அகமுடையார் சமுதாயத்தை காப்பாற்றும் வடமாவட்ட இளைய தலைமுறையினர்
——————-
திருவண்ணாமலை மாவட்டம் தென்மாத்தூர் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்ற மாமன்னர் மருது பாண்டியர்கள் குருபூஜை விழாவின் வீடியோ.
இந்த நிகழ்ச்சியை மருதுபாண்டியருக்கு நல்ல படையல், மக்களுக்கு அன்னதானம், குழந்தைகளுக்கு நோட்டு மற்றும் எழுதுபொருட்கள், வானவேடிக்கை, மேளதாளம் என சிறந்த முறையில் ஏற்பாடு செய்த தென்மாத்தூர் ஊரை சேர்ந்த தம்பி மருது ராக்கி உள்ளிட்ட அகமுடையார் உறவுகளுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்!
தென்மாவட்டத்திலும் விழாக்களை சிறப்பாக கொண்டாடுகிறார்கள் ஆனால்
தென் மாவட்டத்தில் சில இடங்களில் அகமுடையார் சமுதாய விழாக்களில் தாங்கள் அரசியலில் தனிப்பட்ட பலன் பெற வேண்டும் என்பதற்காகவும், பணம் வசூல் செய்ய வேண்டும் என்பதற்காகவும் மாற்று சமுதாய தலைவர்கள் படத்தை போட்டு அதன் வழியாக அகமுடையார் சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அகமுடையார் சமுதாயத்தை கலப்பினமாக்கி கடைசியில் அகமுடையார் சமுதாயத்தையே அழிக்கும் நிலையை ஏற்படுத்தி வருகின்றனர். தென்மாவட்டத்தில் இருக்கும் அகமுடையார்களாகிய எங்களில் பலர் இந்த கொடுமையை கண்டு கோபமும் மிகுந்த மனவேதனையும் அடைந்து வருகின்றோம்.
இந்நிலையில்…
வடதமிழகத்தில்
மருது ராக்கி போன்ற
எளிய பிண்ணணி கொண்ட இளைஞர்கள் பலர் அகமுடையார் சமுதாய தலைவர் படத்தை மட்டும் கொண்டு எவ்வளவு உணர்வாக சமுதாய உணர்வு மேலோங்க எத்தகைய முயற்சிகளை செய்கிறார்கள் .அவர்களுக்கு அகமுடையார் ஒற்றுமை சார்பில் கோடான கோடி நன்றியும், வாழ்த்துக்களும்.
இவர்களை போன்ற உறவுகளின் கைகளில் குறிப்பாக இளைஞர்களிடம் தான் அகமுடையார் சமுதாயத்தின் வருங்காலம் அடங்கி இருக்கிறது என்று சொன்னால் அது மிகை இல்லை.
ஆம் வடதமிழகத்தில் மிகச்சிறப்பாக மாமன்னர்களின் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா மிகச்சிறப்பாக காணப்படுவது எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. எங்களைப் போன்றவர்களின் கடைசி நம்பிக்கை உங்களை போன்றவர்கள் தான்!
வாழ்க தம்பி உங்கள் பணி,உங்களை போன்ற இளைஞர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு குக்கிராமத்திலும் வரவேண்டும்! வந்து கலப்பின ஆபத்தில் இருந்து அகமுடையார் சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும்!
குறிப்பு-தென் மாவட்ட இளைஞர்கள் மாற்று சமுதாயத் தலைவர்கள் படங்கள் பயன்படுத்துவதை கைவிட்டு அகமுடையார் சமூகத்தலைவர்கள் படங்களை மட்டும் பயன்படுத்தினால் அவர்களும் அகமுடையார் சமுதாயத்தை காப்பாற்ற முடியும். பார்ப்போம்!
thenmathur thenmattur thiruvanamalai maruthu pandiyar jeyanthi 2025



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
