எம்மைப் பற்றி ஓர் சுய அறிமுகம் —————————————- அகமுடையா…

Spread the love
0
(0)

First
எம்மைப் பற்றி ஓர் சுய அறிமுகம்
—————————————-
அகமுடையார் ஒற்றுமை எனும் இணையதளத்தினை ஏற்படுத்தி நிர்வகித்து வருகின்ற என்னை தனிப்பட்ட முறையிலும் உங்களில் சிலர் அறிந்திருக்கலாம் எனினும் என் பின்புலம் ,பூர்வீகம் என்ன என்பதை அகமுடையார் உறவுகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இச்சிறு அறிமுகப் பதிவு

எனது தந்தையின் தந்தை திரு.க.மாயன் சேர்வை( அகமுடையார்) – கமுதி வல்லந்தை கிராமத்தைப் பூர்வீகமாகவும், எனது தாயின் தந்தை வே.இராசு சேர்வை(அகமுடையார்) திருமங்கலம் நகரை பூர்வீகமாகக் கொண்டவர்.

எனது தந்தை வழிப்பாட்டனார் திரு.க.மாயன் சேர்வை( அகமுடையார்) எளிய பின்புலத்தைக் கொண்டவர் ஏற்கனவே சொன்னபடி கமுதி வல்லந்தை கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஆனால் பல காலம் முன்பு என் தந்தையாரின் காலத்திலேயே திருமங்கலத்தில் தங்கிவிட்டவர். எனினும் தனது பூர்விக ஊரில் உள்ள தெய்வத்தின் பெயரான முனியான்டி சுவாமியின் பெயரையே எனது தந்தைக்கு பெயராக வழங்கினார். குறிப்பிட்ட ஊரில் எங்களுக்கு உறவினர்களும் பரம்பரை நிலமும் உண்டு!

எமது தாய்வழிப் பாட்டனார் வே.இராசு சேர்வை(அகமுடையார்) ,திருமங்கலம் நகரில் பல கோவில்கள்(பெருமாள் கோவில்,முனீஸ்வரன் கோவில்,செந்திலாண்டவர் ஆசிரமம்) அமைவதற்கு காரணமாக விளங்கியவர் ,திருமங்கலம் நகரின் ஆன்மீகத் தந்தை என்றும் அறியப்பட்டவர் (இவரைப் பற்றி நாளிதழில் வெளிவந்த செய்தியை கீழே உள்ள படத்தில் படிக்கலாம் )

மேலும் இவரது இலக்கிய,ஆன்மீக பாடல்,சொற்பொழிவுகள் போன்றவற்றைப் பாராட்டி காரைக்குடி கம்பன் கழகத்தாலும் ,ஆதினத்தாலும் கம்பரன்பர் என்ற விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டவர்.

இவ்வாறான பின்புலத்தில் திருமங்கலத்தின் பிரபல அகமுடையார் குடும்பங்களில் ஒன்றில் மு.சக்திகணேஷ் ஆகிய நான் திரு.முனியான்டி சேர்வை(அகமுடையார்) -பழனியம்மாள் தம்பதியருக்கு மதுரையை அடுத்த திருமங்கலத்தில் கடைசி மகனாகப் பிறந்தேன். எனக்கு
அகமுடையார் சாதியில் சேர்வைப் பட்டமும் பிரிவில் இராஜகுல அகமுடையார் என்றும் வழங்கப்படும் ( அகமுடையார்களில் அனைவருமே அரசமரபு என்பதையும் நினைவில் கொள்க)
படிக்க

எனது தந்தை வழிப் பாட்டனார் வழியில் வல்லந்தை,வீர சோழன்,இராமநாதபுரம் ,மண்டபம் கேம்ப் ,மண்டபம், சிவகங்கை,சின்னமனூர் போன்றவற்றில் எமக்கு உறவுகள் உண்டு!
எனது தாய்வழிப் பாட்டனார் வழியில் காரைக்குடி,மானாமதுரை ,திருச்சி,மதுரை ,சோழவந்தான்,வாடிப்பட்டி பகுதிகளில் உறவினர்கள் உண்டு .
எனது சகோதரிகளின் திருமண உறவுகள் வழியாக விருதுநகர்,வாலாந்தரவை,வடுவூர்,உச்சிப்புளி ,சிவகங்கை,மானாமதுரை,தஞ்சாக்கூர் போன்றவற்றில் உறவினர்கள் உண்டு!

கீழே சில படங்களை உறவுகளின் பார்வைக்காக வைக்கின்றோம்! படமும் அதன் விளக்கங்களும்

புகைப்படம் 1 -எனது தந்தை வழிப் பாட்டனார் மற்றும் பாட்டி (அப்பத்தா) க.மாயன் சேர்வை-வெள்ளையம்மாள்-1990களின் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட படம்
புகைப்படம் 2 – -எனது தாய் வழிப்பாட்டனார் கம்பரன்பர் வே.ராசு சேர்வை- மற்றும் பாட்டி( அம்மாச்சி ) மீனாட்சி அம்மாள் அவர்களுடன்நானும் சேர்ந்து 2000 வருடத்தின் ஆரம்பத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம்
புகைப்படம்3–பாட்டனார் கம்பரன்பர் வே.ராசு சேர்வை அவர்களுக்கு கம்பரன்பர் விருது 1981ல் வழங்கப்பட்ட போது நிகழ்வையொட்டி வெளிவந்த நாளிதழ் செய்தி
புகைப்படம் 4 -ஆதினம் அவர்கள் பாட்டனாரை பாராட்டிய போது
புகைப்படம் 5 -திருமங்கலம் வரலாறு பற்றி பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியான போது எம் பட்டனார் கம்பரன்பர் வே.ராசு சேர்வை அவர்கள் பற்றி வெளியான தகவல்கள்
புகைப்படம் 6- பாட்டனார் கம்பரன்பர் வே.ராசு சேர்வை அவர்களின் நினைவஞ்சலி விளம்பரம்
புகைப்படம் 7,8- எமது தாய் தந்தையர் திருமண அழைப்பிதழ்
புகைப்படம் 9 – எமது தாய் தந்தையர் திருமண விழாவை தலைமேயேற்று நடத்தி உரையாற்றிய திருமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமரர் மு.சி.ஆ.ரெத்தினசாமித் தேவர் (அகமுடையார்) – இவரது தாயாரும் எனது தாய்வழிப் பாட்டி( அம்மாச்சி ) உறவினர்கள் ( ஒன்றுவிட்ட சகோதரிகள்) என்பது குறிப்பிடத்தக்கது. திருமங்கலம் மு.சி.ஆ.ரெத்தினசாமித் தேவர் அவர்களது உறவினர் தான் இராமநாதபுரம் முன்னாள் பெண் எம்.பி., பவானி ராஜேந்திரன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
புகைப்படம் 10-எனது தந்தை திரு.முனியான்டி சேர்வை அவர்களது இளவயது 18-20 வயதில்) மற்றும் சில வருடங்கள் முன் எடுத்த புகைப்படம்
புகைப்படம் 11 -எமது தந்தையார் மறைவின் போது (சென்ற பிப் 2017 ) அன்று பிரேம் செய்து வைத்தபடம்
புகைப்படம் 12- படத்தில் பெயர் தெரிவதற்காக மாலைகளை எடுத்த பின்புலத்தில்
புகைப்படம் 13- எனது தந்தை திரு.முனியான்டி சேர்வை அவர்களுடன் நான்(மு.சக்தி கணேஷ்) ஓர் நிகழ்வு ஒன்றில்(10 வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம்)
புகைப்படம் 14- எனது ஆதார் கார்டு ( ஆதார் எண்ணும் , பிறந்த தேதியும் பிரைவசிக்காக மறைக்கப்பட்டுள்ளது)
புகைப்படம் 15- எனது சாதிச் சான்றிதழ்இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?