று சிங்களராகவே மாறிவிட்ட தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.

இவரை பற்றி மேலதிக செய்திகள்
செல்வந்தராக இருந்த இவர் மகாண கவர்னர் பதவியையும் வகித்தவர். இலங்கையின் மாகாண தலைவர்களுக்கான முதல் பிரசிடென்டாகவும் விளங்கியவர்

இலங்கையில் மிக்கச்சிலருக்கு மட்டும் அளிக்கப்படும் லசுக்காரின் (Lascarins) மேளம் ,இராஜ அடையாளங்கள், போர் கருவிகளை தாங்கிய படை வீரர்கள் கொண்ட சிறப்பு பாதுகாப்பு இவருக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் மேற்குபகுதியான களுத்துறை மாவட்டத்தில் உள்ள பழத்தோட்ட எனும் பகுதியில் கி.பி 1896ல் Richmond Castle என்ற பெயரில் 42 ஏக்கரில் அரண்மனை ஒன்றை அமைத்தார். இவரது மறைவுக்கு பின் இது சிறுவர்கள் தங்கும் விடுதியாகவும் பொது சமூக பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதை பற்றி வரும் நாட்களில் விரிவாக விளக்கி அகமுடையார் ஒற்றுமை யூடிப் சேனலில் காணொளி வெளியிடப்படும்.
இலங்கையில் அகம்படியர்கள் பற்றி தரவுகள் கிடைக்கின்றன. கடுமையான தேடல் செய்தும், நாளின் முழுநேரமும் இதனையே தேடி ஆராய்ந்து வெளியிட்டு வருகின்றோம். இதற்கு அகமுடையார் சமுதாய மக்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.

அகமுடையார் ஒற்றுமைக்காக
மு.சக்திகணேஷ்
(மதுரை-திருமங்கலத்திலிருந்து)
வெப்சைட்: agamudayarotrumai.com

இன்னும் நிறைய ஆதாரங்கள் உள்ளன. வரும் காணொளியில் அவற்றையெல்லாம் இணைப்போம்.

குறிப்பு:
சிங்கள தாய்க்கு பிறந்தாலும், நெடுங்காலம் தமிழ்நாட்டின் தொடர்பை விட்டு விலகியும்,
சிங்களர்களின் ஆக்கிரமிப்பில் தொடர்ந்து இருந்ததாலும் இன்று
முழுமையாக சிங்களராகவே மாறிவிட்டனர். இந்த தகவல்கள் மூலம் அகம்படியர்கள் எப்படியெல்லாம் இருந்தார்கள் என்பதை இலங்கையில் இருக்கும் தரவுகள் கொண்டு ஒப்பிடுகிறோமே தவிர மற்றபடி இலங்கையில் உள்ள சக தமிழர்களை தாண்டி இவர்களை நாம் சொந்தம் கொண்டாடவோ ,ஏற்றுக்கொள்ளவோ போவதில்லை.

Richmond Castle அரண்மனை புகைப்படங்கள்
https://www.localguidesconnect.com/t5/General-Discussion/Exploring-An-118-Year-Old-Edwardian-Mansion-In-Sri-Lanka/td-p/1124576

வீடியோ

பட இணைப்புகள்

1 – படிக்கார ஹெவப்பணே Society In Mediaeval Ceylon Pageno 162 author M B Ariyapala
2 – இராசவாசல் படிக்கார முதலியார் சில்வா விஜயசிங்கே தனது லசுக்காரின் படை வீரர்களுடன்
3- சிலோன் கவர்னர் சர் ஜான் ஆண்டர்சன், படிக்கார முதலியார் மற்றும் அவரது துணைவியாருடன் எஸ்டேட்டை சுற்றிப்பார்க்க முதலியாரின் பாதுகாப்பு வீரர்களுடன் செல்லும் போது
4- A brief record concerning first elected president of the association of ceylon chiefs The padikara Mudaliyar N.D.A Silva Wijesinghe Siriwardene என்ற நூலில் பெயர் அடையாளமிட்டிருந்த புகைப்படம்
5- மேற்குறிப்பிட்ட புத்தக அட்டை







இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo