First
பிள்ளை மஹாவலி வாணராஜன் கல்வெட்டு-உசிலம்பட்டி -ஆனையூர் கண்மாய் மடை
—————————————————————
உசிலம்பட்டி-மதுரை நான்குவழிச்சாலையில் உசிலம்பட்டிக்கு 5 கி.மீ முன்பாக அமைந்துள்ளது
ஆனையூர்(கட்டக்கருப்பன் பட்டி) கிராமம்.இவ்வூரை ஒருகாலத்தில் வாணாதிராய மன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள்.
இவ்வூர் கண்மாய் மடையில் உள்ள நிலைக்கல்லில் கீழ்கண்ட கல்வெட்டு சாசனம் காணப்படுகிறது!
கல்வெட்டு வாசகம்( முதல் படத்தில் கல்வெட்டுக் கல் கொடுக்கப்பட்டுள்ளது படிக்க முடிந்தவர்கள் கல்வெட்டினை படித்துக்கொள்ளலாம் இல்லை என்றால் இக்கல்வெட்டு குறித்து தொல்லியல்துறை வெளியிட்டுள்ள செய்தியை 3 மற்றும் 4 வது புகைப்படங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்)
கல்வெட்டு கண்ட வரிகள்
————————–
ஶ்ரீ பிள்ளை ம
ஹாவலி வாணரா
ஜன் அகம்படி முதலி
களிற் பெரியான்
உய்யவந்தானான
விக்ரம சிங்கதேவ
ன் செய்த கல் முன்
பு இதன் மேல் ஆவ
தறியும் பெருமா
கல்வெட்டு விளக்கம்;
குறிப்பிட்ட இக்கல்வெட்டில் பெரிய உய்யவந்தானான விக்கிரமசிங்கதேவன் எனும் பெயருடைய பிள்ளை மாவெலி வாணாதிராயர் அகம்படி முதலி (அகம்படி இனத்தில் முதன்மையானவன் ) ஆனையூரில் ஏரி ஒன்றை வெட்டியதோடு அந்த ஏரியில் ஒர் மடையையும் ஏற்படுத்த ஆணையிட்டதன் பெயரில் ஆவதறியும் பெருமாள் என்பவன் இப்பணியைச் செய்து முடித்துள்ளான்.
கூடுதல் செய்தி
உசிலம்பட்டி,தேனி,நாகமலை புதுக்கோட்டை, பேரையூர்,திருமங்கலம் தாலுகா பகுதியில் மிகப்பெரும்பான்மையாக வாழும் அகமுடையார்கள் பலர் இவ்வாணாதிராயரின் வழிவந்தவர்களே!
விரைவில் இவ்வூரையும், இவ்வூரை ஆண்ட வாணாதிராயர்கள் பற்றியும் முழு செய்தி வெளியிடப்படும்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்