First
குன்றக்குடி ஆதீன குருமுதல்வர்களின்(ஆதின கர்த்தர்களின்) நலனுக்காக செம்பொன்மாரி|(ஆறாவயல்) கிராமத்தை வழங்கிய மருதுபாண்டியர்களும் ஆதீனத்தை காத்த அகமுடையார்களும்
——————————————————————————————————————————–
மருதுபாண்டியர் குன்றக்குடி கோவிலுக்கு அளித்துள்ள தானங்கள் பற்றிய தகவல்களை பலர் அறிந்திருக்கிறோம் ஆனால் ஆதீன குருமுதல்வர்களாக (ஆதீன கர்த்தர்களின்) நலனுக்காக(அவர்கள் நல்வாழ்விற்காக) மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் அளித்த கொடையை நம்மில் வெகு சிலரே அறிந்திருக்கக்கூடும்!
ஆம் மாமன்னர் மருதுபாண்டியரின் ஆட்சிகாலத்தில் (1780-1801) குன்றக்குடி கோவில் பல்வேறு வகையில் கொடைச்சிறப்புகளைப் பெற்றது ,இதை பலர் அறிந்திருக்கிறோம் அதைப் போலவே ஆதின நிர்வாகத்திற்கு வருபவர்கள்(ஆதினகர்த்தர் எனும் ஆதீனங்களின்) தனிப்பட்ட நலன்களிலும் மருதுபாண்டிய மன்னர்கள் அக்கறை செழத்தியுள்ளனர்.அவர்கள் நிதிநிர்வாகம் மேம்பட அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன் வருவாய்க்கு செம்பொன்மாரி எனும் கிராமத்தை தானமாக அளித்துள்ளனர்.
பார்க்க படம் 1 : ஆதாரம்: குன்றக்குடி அடிகளார் நூல் வரிசை-தொகுதி 16- பக்கங்கள் 150-153
இவ்வாறு மருதுபாண்டியர்களின் தனிப்பட்ட அக்கறையைப் பெற்றிருந்த குன்றக்குடி கோவில் நிர்வாகத்திற்கு மருதுபாண்டியர்களின் காலத்திற்கு 100 ஆண்டுகளுக்குப் பின் 1900வாக்கில் சோதனையான காலம் வந்தது.
நிர்வாகத்தில் இருந்தவர்கள் செய்த செலவுகள் காரணமாக எழுந்த கடன் பிரச்சனை காரணமாக கடன்கொடுத்தவர் சம்பந்தம் இல்லாத ஒருவரை குன்றக்குடிஆதீனமாக முற்பட்ட போது அதனை தடுத்து நிறுத்திய சமுதாயப் பெருமக்களில் வாராப்பூர் சின்னக்கண்ணு சேர்வை,பழனியான்டி சேர்வை உள்ளிட்ட அகமுடையார்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்களுள் ஆதினத்தைக் காக்க பழனியான்டி சேர்வை செய்த முயற்சிகள் சிறப்பானவை நினைவுகூரத்தக்கவை.
பார்க்க : படங்கள் 2,3,4,5,6,7,8
குறிப்பிட்ட இந்த செம்பொன்மாரி(செம்பொன்மாறி) இன்று காரைக்குடியிலிருந்து 10 கி.மீட்டர் தொலைவில் தேவக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது.இவ்வூர் கீழ்செம்பொன்மாரி,மேலச் செம்பொன்மாரி என்று இருபிரிவாக உள்ளது.ஆறாத வயல்கள் அமைந்துள்ளதால் இவ்வூரை ஆறாவயல் என்றும் மக்கள் அழைத்து வருகின்றனர்.
குறிப்பு:
மருதுபாண்டியரின் குன்றக்குடி கோவிலுக்கு அளித்துள்ள கொடைகள் விரிவானவை அவை பற்றிய முழுப்பதிவு அகமுடையார் ஒற்றுமை தளத்தின் இன்று பிற்பகல் வெளியாகும்!
ஆதினத்தைக் காக்க பிற சமுதாய மக்களும்(பிராமணர்,செட்டியார்..) தாய்மார்கள் உள்ளிட்ட பலரையும் நன்றியோடு இத்தருணத்தில் நினைவுகூருகிறோம்!
ஆதாரம்-நூல்கள்
1-குன்றக்குடி அடிகளார் நூல் வரிசை-தொகுதி 16- பக்கங்கள் 150-153
2-மருதுபாண்டிய மன்னர்கள்- பக்கம் 239 ஆசிரியர்: மீ.மனோகரன்
kundarkudi kovil temple maruthupandiar contributions donations and issue solved by agamudayar source book kundrakudi adigalar adikalar nool varisai
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்