First
Amrit Mahotsav
எனும்
அமிர்தப் பெருவிழா அக்கப்போர்கள் !
*******************************************
இம்முறை எனது மதுரையில் !
கண்காட்சி அறிவிப்பை கண்டதும் அருமை அண்ணன் தமிழ்நாடு அகமுடையார் மக்கள் மகாசபை யின் கௌரவ ஆலோசகர்,Ex எல்லை பாதுகாப்புப் படைவீரர் திரு Raman R அவர்களையும் அழைத்துக் கொண்டு இன்று 4/2/23 கண்காட்சி நடைபெறும் உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு சென்றோம் !
நாம் எதிர்பார்த்தைப் போலவே,
மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தனித்தனி பதாகை ஒதுக்கப்பட்டிருக்க,
ஒரே பதாகையில் பாதி இடம் ஒதுக்கி, மருதரசர்களின் எந்த போராட்ட வரலாற்றையும் குறிப்பிடப்படாமல்,
ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்திற்காக ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டவர்கள் என எம் மன்னவர்கள் வழக்கம் போல் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தனர் !
தொடர்ச்சியாக காழ்ப்புணர்ச்சியோடு மருதரசர்கள் புறக்கணிப்படுகிறார்கள்,
இதன் பின்னனியின் உள்ள சாதி வன்மத்தை நாங்கள் அறிவோம் !
எங்களை போராட தூண்டாதீர்கள் என கண்காட்சி அதிகாரியோடு நாம் வாக்குவாதத்தில் ஈடுபட,
ஊழியர் ஒருவர்,
மருதரசர்கள் ஏற்படுத்திய தென்னிந்திய தீபகற்ப கூட்டமைப்பு உள்பட பல்வேறு முக்கிய குறிப்புகள் உள்ள தனிப்பதாகையை எடுத்துவர,
அதை நாங்கள் இருக்கும் போதே பொருத்துங்கள் எனக் கூறி பொருத்தி,கண்காட்சி அலுவலரோடு படம் எடுத்துக் கொண்டு வெளியேறினோம்…
கண்காட்சி வரும் 11/2/23 வரை நடைபெறுகிறது மதுரை வாழ் உறவுகள் புகைப்பட கண்காட்சியையும் அதில் உள்ள மருதரசர்களின் திருவுருவத்தையும், சுருக்கமாக சொல்லப்பட்டிருக்கும் வரலாற்றையும் கண்டு வணங்கி வாருங்கள்…
இது போன்று படமெடுத்து வலைதளங்களில் பகிறுங்கள்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்